06-22-2004, 05:02 PM
கருணா நுகேகொட வீட்டில் படைப்புலனாய்வு பிரிவின் பாதுகாப்பிலிருந்ததாக நிலாவினி பகிரங்கமாக தெரிவிப்பு!
ஜ மட்டக்களப்பு ஈழநாதம் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 22 யுூன் 2004, 9:14 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட கருணா கொழும்பில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ள நிலாவினி ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டதையடுத்து கொழும்புக்கு கருணாவுடன் தப்பிச் சென்றவர்களில் முன்னாள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளீர் படையணித் தளபதி நிலாவினி மற்றும் தீந்தமிழ், லாவண்யா, பிறேமினி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ளார்கள்.
கருணாவின் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறிச் சென்ற விபரங்கள் தொடர்பாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் தளபதி ரமணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இம்மாநாட்டில் நிலாவினி மற்றும் மூவரும் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நிலாவினி பதிலளிக்கும் போது தெரிவித்ததாவது:-
கருணாவுடன் கொழும்பில் நுகேகொட எனுமிடத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பில் ஒரு வீட்டில் இருந்து வந்தோம். எங்களுடன் கருணாவின் மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர்.
அடிக்கடி டக்ளஸ் தேவானந்தா நுகேகொட வீட்டுக்கு வந்து கருணாவை சந்தித்து போவார். அத்துடன் அவர்களுடன் தொலைபேசி தொடர்புகளும் இருந்து வந்தது. அவர்களது நடவடிக்கை செயற்பாடுகள் மூலம் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் திட்டம் காணக்கூடியதாக இருந்தது எனத் தெரிவித்த நிலாவினி மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு தப்பிச் செல்ல நேர்ந்த போது மட்டக்களப்பு மாவட்ட ஐக்கியத் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் வாகனம் மூலமே தப்பிச் சென்றோம். நாங்கள் நான்கு பேரும் பதினேழு ஆண்களுமாக மயிலவட்டவான் ஊடாக புலிபாஞ்சகல் பாலம் வரைச் சென்றோம். அங்கு கருணா அலிசாஹிர் மௌலானாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி வருமாறு சொன்னார்.
பின்னர் அலிசாஹிர் மௌலானாவும் ஒரு சிறிலங்கா பொலிஸ்காரரும் வந்து எங்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்றனர்.
கொழும்பு சென்ற நாங்கள் ஏப்ரல் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரை ஹில்டன் விடுதியில் தங்கவைக்கப்பட்டோம்.
பின்பு நுகேகொட எனுமிடத்தில் ஒரு வீட்டில் இராணுவப் புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டோம்.
ஒருநாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு என்னை இணையுமாறு கேட்டிருந்தார். ஆனால் கூடிய பாதுகாப்புப் போடப்பட்டிருந்ததால் தப்பிவர முடியவில்லை. பின்னர் எனது கையடக்கத் தொலைபேசியும் பறிக்கப்பட்டது.
எங்களை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கூறிய போது உங்களை இந்தியா அல்லது வேறு வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கருணா கூறியதாக தெரிவித்த நிலாவினி கருணா மூன்று மாதம் வெளிநாடு ஒன்றுக்கு சென்று தங்கியிருந்து விட்டு பின் வருவதாகவும் குறிப்பிடிருந்தார் என்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர் கருணாவின் போக்கு எங்களுக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. நாம் தனிமைப்படுத்தப்பட்டு எங்களை விட்டு செல்லும் ஏற்பாடு போலவே தோன்றியது.
கருணா எங்களை விட்டு விலகிய சந்தர்ப்பத்தை பார்த்து எனது அத்தான் முறையிலான உறவினர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி பின்னர் குருநாகல் வரைக்கும் வந்தோம். அங்கிருந்து செங்கலடிக்கு வந்து விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி இங்கு வந்துள்ளோம்.
எனத் தெரிவித்த நிலாவினி கருணா என்ற தனி மனிதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகமிழைத்ததை இப்போது உணர்ந்து கொண்டோம் என்றார்.
நன்றி புதினம்