06-21-2004, 08:12 AM
நன்றி அஜீவன் அண்ணா வடபகுதி மக்களுக்கு தங்கள் தமிழ் பற்றி கர்வம் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன்.
நான் கூற விழைந்தது என்னவென்றால் முரளி சாதனை செய்தபோது கூட தமிழன் என்றில்லாமல் எமது நாட்டவன் ஒருவனது சாதனைகள் என்று மகிழ்ந்தவன் நான்.இங்கு நான் அவரது தமிழைக் குறைகூறவில்லை அது அவர் விருப்பம்.ஆனால் அவரது பேட்டியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சிரிப்பை வரவழைத்தன.அதனாலேயே முரளி அரசியல்வாதி மாதிரி பேசுகிறார் என எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
இதுவரை காலமும் இலங்கையில் நடப்பது முரளிக்குத் தெரியாததல்ல இத்தனை திறமை இருந்தும் தமிழன் என்ற ஒரே காரணத்துக்குக்காக சர்வதேச அணியில் இடம்பிடிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டவர் என்று அவருக்கே தெரியும் அதெல்லாம் ஏன் இன்றே அவருக்குப் பின் ஒரு தமிழன் இலங்கை அணியில் இடம்பிடிக்கமுடியாமல் போனது ஏன் என்றும் விளங்கும்
அப்படியிருக்க இனமத பேதமில்லாமல் பல இனத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் அணியில் ஒன்றாக விளையாடும் போது நாட்டில் மட்டும் ஏன் வாழ முடியவில்லை என்று பாலர் வகுப்புப் பிள்ளை மாதிரி ஒரு கேள்வி கேட்டார்பாருங்கள் பழுத்த அரசியல்வாதிகள் தோற்றுவிடுவார்கள்..
சாதரண்மாக விளையாட்டு வீரனாக முரளியை வாழ்த்த என்னால் முடியும் ஆனால் உலகின் கண்களுக்குப் பூச்சுற்றுவதற்காக முரளிக்கு வழங்கப்பட்ட இப்பதவிக்காக அவரை வாழ்த்துமளவுக்கு நான் பக்குவடப்பவில்லை அதனையே சொன்னேன்.
தமிழ் தெரியாதவரையும் தமிழ் மொழி மீதும் இனம் மீதும் பற்று இருப்பின் தமிழனாக ஏற்றுக்கொள்ளலாம் என முன்பொருமுறை நான் சொன்னதை நினைவூட்ட விரும்புகிறேன்

\" \"