06-19-2004, 02:34 PM
kuruvikal Wrote:முரளி நீ
ஒரு கிரிக்கெட் வீரானாயே இரு
அதுவே உனக்குப் பெருமை...!
கூலியாகாதே
காலியாகிடுவாய்.....!
இந்த உண்மை
உனக்கே தெரியும்
இத்தனை சாதனை படைத்தும்
நீயோ ஒற்றுமைக்காய் குரல் கொடுக்கும்
சிங்களத் தீவின்
கிரிக்கெட் அணியில்
நீ வகித்த
பதவியென்ன சொல்.....????!
உண்மையில் ஒற்றுமையை
உனதணி உளமார நேசித்திருந்தால்
உனது காலத்திலாவது
வடக்கில் இருந்தோ கிழக்கில் இருந்தோ
ஒரு வீரனையாவது உள்வாங்க முயற்சித்திருக்கலாமே....????!
[size=15]மனச்சாட்சியைத் தொட்டுப்பார்
அது சொல்லும் வழி நடந்துகொள்
எமக்காய் நீ ஒன்றும்
இழக்கத் தேவையில்லை
உன் மனச்சாட்சிக்கு - நீ
மாறாய் இராதே....!அதுபோதும்
உன் கிரிக்கெட் புகழ்
ஸ்திரமாய் நிலைத்திட...!
இன்றேல்
கணணியுகத்திலும் லயத்தோடு
கறலோடு கூடி வாழும்
உனது உறவுகளுக்கு
உளமாற ஏதாவது செய்
வரவேற்போம்.....
சுட்ட மண்ணுக்கும் சுடாத மண்ணுக்கும்
முடிச்சுப் போடா எண்ணாதே
அது உன்
புகழ் அழித்துப் பழி சேர்க்கும்....!
நண்பனே,
நீ வைத்திருக்கும்
உன்
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையும்
பாடசாலை சான்றிதழ்களையும்
அடையாள அட்டையையும்
ஏன்
நாடு கடக்க உதவிய
கடவுச் சீட்டையும்
தூக்கி எறி
அதுவும்
சிங்களத் தீவு தந்ததுதானே?
இல்லை என்று சொன்னால்
நீயும் கள்ளத் தோணிதானே?
kuruvikal Wrote:மனச்சாட்சியைத் தொட்டுப்பார்
அது சொல்லும் வழி நடந்துகொள்
எமக்காய் நீ ஒன்றும்
இழக்கத் தேவையில்லை
உன் மனச்சாட்சிக்கு - நீ
மாறாய் இராதே....!
அதுபோதும்
உன் புகழ்
ஸ்திரமாய் நிலைத்திட...!
______________________________________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்

