06-19-2004, 10:46 AM
Eelavan Wrote:இதையே இவர் சர்வதேச விளையாட்டுகளில் விளையாடி வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் சரி உள்நாட்டு நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் சரி கூறியிருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்தியிருப்பேன்
அரசியல்வாதிக்கு தேவையான முகமூடி
இவரை கௌரவிக்கும் முகமாக நடைபெற்ற விழாவில் இவரைப் பேட்டி கண்ட சர்வதேச ஊடகங்களின் கேள்வியொன்றுக்கு பதில் அழிக்கும் போது, "தான் ஒரு தமிழன் என்றும், இலங்கையில் உள்ள பிற்போக்கு தனம் கொண்ட அரசியல்வாதிகளால் தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மோதலில் ஈடுபட்டு வரும் இரு இனங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என வேணடுகோள் விடுத்ததாக BBC செய்தியும், சிங்கள செய்திகளும் கூறின. சுவிஸ் செய்தியிலும் கேட்டேன்.
தாழ்ப்புணர்ச்சி காரணமாக சில ஊடகங்கள் இது பற்றிக் குறிப்பிடவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
"ஒருவன் வீழ்ந்து விட்டால் கை கொடுத்து தூக்கி விட யோசிக்காதே அவனைப் படுகுழிக்குள் தள்ளி விட வேண்டுமென்று நினைத்தால் ஆயிரம் முறை என்ன; கோடி முறை யோசி........." என்று எனது ஆசிரியர் சொன்னதை என்றும் பின்பற்றுகிறேன்.
எதிரியாக இருந்தாலும் நல்லதை வாழ்த்துவதற்கு மனசு இருக்க வேண்டும். அவன் யார் என்பதை விட, அவன் செயல் என்ன என்பதே முக்கியம்.
BBC tamil news (18.06.2004) also:-
http://www.bbc.co.uk/tamil/2115.ram
______________________________________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்

