06-18-2004, 12:10 PM
இளைஞன் Wrote:மிகவும் நல்ல தகவல் அஜீவன் அண்ணா...
TTN தொலைக்காட்சியிலும் இதனை ஒளிபரப்ப இருக்கிறார்களா? விளம்பரம் பார்த்தேன் ஆனால் சரியாகக் கவனிக்கவில்லை.
சில காட்சிகளைக் கவனித்தேன். மிரண்டு போய்விட்டேன். நடிப்பில் கூட சில காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் நம் கலைஞர்கள்.
தொடர்ந்தும் இதுபோன்ற முயற்சிகள் தொடரப்படவேண்டும்...
[b]ஆம் இக் குறும்படங்கள் TTN தொலைக் காட்சியிலும் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
நடிப்பில் மட்டுமல்ல ஒலி-ஒளி, ஒளிப்பதிவு, கதைத் தேர்வு, திரைப்பட உத்திகள், இயக்கம் என அனைத்து விதங்களிலும் இக் குறும்படங்கள் விஞ்சி நிற்கின்றன இளைஞன்.
IBC வாலோலியில் இயக்குனர் கா.ஞானதாஸ் உடனான பேட்டியொன்று ஒலிபரப்பாகியது.
TTNக்காக யாழ் நகரிலும் வன்னியிலும் பணிபுரியும் கலைஞர்கள், பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தேன்.
முழுமையான விபரங்களை கேட்டு அறியத் தருகிறேன்.
இத் தயாரிப்புக்கான பயிற்சிகளை, மட்டுமல்ல நிதியையும் scriptne t கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://scriptnet.org.uk/
AJeevan
______________________________________________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்

