06-18-2004, 06:42 AM
ஆண்பனையில் சீவினாலும் கள்ளுத்தான் - ஏன்
பெண்பனையில் சீவினாலும் கள்ளுத்தான்
வயிற்றுப்பாட்டுக்காய் வரோதயன் சீவினது
கால்வையிற்றுத்துக் கஞ்சிக்காய் கண்ணம்மா காய்ச்சினது
கள்ளுக்கும் பிலாவுக்கும் நல்ல உறவுதான்
இன்னும் கிழங்கோ சேத்தடிச்சா பரிவுதான்
இருந்தும் ஏறின மப்பு மப்புதான்
மொத்த பனையெல்லாம் கருப்பணி வாசம்
சித்தம் குழம்பி நிற்கிறேன்
நாளை கள்ளுக்கு என்ன செய்வேனென்று
இருந்தும் முகத்தில் எனக்கொரு புன்னகை
வளவின் ஓரத்தில்
வளர்ந்துவரும் ஓர் வடலி'
வடலி வளத்துக்
கள்ளுக்குடிக்கலாம்
கற்பனையில் கல்லெடுத்து
இருக்கிற முட்டியை
இறுக்கி அடிச்சு
ஒழுகிறது தன்ரை எண்டு தெரியாமல்
ஏந்திக்குடிக்கிறோம்
நானும் கந்தரும்
இருந்தும் எனக்கொரு புன்னகை
எனக்கு கள்ளடிச்சா மப்பு மட்டும்தான்
கந்தர் கல்லடிச்சா தட்டலும் சேர்ந்தே
மொழியில்லா அந்தத் தட்டலால் வந்த உளறல்
பெண்பனையில் சீவினாலும் கள்ளுத்தான்
வயிற்றுப்பாட்டுக்காய் வரோதயன் சீவினது
கால்வையிற்றுத்துக் கஞ்சிக்காய் கண்ணம்மா காய்ச்சினது
கள்ளுக்கும் பிலாவுக்கும் நல்ல உறவுதான்
இன்னும் கிழங்கோ சேத்தடிச்சா பரிவுதான்
இருந்தும் ஏறின மப்பு மப்புதான்
மொத்த பனையெல்லாம் கருப்பணி வாசம்
சித்தம் குழம்பி நிற்கிறேன்
நாளை கள்ளுக்கு என்ன செய்வேனென்று
இருந்தும் முகத்தில் எனக்கொரு புன்னகை
வளவின் ஓரத்தில்
வளர்ந்துவரும் ஓர் வடலி'
வடலி வளத்துக்
கள்ளுக்குடிக்கலாம்
கற்பனையில் கல்லெடுத்து
இருக்கிற முட்டியை
இறுக்கி அடிச்சு
ஒழுகிறது தன்ரை எண்டு தெரியாமல்
ஏந்திக்குடிக்கிறோம்
நானும் கந்தரும்
இருந்தும் எனக்கொரு புன்னகை
எனக்கு கள்ளடிச்சா மப்பு மட்டும்தான்
கந்தர் கல்லடிச்சா தட்டலும் சேர்ந்தே
மொழியில்லா அந்தத் தட்டலால் வந்த உளறல்

