![]() |
|
புன்னகைக்குள் ஒரு புலம்பல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புன்னகைக்குள் ஒரு புலம்பல் (/showthread.php?tid=7031) |
புன்னகைக்குள் ஒரு புல - Kanthar - 06-18-2004 <img src='http://www.heromaker.net/hobbies/film/bridgetoofar3.jpg' border='0' alt='user posted image'> <b>புன்னகைக்குள் ஒரு புலம்பல்</b> இஸ்ரேல் அனுப்பியது இரும்புதான் - ஏன் இந்தியா அனுப்பியதும் இரகசியம்தான் அண்டப்புளுகுக்காய்தான் அமெரிக்கா அனுப்பியது - இன்னும் டொலருக்காய்தான் ரஷ்சியாவும் அனுப்பியது சீனாவும் சிங்களமும் நல்ல உறவுதான் - இந்திய எதிர்ப்பு பாகிஸ்தானும் நல்ல பரிவுதான் இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை ! மொத்தத்தில் முழு உலகுமே சிங்களத்தின் சினேகம்- ஆக சித்தம் குழம்பிப்போய் நாம் நிற்கிறோம் முழு உலகுமே எமக்கு எதிரி இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை !! அயல் நாடு எமக்கு எதிரி: அயல் நாட்டின் எதிரியும் எமக்கு எதிரி அக்கம் பக்கம் நீக்கமற எங்கும் எமக்கு எதிரி நேற்றைய நண்பன் இன்று எதிரி இன்றைய நண்பன் நாளைய...................... இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை - மொழியில்லா அந்த புன்னகைக்குள் ஒரு புலம்பல் !!! - kavithan - 06-18-2004 ஆகா? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆகா? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கவிதன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 06-18-2004 அலம்பலுக்குள் ஒரு ஆலம்! (விசம்) இஸ்ரேல் அனுப்பியது இரும்புதான் - ஏன் இந்தியா அனுப்பியதும் இரகசியம்தான் அண்டப்புளுகுக்காய்தான் அமெரிக்கா அனுப்பியது - இன்னும் டொலருக்காய்தான் ரஷ்சியாவும் அனுப்பியது சீனாவும் சிங்களமும் நல்ல உறவுதான் - இந்திய எதிர்ப்பு பாகிஸ்தானும் நல்ல பரிவுதான் இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை ! மொத்தத்தில் முழு உலகுக்கும் சிங்களம் வால் ஆக சித்தம் குழம்பிப்போய் சிலர் நிற்கிறார் முழு இனத்துக்குமே எதிரியாய் இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை !! அயல் நாடு எமக்கு எதிரி: அயல் நாட்டின் எதிரியும் எமக்கு எதிரி அக்கம் பக்கம் நீக்கமற எங்கும் எமக்கு எதிரி நேற்றைய நண்பன் இன்று எதிரி இன்றைய நண்பன் நாளைய...................... இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை - மொழியில்லா அந்த புன்னகைக்குள் ஒரு புலம்பல்- என்பது அலம்பலின் ஆலம்! காய்க்கும் மரத்துக்கு கல்லெறி வருமென்ற பொய்யா மொழி நிசமானதில்.. பொத்துக்கொண்டு வரும் புன்னகை அது. - vasisutha - 06-18-2004 Super sOliYan - vallai - 06-18-2004 ஆண்பனையில் சீவினாலும் கள்ளுத்தான் - ஏன் பெண்பனையில் சீவினாலும் கள்ளுத்தான் வயிற்றுப்பாட்டுக்காய் வரோதயன் சீவினது கால்வையிற்றுத்துக் கஞ்சிக்காய் கண்ணம்மா காய்ச்சினது கள்ளுக்கும் பிலாவுக்கும் நல்ல உறவுதான் இன்னும் கிழங்கோ சேத்தடிச்சா பரிவுதான் இருந்தும் ஏறின மப்பு மப்புதான் மொத்த பனையெல்லாம் கருப்பணி வாசம் சித்தம் குழம்பி நிற்கிறேன் நாளை கள்ளுக்கு என்ன செய்வேனென்று இருந்தும் முகத்தில் எனக்கொரு புன்னகை வளவின் ஓரத்தில் வளர்ந்துவரும் ஓர் வடலி' வடலி வளத்துக் கள்ளுக்குடிக்கலாம் கற்பனையில் கல்லெடுத்து இருக்கிற முட்டியை இறுக்கி அடிச்சு ஒழுகிறது தன்ரை எண்டு தெரியாமல் ஏந்திக்குடிக்கிறோம் நானும் கந்தரும் இருந்தும் எனக்கொரு புன்னகை எனக்கு கள்ளடிச்சா மப்பு மட்டும்தான் கந்தர் கல்லடிச்சா தட்டலும் சேர்ந்தே மொழியில்லா அந்தத் தட்டலால் வந்த உளறல் - vasisutha - 06-18-2004 அடக்கடவுளே கவிதைக்குள்ளேயும் கள்ளா? - kuruvikal - 06-18-2004 உவர் கந்தருக்கு கிறுக்கிட்டுது...உலகத்தில எத்தினை நாடுகள் மொத்தம்....உங்க இருக்கிறது எல்லாம் பேரினவாத....பிராந்திய மேலாதிக்கவாத..ஏகாதபத்திய.... அரச இராணுவ பயங்கரவாத...நிறவெறி நாடுகள்.....உவைதான் வருமானத்துக்கும்...தங்கள் ஆதிக்க கொள்கைகளுக்காகவும் ஆயுத சந்தை விரிச்சு.... உலகம் முழுவதும் அமைதியின்மையைத் தோற்றிவித்து... அங்கெல்லாம் தாங்கள் ஊடுருவல் செய்து.....இராணுவ வியாபார அரசியல் நடத்தும் நாடுகள்....! இவற்றைவிட உலகில் உண்மையான அமைதி... மனித விடுதலை.. அவனுக்கான சுதந்திர வாழ்வு... என்று பலவற்றை எல்லோருக்கும் அங்கீகரிக்கும் பல நாடுகளும் இன்னும் உலகில் இருக்கு.....எண்டதையும் மறந்திடாதேங்கோ......! அதுமட்டுமல்ல....உவரின் கூற்றுப்படி உலகமே எதிரியானால்.. எப்படி வேங்கைகள் மட்டும் வீறு மேல் வீறு கொண்டு மேலும் மேலும் சீறிப்பாய்ந்து எதிரியை சின்னபின்னமாக்கின....அதுதான் புலிவீரனின்.... ஈழத்து அன்னையவள் கருவறையின் மகத்துவம்... அறிந்து கொள்ளும் கந்தரே....உண்மை மறந்திடாதேயும்.....மறைத்திடாதேயும்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-18-2004 வல்லை அண்ணா ரொம்ப கஸ்ட படுறீங்கள் இந்த கள்ளால இதை பார்த்து மகிழுங்கோ. - Kanthar - 06-19-2004 kuruvikal Wrote:உவர் கந்தருக்கு கிறுக்கிட்டுது...உலகத்தில எத்தினை நாடுகள் மொத்தம்....உங்க இருக்கிறது எல்லாம் பேரினவாத....பிராந்திய மேலாதிக்கவாத..ஏகாதபத்திய.... அரச இராணுவ பயங்கரவாத...நிறவெறி நாடுகள்.....உவைதான் வருமானத்துக்கும்...தங்கள் ஆதிக்க கொள்கைகளுக்காகவும் ஆயுத சந்தை விரிச்சு.... உலகம் முழுவதும் அமைதியின்மையைத் தோற்றிவித்து... அங்கெல்லாம் தாங்கள் ஊடுருவல் செய்து.....இராணுவ வியாபார அரசியல் நடத்தும் நாடுகள்....! வேண்டாம் குருவி சிறுபிள்ளைத்தனமான விவாதங்கள் Kanthar Wrote:....... - Eelavan - 06-19-2004 கந்தர் உலகமே எமக்கு எதிரி என்று சொல்வது நகைப்புக்கிடமாக உள்ளது அப்படி முழு உலகமும் தனது பார்வையை மாற்றிக்கொள்ளக் காரணமாக இருந்தது உங்களைப் போன்றவர்களின் புலம்பல் என்று புரிய காலம் எடுக்காது - kuruvikal - 06-19-2004 உலகம் தமிழர்களுக்கு எதிரி என்பது சிங்களவர்களுக்கும் அவர்களின் எலும்பு பொறுக்கிகளுக்கும் மட்டுமே... என்பதை யதார்த்தத்தை தமிழர்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சியை நன்கு உற்று நோக்கின் புரியும்.....! இதில் ஒன்றும் சிறுபிள்ளைத்தனம் இல்லை கந்தரே...ஒன்று மட்டும் உண்மை.... தமிழர்கள் விடயத்தில் உங்களுக்கு யதார்த்தத்தை தரிசிக்கத் திராணியில்லை என்பதே......! இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவிடம் ஆயுத பலம் இல்லையோ அதை தங்கள் நண்பன் என்று சொல்லிக் கொள்ள பிரிட்டன் கூட முன்வராது.......ஆனால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆகட்டும் கியூபப் போராட்டம் ஆகட்டும் வியட்நாம் போராட்டம் ஆகட்டும் கிழக்குத் திமோர் ஆகட்டும் தென் ஆபிரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டம் ஆகட்டும் இந்திய விடுதலைப் போராட்டம் ஆகட்டும்....இன்னும் எத்தனை விடுதலைப் போராட்டம் ஆகட்டும் யாரையும் வெளிப்படையான ஆதரவாளர்களாகக் காட்டி வளர்ந்தது கிடையாது...வெளிப்பார்வைக்கு அவை வன்முறைவாத தன்மை கொண்டிருந்தாலும் அவற்றிற்குள் நியாயம் ஒன்று ஒழிந்திருப்பதை உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை....ஆனால் இழப்புகளின் பின்னரும் போராட்டத்தின் வளர்ச்சி ஸ்திரநிலை மக்களின் பங்களிப்பு என்பன கருதியும் உலகம் அவற்றின் நியாயத்தை தாமதித்து உள்வாங்கிக் கொண்டதுதான் வரலாறு.....அதுவே எமக்குப் பாடம்.....! இப்படியான உங்களின் விசமத்தனமான கூச்சல்களுக்கு செவி கொடுத்திருந்தால் தமிழரின் விடுதலைப் போராட்டம் 1972 இலேயே அடங்கிப் போயிருக்கும்....கந்தரே உங்கள் கூச்சல்கள் போல் தமிழர்கள் நாம் கேட்டுக்கேட்டே காது புளித்துப் போய்விட்டது.....ஏன் எனியும் இந்தக் கூச்சல்.....வலுவுள்ள வரை கூச்சலிடுங்கள்......பின் விட்டிலாய் அடங்கிப் போங்கள்.....யார் வேண்டாம் என்றார்..... அதற்காக இப்படிப் பயங்காட்டி நியாயங்களை நீங்கள் எப்போதும் எங்கும் அழிக்க முடியும் என்று மட்டும் கனவு காணாதீர்கள்.....! :twisted:
|