06-18-2004, 03:18 AM
அலம்பலுக்குள் ஒரு ஆலம்! (விசம்)
இஸ்ரேல் அனுப்பியது இரும்புதான் - ஏன்
இந்தியா அனுப்பியதும் இரகசியம்தான்
அண்டப்புளுகுக்காய்தான் அமெரிக்கா அனுப்பியது - இன்னும்
டொலருக்காய்தான் ரஷ்சியாவும் அனுப்பியது
சீனாவும் சிங்களமும் நல்ல உறவுதான் - இந்திய
எதிர்ப்பு பாகிஸ்தானும் நல்ல பரிவுதான்
இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை !
மொத்தத்தில் முழு உலகுக்கும் சிங்களம் வால் ஆக
சித்தம் குழம்பிப்போய் சிலர் நிற்கிறார் முழு இனத்துக்குமே எதிரியாய்
இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை !!
அயல் நாடு எமக்கு எதிரி: அயல் நாட்டின் எதிரியும் எமக்கு எதிரி
அக்கம் பக்கம் நீக்கமற எங்கும் எமக்கு எதிரி
நேற்றைய நண்பன் இன்று எதிரி
இன்றைய நண்பன் நாளைய......................
இருந்தும் முகத்தில் ஒரு புன்னகை - மொழியில்லா
அந்த புன்னகைக்குள் ஒரு புலம்பல்- என்பது
அலம்பலின் ஆலம்!
காய்க்கும் மரத்துக்கு கல்லெறி வருமென்ற
பொய்யா மொழி நிசமானதில்..
பொத்துக்கொண்டு வரும் புன்னகை அது.

.