06-17-2004, 09:43 AM
Quote:தங்களுக்கு கள நீர்வாகத்தினர் உதவி செய்வார்கள்.சண்முகி நீங்கள் கேட்டவிடயத்தினை இன்று இணைத்துவிடுகின்றேன்.
யாழ் களத்தையே மாற்றிவிட்டார்கள்....
யாழ் களம் சென்றவுடன் முதன்முதலாய் பார்ப்பதே... சமீப விடயங்கள்தான். அதற்கும் உடனே பதில் எழுதவேண்டும் இல்லாவிட்டால் போய் தேடி தேடி பதில் எழுத வேண்டியிருக்கு.
கள நீர்வாகத்தனர் தான் தலையை பிய்த்துக் கொள்வது போல் படம்போடுவார்கள்.
ம்... இனிமேல் நாம்தான் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டுமோ... தெரியாது.
முன்னைய கருத்துக்களம் பல நல்லவிடயங்களைக் கொண்டிருந்த போதிலும், தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் update இனை (இந்த script இனை உருவாக்கியவர்கள் பின்னர் பிழைகளைக் கண்டுபிடித்து திருத்திய பதிப்புக்கள்) செய்யமுடியாது அல்லது மாற்றிக்கொள்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டன. ஏனெனில் அந்த பழைய script ல் பல்வேறு நபர்களால் உருவாக்கப்பட்ட பல செயற்பாடுகள் இணைக்கப்பட்டிருந்தன. இவர்களுக்கிடைய ஒரு ஒழுங்கான தொடர்புகள் இல்லாத காரணத்தினால் (அதாவது குழுவாக இணைந்து செயற்படாது, தனித்தனியாக), மூல scriptஇனை பல்வேறு வடிவில் மாற்றினார்கள். அதே நேரத்தில் மூல scriptல் பிழைகள் திருத்தப்பட்டபோது உடனுக்குடன் இந்த (பழைய) களத்தில் மாற்றங்கள் செய்ய முடியாது விட்டபோது hack செய்பவர்கள் அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தினார்கள் / பயன்படுத்த முற்பாட்டார்கள். அதனால் தான் மூல scriptற்கு மீண்டும் களத்திளை மாற்றியமைத்தேன்.
Microsoft இன் புதிய இயங்குதளங்களில் லதா எழுத்துருவும் இணைக்கப்பட்டள்ளதால், லதா எழுத்துருவுக்கு இங்கு முன்னுரிமை கொடுத்துள்ளேன். இதன்படி லதா எழுத்துரு உள்ள ஒருவர் லதா எழுத்துரு மூலமே யாழ் இணையத்தினைப்பார்வையிட முடியும். அவ் எழுத்துரு இல்லாத ஒருவர் TheneeUniTx எழுத்துரு மூலம் யாழ் இணையத்தினைப்பார்வையிட முடியும்.

