Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம்பலுக்குள் ஒரு புன்னகை...!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/sa1.jpg' border='0' alt='user posted image'>

இஸ்ரேல் இருப்புக்காய் அனுப்பியது
கிபீரும் ஆட்லறியும்
இந்தியா இரகசியமாய் அனுப்பியது
மிக்கும் மிரண்டாவும்
அமெரிக்கா அண்டப்புளுகுக்காய் அனுப்பியது
பெல்லும் கிறீன்பரேட்டும்
ரஷ்சியா டொலருக்காய் அனுப்பியது
தரையில் தாங்கியும் ஆகாயத்தாங்கியும்
சீனா சிங்களத்தோடு உறவுக்காய் அனுப்பியது
எப் 7ம் ரி 56 உம்
பாகிஸ்தான் பகட்டுக்காய் பரிசளித்தது
மல்டிபரலும் பல்டி அடியும்
சிம்பாவே சிம்பிளாய் அனுப்பியது
சிணுங்க ஒரு ஆயுதக்கப்பல்
இன்னும்
விட்டது குறையாய் தொட்டது குறையாய்
யார்யாரோ எல்லாம்
ஆயுதவியாபாரச் சந்தை விரித்தார்
எங்கள் அன்னை பூமியின்
அழிவுகளின் மேல்....

இத்தனைக்கும் சாட்சியாய்
இதோ அவள்....
இருந்தாலும்
முகத்தில் ஒரு புன்னகை
சொந்தக் கருவறை பிரசவித்த
வேங்கைகளின் வீரத்தால்
எதிரியின் நிலைகுலைவுக்காய்
எழுந்த சூறாவளியிலும்- அவள்
விடுதலைக் காற்றை
சுவாசித்ததாலோ என்னவோ....!


நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
புலம்பலுக்குள் ஒரு பு - by kuruvikal - 06-15-2004, 10:10 PM
[No subject] - by kuruvikal - 06-16-2004, 12:25 AM
[No subject] - by kuruvikal - 06-16-2004, 12:38 AM
[No subject] - by phozhil - 06-16-2004, 04:10 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 12:53 AM
[No subject] - by vallai - 06-17-2004, 01:02 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 01:47 PM
[No subject] - by vallai - 06-17-2004, 02:53 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 03:53 PM
[No subject] - by shanmuhi - 06-17-2004, 05:18 PM
[No subject] - by kuruvikal - 06-19-2004, 02:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)