06-12-2004, 11:41 AM
aathipan Wrote:விதிமுறைகள் இருந்தாலும் அவற்றை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்பதில்லை. உங்கள் விருப்பத்தி;ற்கு எற்ப விதிமுறைகளை மாற்றிக்கொள்ளலாம். கற்றுத்தேர்ந்தபின் விதிமுறைகள் மீறுவது நல்லது. உங்கள் புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். புதிய மாற்றமாக வரவேற்கப்படும்.
நிச்சயமாக. கற்கும்போது விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமே அதன் நுணுக்கங்களை அறிந்துகொண்டு கற்றத்தேர்ந்தபின் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.
இது இந்தத் துறையில் மட்டுமல்ல. கவிதையில்கூட "நாங்கள் மரபுகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டோம்" என்பதற்கு முன்னால் மரபுகள் பற்றி அறிந்திருக்கவேண்டும்.
தொடருங்கள் ஆதிபன். நீங்கள் எழுதுவதில் இருந்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளமுடிகிறது.

