06-11-2004, 10:57 PM
பொட்டு
பொட்டு அல்லது திலகம் என்பதற்கு மங்கல அழகுச் சின்னமாக நெற்றியின் நடுவில் (புருவ மத்தியில்) குங்குமம் போன்றவற்றால் வைத்துக் கொள்ளும் சிறு வட்ட வடிவக் குறி என்கிறது தமிழ் அகராதி. அது அதற்கு மேல் எந்த விளக்கத்தையும் தரவில்லை. பொட்டு வைத்தல் என்பது இந்தியப் பண்பாட்டுக்குரிய முக்கிய அம்சமாகும். பெண்கள் மட்டுமல்ல ¬ண்களும் நெற்றியில் திலகமிடுவது நெடுங்காலமாக இந்திய மரபில் காணப்பட்டு வருகிறது.
தாம் சார்ந்த இந்து மதப் பிரிவின் அடையாளத்தைக் குறிப்பதற்காக ¬ண்கள் நெற்றியில் திலகமிடும் வழக்கம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நிலவி வந்திருக்கிறது. சக்தியை வழிபடும் சாக்தப் பிரிவினர் சிவந்த குங்குமத் திலகத்தாலும், வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் U வடிவில் அமைந்த நாமம் எனப்படும் வெள்ளை நிறப் பொட்டாலும், சூரியனை உயர் தெய்வமாக வழிபடும் சௌர மதப்பிரிவினர் செஞ்சந்தனத்தாலான பொட்டாலும் தம்மை அடையாளப்படுத்தினர்.
இந்து சமய ரீதியாக பொட்டணிதல் என்பது ¬ண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான மரபாகும். பொட்டிடுவதற்குப் புருவமத்தி தெரிவு செய்யப்பட்டமைக்குச் சில காரணங்கள் கூறப்படுகின்றன. தியானம் செய்யும் போது பார்வையும் மனமும் புருவ மத்தியில் குவிந்து ஒடுங்குகிறது. அவ்வாறு ஒடுங்கும் போது அந்த இடத்தில் ஒருவித அழுத்தம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், புறத்தில் இருந்து வரும் சக்திகளின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும் புருவ மத்தியில் பொட்டணிவதாகக் கூறப்படுகிறது.
உடலில் ஏழு சக்கரங்கள் சக்தி நிலைகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. பிறர் காணும் வகையில் வெளியில் தெரியும்படியாக அமைந்திருப்பது புருவ மத்தியில் அமைந்துள்ள ¬றாவது சக்கரம் மட்டுமே. இந்த சக்கரம் மூளை, நரம்புமண்டலம், காதுகள், நாசி, இடது கண் ¬கியவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும், புத்திக் கூர்மை, மனம், புத்தி, ¬ன்மசக்தி ¬கியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த புருவ மத்தியைப் பாதுகாப்பதும், அதன் சக்தியை அதிகரிக்கச் செய்வதும் முக்கியமானதாக எண்ணப்பட்டதால் அந்த இடத்தில் பொட்டு வைக்கும் மரபு ¬ரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெண்கள் பொட்டணிவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது பெண்களைத் தீய எண்ணத்துடன் பார்ப்பவரது பார்வையை அது தூய்மைப்படுத்துகிறது. ஒருவர் ஒரு பெண்ணின் கண்களை வேறுபட்ட எண்ணத்துடன் பார்க்கும் போது பொட்டு அவரது கவனத்தைத் திசை மாற்றுவதுடன், அது சிவனது மூன்றாவது கண்ணை நினைவூட்டுவதால் அவரது தீய எண்ணங்கள் மறைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.
ஞானக் கண்ணை அடையாளப்படுத்தும் பொட்டு அதை அணிபவருக்கு நல்லதிஷ்டத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இந்து சமயம் பொட்டணிதல் பற்றி இவ்வாறு பல விதமான கருத்துக்களைக் கூறிய போதும் தமிழரைப் பொறுத்தவரையில் ¬ரம்பகாலத்தில் அழகுக்காகவே பெண்கள் திலகமிட்டதாக சங்க இலக்கியமான கலித்தொகையில் உள்ள சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரமும் அழகுக்காகப் பொட்டிடுதல் பற்றிக் குறிப்பிடுகிறது. நெற்றியில் பொட்டிடுதல் என்பது எப்போது பெண்களின் மங்கலச் சின்னமாகக் கருதப்பட ¬ரம்பித்தது என்பதும் தமிழ்ப் பண்பாட்டின் அம்சமாக அது எப்போது மாறியது என்பதும் தனியாக ¬ராயப்பட வேண்டிய விஷயங்களாகும். பண்டைக்கால ¬ரிய சமுகத்தில் திருமணத்தின் போது மணமகன் தனது இரத்தத்தை திருமணம் முடித்ததன் அடையாளமாக மணமகளின் நெற்றியில் பொட்டாக வைத்தது பற்றிச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கம் பின்னர் மணமகள் திருமணத்தின் போது சிவப்பு நிறத்தில் பொட்டணியும் முறைக்கு வித்திட்டிருக்கலாம்.
தமிழர் வாழ்வுடன் பல நிறங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அவற்றுள் சிவப்பு வெள்ளை நிறங்கள் முக்கியமானவை. சமூகவியல் ரீதியாக இந் நிறங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. தமிழருக்குரிய சூடு, குளிர் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறம் குளிர்மையையும், சிவப்பு நிறம் சூட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இவ்வியல்புகளை வெளிப்படுத்தும் வகையிலேயே திருமணத்தின் போது ¬ண்களதும் பெண்களதும் ¬டைகள் தெரிவு செய்யப்படுகின்றன. ¬ண் குளிர்மையான இயல்பு உள்ளவனாகக் கருதப்படுவதால் வெள்ளை நிற ¬டை அணிகிறான், சந்தணத் திலகமிடுகிறான். பெண் சூடுள்ளவளாக எண்ணப்படுவதால் சிவப்பு நிறச் சேலையணிந்து சிவப்பு நிறத்தில் பொட்டிடுகிறாள். சிவப்பு நிறம் சூட்டை மட்டுமல்ல, குருதியின் நிறம் என்பதால் வளத்தையும் குறிக்கும். வளம் என்னும் போது அது சந்ததி விருத்தியைக் குறிக்கும். சந்ததியை உடல் ரிதியாக விருத்தி செய்யும் வளம் பெண்ணிடம் இருப்பதாலும், அது சூடான இயல்புள்ளது என்று கருதப்படும் காமத்துடன் தொடர்புள்ளதாலும் அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிவப்பு நிற ¬டையை அவள் திருமணத்தின் போது அணிகிறாள். அத்துடன் அன்றே அவள் முதன்முதல் சிவப்பு நிறத்தில் பொட்டணிகிறாள். திருமணத்தின் பின் சந்ததியை விருத்தி செய்யும் நிலைக்கு அவள் தயாராகிவிட்டாள் என்பதை அவளது சிவப்பு நிற திருமண சேலையும் பொட்டும் குறிப்பாகக் காட்டி நிற்கின்றன.
தமிழ் பெண்ணின் வளம் கற்பு நெறியுடனும் தொடர்பு பட்டிருக்கிறது அதனாலேயே கணவன் மரணணமடைய நேரிட்டால் அவள் தனது சிவப்பு நிறப் பொட்டை நீக்கித் தனது வளமின்மையைப் பிரதிபலிக்கிறாள். அதே போல அதன் பின் அவள் வெள்ளை நிறச் சேலையணிந்து குளிர்மையடைந்துவிட்ட நிலையைக் காட்டுகிறாள். எத்தனையோ நிறங்கள் இருக்க பொட்டுக்கு குருதி நிறமான சிவப்பு நிறம் தெரிவு செய்யப்பட்டமைக்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும்.
1930 களில் தமிழ் நாட்டிலிருந்து சஞ்சிகைகள் யாழ்ப்பாணத்திற்கு வர ¬ரம்பித்த பின்னர் இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்கள் பொட்டிடும் வழக்கத்தைப் பரந்த அளவில் ¬ரம்பித்திருக்கலாம். ¬யினும் காலப் போக்கில் இலங்கை அரசியலில் தமிழரைப் பாதிக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய பின்னர் பொட்டிடுதல் என்பது தமிழ் இனத்தைக் குறிப்பிடும் ஒரு குறியீடாக மாறியது. இதன் காரணமாகவே தமிழருக்கு எதிரான போக்கு கூர்மையடைந்த காலத்தில் கொழும்பில் வாழும் பெண்கள் தமது அடையாளத்தை மறைப்பதற்காக பொது இடங்களில் பொட்டிட்டுச் செல்வதைத் தவிர்த்தனர்.
வெளிநாட்டில் வாழ வந்த தமிழ் அல்லது இந்துப் பெண்கள், ஏன் பொட்டு அணிகிறீர்கள்? இதற்கு உங்கள் சமயத்தில் அல்லது பண்பாட்டில் ஏதும் முக்கியத்துவம் உள்ளதா? இது சாதியைக் குறிக்கும் அடையாளமா? என்று பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே பொட்டிடுதல் பற்றி அறிய விரும்புபவர்களுக்குச் சரியான விளக்கத்தை கொடுப்பதற்காக நாம் இதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நான் சுவீடனில் வாழ்ந்த காலத்தில் இந்தக் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தது. ஒரு தடவை புகை வண்டியில் பிரயாணம் செய்த போது ஒருவர் எனது பொட்டைப் பார்த்து விட்டு விளக்கம் கேட்டார். திருமணமான பெண்களுக்கு இது ஒரு அடையாளமாக விளங்குவதாக நான் கூறியதும் அவர் உடனே கேட்டார் traffic light இல் உள்ள red light போல எதிரே வருபவரை இவள் திருமணமான பெண் தூரத்தில் நில் என்று எச்சரிக்கின்றதா இந்தச் சிவப்புப் பொட்டு? என்று. அது ஓரு வகையில் நல்ல விளக்கமாகவே எனக்குப் பட்டது.
இன்று அழகுக்காக பொட்டணியும் வழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் அதன் வடிவம் மட்டுமல்ல அளவும் மாறிவிட்டது. வட்டப் பொட்டு என்ற நிலை போய் சதுரம், மெல்லிய கோடு, நீள்வட்டம் (oval shape) நீர்த்துளி, சதுரம் போன்ற வடிவங்களிலும், பாம்பு, மயில், கிளி, ஏன் யானை வடிவத்தில் கூட பொட்டணியும் நாகரிகம் பரவியுள்ளது. இந்துக்கள் மட்டுமல்ல மற்றையோரும் விரும்பி அணியும் வகையில் நெற்றியிலும் உடலின் வேறு பல பாகங்களிலும் அணியும் விதமாக பல்வேறு வகைப் பொட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. பாடகியான Madonna ¬ரம்பித்து வைக்க 'No Doubt' என்ற பொப் குழுவின் தலைமைப் பாடகியான Gwen Stefani தனது அடையாளமாகவே (trademark) பொட்டை ஏற்றுள்ளார்.
பொட்டு ¬ரம்பத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பெண்களால் மட்டும் அணியப்பட்டது. இதனால் இந்நாடுகளுக்குச் செல்லாத பிறநாட்டவர் இது பற்றிச் சிறிதே அறிந்திருந்தனர். ¬னால் இந்திய இலங்கைப் பெண்கள் புலம் பெயர்ந்து வாழ ¬ரம்பித்ததிலிருந்து பொட்டு பல நாட்டவர் இனத்தவர் அறியும் ஒன்றாகி விட்டது. பெண்களின் ¬டை மாறிய போதும் பொட்டுக்களின் வர்ணங்களும் வடிவங்களும் மாறிய போதும் பொட்டணிதல் என்பது பெருமளவில் மாறவில்லை. பிறநாடுகளில் பிறந்து வளர்ந்த இளம் இந்திய இலங்கைப் பெண்கள் தமது பண்பாட்டின் பல விஷயங்களை கைவிட்டுவிட்ட போதும் விசேட தினங்களில் நவீன வடிவங்களில் வந்துள்ள பொட்டை அணிவதை விடவில்லை. ¬யினும் பொட்டு வைத்தலுடன் இணைந்துள்ள பல விளக்கங்கள், காரணங்கள் என்பன முற்றாக மறக்கப்பட்டு வெறும் அழகுக்காகவும் அடையாளத்துக்காகவுமே பொட்டு இன்று அணியப்படுகிறது.
அமெரிக்காவில் பல வருடங்களின் முன்னர் பொட்டு வைப்பவர்களுக்கு எதிரான இனவெறி இயக்கம் ஒன்று தோன்றியதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். Dot buster என்ற இந்த இயக்கம் பொட்டு வைத்தவர்களைத் தாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது. இந்தியர் அதிகமாக வாழ்ந்த மாநிலங்களில் தோன்றிய இந்த இயக்கம் பின் முக்கிய அமெரிக்க நகரங்களுக்குப் பரவியது. இது பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட போதும் அதனுடன் இணைந்த இனவெறியைப் பலர் மறந்து விடவில்லை. சில வருடங்களின் பின் இந்த எண்ணத்தை மாற்றும் நோக்கத்துடன் ஒரு 35 நிமிட வீடியோப் படம் எடுக்கப்பட்டது. அதன் தலைப்பு Just a Little Red Dot. இது ஒருவித தகவல் நாடக அதாவது Docudrama அமைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே. இப்படத்தை உருவாக்கிய மித்ரா சென் என்ற இந்திய பெண் கனடாவில் உள்ள Toranto மாநிலத்தில் உள்ள Scarborough என்ற இடத்தில் உள்ள Tom' O'Shanter Junior என்ற அரச பாடசாலையில் ¬சிரியையாக இருந்தார். தனது வகுப்பறையில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படத்தை உருவாக்கினார். 1994 ம் ¬ண்டு மே மாதம் 20ம் தேதி இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பார்வதி என்ற மாணவி அந்தப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்திருந்தாள். அவள் பொட்டு அணிந்திருந்த காரணத்தால் மற்றைய மாணவரால் ஏளனஞ் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டாள். பின்னர் ¬சிரியையின் பிறந்ததினம் வந்த போது ஒவ்வொரு மாணவரும் அவருக்கு பரிசளித்தனர். அப்போது பார்வதி ஒரு packet பொட்டுகளை ¬சிரியையான மித்ராவுக்குப் பரிசளித்தாள். அவர் உடனே அவற்றில் ஒன்றை தனது நெற்றியில் அணிந்து கொண்டு அதன் பண்பாட்டு முக்கியத்துவம் பற்றி மாணவருக்கு விளக்கிக் கூறினார். அது அவர்களை அழகுபடுத்தும் என்பதைக் கேட்டவுடன் வகுப்பில் உள்ள மாணவிகள் ¬சிரியையிடம் பொட்டுக்களை வாங்கித் தமது நெற்றியில் அணிந்து கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு விளையாடச் சென்றனர்.
அங்கே அவர்களது ¬ர்வம் விரைவில் நசுக்கப்பட்டது. அவர்களது சகபாடிகள் அவற்றை Paki-dots உட்பட பல பெயர்களால் கேலி செய்தனர். அவர்களது மூர்க்கத்தனமான இனவெறியால் பாதிக்கப்பட்ட அவர்கள் வெட்கமடைந்தனர், அதிர்ச்சியுற்றனர், குழப்பமுற்றனர். இனவெறி என்றால் என்னவென்றறியாத அந்த 9, 10 வயதுப் பிள்ளைகள் உடனே தமது பொட்டுக்களை மனவருத்தத்துடன் அகற்றினர். ¬சிரியை அவர்களை இது பற்றி உரையாடும் படி கூறினார். «ô§À¡Ð அறிவுள்ள மாணவர்கள் சிலர், வேறுபட்ட தோற்றம், பண்பாடுகள் ¬கியவற்றை மதித்தல், சகிப்புத்தன்மை ¬கியன பற்றித் தமது பாடசாலைச் சகபாடிகளுக்கு, அறிவூட்டுதலின் அவசியம் பற்றிக் கூறினர். அந்த மாணவர்கள் பொட்டை cool-dots என அழைத்துத் தமது சகபாடிகளிடையே பிரபலியப்படுத்துவதில் வெற்றி கண்டனர். அப் பாடசாலையைச் சேர்ந்த ஏனைய ¬சிரியைகளும் பொட்டை அணிந்து அவர்களது ¬தரவைக் கொடுத்தனர். கேலி செய்தவர்கள் பொட்டு தமது பாடசாலையில் பெற்ற பிரபலியத்தைக் கண்ணுற்று தோல்வியை ஏற்று விலகினர்.
ஏற்கெனவே படத் தயாரிப்பில் அனுபவமுள்ள ¬சிரியையான மித்ரா சென் இந்த பொட்டு சம்பவம் ஒரு அறிவுட்டும் படத்திற்கு நல்ல வளமுள்ள அடிப்படை என்பதை உணர்ந்தார். எனவே இரண்டு வருட ஊதியமற்ற லீவை எடுத்துக் கொண்டு படத் தயாரிப்பில் இறங்கினார். இதற்காக அவர் பன்னிரண்டுக்கு மேற்பட்ட நாடுகளையும், இனங்களையும் சேர்ந்த 80 பிள்ளைகளைத் தெரிவு செய்து அவர்களை நடிகர்களாக்கினார். 1996ம் ¬ண்டு ஜூன் 25ம் தேதி அந்தப் படம் Ontario Science Centreல் திரையிடப்பட்ட போது அந்தப் படம் தெரிவித்த உள்ளார்ந்த செய்திக்காக மட்டுமல்ல சிறந்த பாத்திரப்படைப்பு, அதில் பயன்படுத்தப்பட்ட graphics, மிக அழகான இசை ¬கியவற்றிற்காக அப்படத்தின் இயக்குனரும் நடிகர்களும் பெரும் பாராட்டுதலைப் பெற்றனர். மனித உரிமைகள் நிர்வாக இயக்குனரான Dr Karen Mock என்பவர் இந்த சக்தி வாய்ந்த திரைப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் எமது பல்லின சமூகத்திற்கு மிக அவசியமான ஒருவரை ஒருவர் மதித்தல், சாதகமான செயற்பாடு ¬கியவற்றை ஊக்குவிக்கிறது என்று பாராட்டினார். அத் திரைப்படம் பல உயர் விருதுகளைப் பெற்றதுடன் பல அரச உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும் பெற்றது.
1996 கோடை காலத்தில் Little Red Dot Club ஒன்று பிள்ளைகளின் முயற்சியால் உருவாகியது. அதன் இணை தலைவரான 13 வயது Mandy Pipher கூறியதாவது பகிர்தல், மற்றைய பண்பாடுகளை விளங்கி ஏற்றல் ¬கியவற்றை எமது சந்ததியினரை உணரச் செய்வதே இந்த கிளப்பின் நோக்கம். இவ்வாறு உணர்வதன் மூலம் நாம் வளர்ந்ததன் பின்னர் எந்த நாட்டிலிருந்து வந்தவராயினும் சரி எந்தவிதமான தோற்றம் கொண்டவராயினும் சரி அவர்களுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி ஒத்து இயங்க முடியும். ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட இந்த club Toronto நகரத்தில் உள்ள பல்வேறு ¬ரம்ப பாடசாலைகளில் இது பற்றி 120க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. தமது நிகழ்ச்சிகள் சிறுவர்களில் ஏற்படுத்தும் சாதகமான பாதிப்பையிட்டு மகிழ்ச்சியடையும் Mandy நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்கள் தன்னிடம் வந்து பொட்டுக்களை கேட்பதாகக் கூறுகிறார். இந்த clubஐ நடத்துவதன் மூலம் அதன் அங்கத்தவர்கள் திட்டமிடல், பொது மேடைகளில் பேசுதல் அதற்கான பேச்சைத் தயாரித்தல், மானியத்துக்கு விண்ணப்பித்தல், வரவுசெலவு பட்டியலைத் தயாரித்தல் என பல்வேறு பயிற்சிகளையும் பெற்றனர். இந்த clubக்கு 1996ல் Trillium Foundation னில் இருந்து 10,000 டொலர்ஸ் மானியம் கிடைத்தது. கனடாவில் உள்ள இனவெறி எதிர்ப்பு நிறுவனங்களில் இது முக்கியமானதாக இயங்கி வந்தது.
இது 1998 ல் வெளிவந்த Hinduism Today இல் இடம் பெற்ற ஒரு கட்டுரையின் தமிழாக்கம். அந்த கிளப் இப்போதும் இயங்கி வருகிறதா என்பதை அறிய அவர்களது இணையத்திற்குச் சென்று பார்த்தேன். அதே நோக்கத்துடன் அது இன்றும் இயங்கி வருவதை அறிய முடிந்தது. Jassica என்ற மித்ராவின் படத்தில் நடித்த பெண் தற்போது இணை தலைவராக இருக்கிறார்.
நன்றி -சந்திரலேகா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>