06-11-2004, 06:26 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>இலங்கை இராணுவத்தின் அனுபவங்களை</b> அமெரிக்கப் படை பெற்றுக்கொள்ள வாய்ப்பு</span>
<b>கொழும்பு விஜயம் உதவுமென்கிறார் அமெரிக்க பிராந்தியத் தளபதி</b>
இலங்கை இராணுவத்தினரின் போர்முனை அனுபவங்களை அமெரிக்கப் படையினரும் பெறக்கூடிய அரிய சந்தர்ப்பமொன்று தனது இலங்கை விஜயத்தின் மூலம் கிடைத்திருப்பதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய-பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜேம்ஸ் எல் கம்பல் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தலைமையகத்திற்கு நேற்று வியாழக்கிழமை மாலை வருகை தந்த ஜெனரல் கம்பலை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பலகல, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றார்.
இந்த நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதியின் உத்தியோகப10ர்வ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கம்பல் விசேட விருந்தினர் பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
இவ் வேளையில் அங்கு குழுமியிருந்த செய்தியாளர்கள், ஜெனரல் கம்பலின் இலங்கை விஜயம் குறித்துக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூ றுகையில், இலங்கை இராணுவம் நீண்டகால போர் முனை அனுபவங்களையும் போர்த் தந்திரோபாயங்களையும் பெற்றுள்ளது. இதேநேரம் சமாதான நடவடிக்கைகளிலும் அதீத ஈடுபாட்டை அது கொண்டுள்ளது.
போர்க்கள அனுபவங்கள் நிறைந்த இலங்கை இராணுவம் ஏனைய நாட்டு இராணுவத்தினருக்கு தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளது.
இவ்வாறான திறமையும் அனுபவமும் நிறைந்த இலங்கை இராணுவத்தின் போர் முனை அனுபவங்களை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பம், இலங்கைக்கான இந்த விஜயத்தின் மூலம் கிடைத்துள்ளது.
அமெரிக்க இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் சிறந்த முறையில் நட்பு பேணப்பட்டு வந்துள்ளது.
இதேவேளை, அந்த நட்பு எதிர்காலத்தில் மேலும் சிறந்த முறையில் பேணப்படும்.
வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் மற்றும் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளிலும் இலங்கை இராணுவத்தின் அனுபவங்களை அமெரிக்கப் படைகள் இலங்கைப் படையினரிடமிருந்து பெற்றுக் கொள்வர்.
இலங்கை இராணுவத்திற்கு போர் தளபாட விநியோகமும், பயிற்சிகளும் தொடர்ந்தும் வழங்கப்படும்.
இதேவேளை, சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் சர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் பங்களிப்பு தொடர்ந்தும் முழுமையாகக் கிடைப்பதுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படவும் அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் என்றும் தெரிவித்தார்.
இச் சந்திப்பின் போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல தெரிவிக்கையில், அமெரிக்க இராணுவம் இலங்கை இராணுவத்தின் தேவைகளுக்கு இராணுவத் தளபாடங்களை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அமெரிக்க படைகள் இலங்கைப் படைகளிடம் யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக கற்றுக் கொள்ள ஆவல் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>