Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாணவர் படை.....
#1
<b>மாணவர் படை.....</b>

எழுக எழுக மாணவர்படையே
எம் இனம் காத்திட எழுந்திடுவீரே
எதிரிகள் பாசறை அடித்திடுவோமே
எரிமலையாக வெடித்திடுவோமே.

உலக உருண்டையில் உள்ளவற்றில்
உணர்ச்சிகரமான படையிது
உன்னதமாக நாம் செயற்பட்டு
உதவிடுவோம் உலகத்தமிழுக்கு.

இளய சமுதாயத்தின்
இராயாங்கப் படையிது
இலக்கினை எளிதாக அடைந்து
இருண்ட உலகுக்கு ஒளியேற்றிடுமே.

ஊர் ஊராய் உள்ளவற்றில்
ஊக்க முள்ள படையிது
ஊனமுற்ற உறவுகளுக்கு
ஊன்று கோலாய் இருந்திடுமே.

ஆளமான கருத்துக்களை
ஆணிவேராய் கொண்ட படையிது
ஆழும் வர்க்கத்துக்கு
ஆரோக்கியமான எதிர்க்கட்சியாய் இருந்திடுமே.

ஈழம் என்ற கொள்கையை
ஈன்ற படையிது
ஈழ வேந்தன் ஆட்சியில்
ஈழ மாணவர்கள் உரிமைக்காய் உதித்ததுவே.

அன்பு, அறிவு என்பவற்றை - தன்
அகத்தே கொண்ட படையிது
அடிமைத்தனமான பேச்சுக்களை
அகற்றி எறிய உருவானது இதுவே.


"மாணவர் படை மாபெரும்படை"

கவிதன்
(கனடா)
Reply


Messages In This Thread
மாணவர் படை..... - by kavithan - 06-10-2004, 11:48 PM
[No subject] - by BASKAR - 06-11-2004, 12:42 AM
[No subject] - by BASKAR - 06-11-2004, 12:42 AM
[No subject] - by இராவணன் - 06-15-2004, 10:19 PM
[No subject] - by kavithan - 06-16-2004, 03:04 AM
[No subject] - by kavithan - 06-06-2005, 03:00 PM
[No subject] - by வெண்ணிலா - 06-06-2005, 03:13 PM
[No subject] - by Malalai - 06-06-2005, 03:43 PM
[No subject] - by hari - 06-06-2005, 03:50 PM
[No subject] - by stalin - 06-06-2005, 03:53 PM
[No subject] - by Malalai - 06-06-2005, 05:16 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 05:21 PM
[No subject] - by Malalai - 06-06-2005, 05:25 PM
[No subject] - by kuruvikal - 06-06-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 06:53 PM
[No subject] - by tamilini - 06-06-2005, 07:39 PM
[No subject] - by Nitharsan - 06-06-2005, 07:56 PM
[No subject] - by இளைஞன் - 06-06-2005, 10:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)