06-10-2004, 07:39 PM
நேற்றைய பாடத்தில் பார்த்தது போல <b>ஒளிவிடும் துளையை</b> மாற்றி ஒரு நிறுத்தத்திலும் <b>ஒளி உள்விடும் நேரத்ததை</b> மாற்றி ஒரு நிறுத்தத்திலும் காட்சியைப்பதிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒளிவிடும்துளையை சிறியதாகதேர்வுசெய்து ஒளிவிடும் நேரத்தை அதிகரிப்பதன்மூலமோ அல்லது ஒளிவிடும் துளையைப்பெரியதாக தேர்வுசெய்து ஒளிவிடும் நேரத்தைக்குறைத்து அதே காட்சியை எந்தக்குறைகளும் இன்றிப்பதிய முடியும்.
இதை ஒரு உதாரணம் மூலம் இலகுவாக விளக்கமுடியும்.
வாளி ஒன்றில் நீர் நிரப்பவேண்டும். தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் குழாயைப்பயன்படுத்தி நிரப்புகிறோம். சிறிய குழாயைப்பயன்படுத்தி அதிக நேரம் செலவு செய்து நிரப்பமுடியும். அல்லது பெரிய குழாயைப்பயன்படுத்தி சிறிது நேரம் செலவு செய்து நிரப்பிக்கொள்ளலாம்.
எப்படியிருந்தாலும் வாளி நிறையவேண்டும் என்பது தான் முக்கியம். புகைப்படம் எடுத்தலும் இதற்கு ஒப்பான செயல்தான். புகைப்படக்கருவியில் உள்ள ஒளிவிடும்துளைகளை பெரியதாகவோ சிறியதாகவோ தேர்வு செய்யமுடியும் அல்லவா இந்தத்துளைகள் நீர்நிரப்பும் குழாய்களுக்கு நிகராகசெயல்படுகின்றன. அதுபோல வாளியை நிரப்பப் பயன்படுத்தப்படும் நேரம் புகைப்படக்கருவியில் நாம் பயன்படுத்தும் ஒளியை உள்விடும் நேரத்திற்கு நிகரானது என எடுத்துக்கொள்ளலாம். புகைப்படக்கருவியில் நீருக்குப்பதிலாக ஒளியைக்கொண்டு நிரப்புகிறோம்.
எனவே நாங்கள் ஒளிவிடும் துளையை பெரியதாகதேர்ந்தெடுக்கமுடியும் ஆதற்கேற்ப ஒளி உள்விடும் நேரத்தை குறைத்து தேர்வுசெய்யவேண்டும். அதே போல ஒளிவிடும் துளையை சிறிதாக தேர்வு செய்தோமானால் ஒளிவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும். இதன்மூலம் ஒரேகாட்சியை எந்தவிதமான வித்தியாசமும் இன்றி வேறுபட்ட அளவுகளைப்பயன்படுத்தி பதியமுடியும்.
ISO ஒளிவிடும்துளை ஒளிஉள்விடும்நேரம்
100 f/4 1/2000 Also Correct
100 f/5.6 1/1000 Also Correct
100 f/8 1/500 Also Correct
<b>100 f/11 1/250 </b> InitialCorrectValue
100 f/16 1/125 Also Correct
100 f/22 1/60 Also Correct
100 f/32 1/30 Also Correct
[/b]