06-06-2004, 07:57 AM
காட்சியைப்பதிதல் பற்றி இப்பகுதியில் இன்னும் கொஞ்சம் விரிவாகப்பார்ப்போம். காட்சியைப்பதிதல் என்பது புகைப்படத்துறையில் வெளிச்சத்தைப்பதிவுசெய்யும் செயலைக்குறிக்கும். அதாவது ஒரு படத்தை பெறுவதற்காக வெளிச்சத்தை புகைப்படக்கருவியின் உதவியுடன் படச்சுருளிலோ அல்லது டிஐpட்டல் பதிவாக்கியிலோ பதிதல் எனலாம். புகைப்படக்கருவியானது உள்ளே வரும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி அதை புகைப்படச்சுருளை நோக்கி அனுப்புகிறது. புகைப்படச்சுருளானது இரசாயனபொருட்கள் புூசப்பட்டவை. வெளிச்சம் படும்போது அவை இரசாயன மாற்றத்திற்குட்பட்டு காட்சியானது அங்கே பதியப்படுகிறது.
புகைப்படக்கருவியானது ஒரு ஒளிபுகாத பெட்டி எனலாம். தேவையானபோது மட்டும் அவை திறக்கப்பட்டு தேவைக்கேற்ப வெளிச்சம் உள்ளே அனுமதிக்கப்பட்டு காட்சியானது பதிவுசெய்யப்படுகிறது. வெளிச்சம் உள்ளே அனுமதிப்பதற்காக புகைப்படக்கருவியில் வௌ;வேறு அளவுகளில் துளைகள் இடப்பட்டிருக்கும். இத்துளைகளை மாற்றி நாம் உள்ளே செல்லும் ஒளியைக்கட்டுப்படுத்தலாம். இந்தத்துளைகள் ஆங்கிலத்தில் அப்ராச்சர் என அழைக்கப்படுகிறது. இத்துளைகள் இனி ஒளித்துளைகள் என அழைப்போம்.
புகைப்படச்சுருளானது ஏற்கனவே கூறியதுபோல வெளிச்சத்திற்கு ஏற்ப இரசாயன மாற்றம் அடையக்கூடியது. அதிக நேரம் வெளிச்சம் உள்ளே சென்றால் இந்த இரசாயன மாற்றம் தேவைக்கதிகமாக ஏற்பட்டு காட்சிதெளிவற்றுப்போக வாய்ப்புள்ளது. ஆகவே வெளிச்சம் உள்ளே செல்லும் நேரத்தையும் நாம் கட்டுப்படுத்தவேண்டி உள்ளது.
ஒளிளை உள்ளேவிடுவதற்கு புகைப்படக்கருவியில் கதவுகள் போன்ற உள்ளது. இது தேவைக்கேற்ப வேகமாகத்திறந்து மூடுகிறது. இது உள்ளே செல்லும் ஒளிக்கான நேரத்தை கட்டுப்படுத்துகிறது. மதியநேரத்தில் அதிக வெளிச்சம் இருப்பதால் அந்த நேரத்தில் இவை வேகமாகத்திறந்து மூடும்படி கட்டுப்படுத்தியாகவேண்டும். மாலை அல்லது இரவில் இந்தக்கதவுகள் கொஞ்சம் அதிக நேரம் திறந்து ஒளியை உள்ளேவிட அனுமதிக்கவேண்டும். இந்த நேரம் ஆங்கிலத்தில் சட்டர்ஸ்பீடு என்று அழைக்கப்படுகிறது. ஒளியை உள்விடும் நேரம் என அழைப்போம்.
புகைப்படச்சுருளில் உள்ள இரசாயனப்புூச்சுக்களும் மாறுபடுகின்றன. சில இரசாயனப்புூச்சுக்கள் துரிதமாக செயல்படுகின்றன. துரிதமாகசெயல்படும் இரசாயனப்புூச்சுக்களைக்கொண்ட புகைப்படச்சுருள் அதிக ஒளியைப்பெறவேண்டியதில்லை. இத்தகைய துரிதமாகச்செயல்ப்படும் இரசாயனப்புூச்சுக்கொண்ட சுருள்கள் இரவில் காட்சிகளைப்பதிய பெரிதும் உதவியாக உள்ளது. இப்புகைப்படச்சுருள்கள் தரப்படுத்தப்பட்டு ஐஎஸ்ஒ 50, 100, 200, 400 என அவற்றின் துரிதமாகசெயல்படும் இரசாயனப்புூச்சுக்கு ஏற்ப இலக்கமிடப்பட்டு கிடைக்கிறது. இதில் ஐஎஸ்ஒ 50 அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இது பகல் நேரத்திற்கு உகந்தது. ஐஎஸ்ஒ 400 துரிதநேரத்தில் இரசாயனமாற்றத்திற்குட்பட்டு காட்சியைப்பதியும் தன்மை கொண்டது. இது இரவுநேரத்தில் பயன்படுத்த உகந்தது.