Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
§¸ûÅ¢-À¾¢ø ; ¸õÀ¢äð¼÷ ºõÀó¾Á¡É¨Å
#7
<b>பாடம் -1 பதில்கள்</b>

1) பவர் சப்ளை ஒரேயடியாக பழுதானால் கம்பியூட்டர் இயங்கவே இயங்காது. ஆனால் மின்சாரம் இடைக்கிடை தடைப்பட்டு (சில விநாடிகள்) வருவதன் காரணமாகத்தான் கம்பியூட்டர் அடிக்கடி Reboot. ஆகிறது.Power supply ல் கோளாறு உள்ளது. சரியான அளவில் மின்சாரம் பாய்கிறதா? பாகங்கள் எல்லாம் சரியாக இயங்குகிறதா? என்பதை செக் பண்ணவும். தேவையெனில் பவர் ச்ப்ளையை மாற்றவும்.

2) ATX மதர்போட்டில் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக பொருத்தப்படும் கனெக்டரின் பெயர் <b>P1 கனெக்டர் </b>என்பதாகும். இதில் 20 வயர்கள் காணப்படும். இதனூடாக் 3.3V, 12V, 5V, ஆகிய் வோட்களில் மின்சாரம் பாய்கிறது.

3) கம்பியூட்டரின் உள்ளே காணப்படும் காற்றாடிகள், கம்பியூட்டர் வேலை செய்யும்போது அதன் பாகங்களிலும் அதன் அயலிலும் ஏற்படும் வெப்பக்காற்றை வெளியே தள்ளி சூட்டை தணிக்கிறது. முன்பக்கத்தில் திறந்த வெளி காணப்படின் காற்றாடி அதனூடக வரும் காற்றை இழுத்து தள்ளுவதில் சிரமத்தை செலுத்துவதால் அதன் சூட்டைதணிக்கும் வேலை பாதிப்படையும்.

4) ATX மின் சப்ளை 12V, 5V, 3.3V ஆகிய அழுத்தங்களில் மின்சாரத்தை விநியோகிக்கின்றது; 2V அழுத்தத்தை விநியோகிப்பதிலலை.

5) கம்பியூட்டரை கழற்றி திருத்துவதன்முன் நாம் எம் உடலில் உள்ள Electrostatic Voltage ஐ, கதவின் கைபிடியையோ அல்லது கம்பியூட்டரின் case ஐயோ தொட்டு அகற்றிவிட்டு, பாகங்களில் கையை வைக்கவேண்டும். அன்றேல் எம்முடலில் உள்ள அதிசக்தி மிக்க Static Voltage கம்பியூட்டரின் மிக நுண்ணிய பாகங்களை எரித்துவிடும்

6) நாம் ஒரு சாதரண பிளாஸ்ரிக் பாக் ஐ அளையும்போது அல்லது ஒரு Carpet ல் நடக்கும்போது, நம் உடலில் 1200V இலிருந்து 20,000V வரையான Electro Static Voltage ஏற்றம் பெறுகிறது. குளிர் தேசங்களில் வாழ்பவர்கள் இதை அனுபவத்தில் கண்டிருப்பார்கள். Winter காலத்தில் ஒருவர் தனது சேட் ஐ கழற்றும்போது அதில் சிறிய பாசிமணிகள் மோதுவது போன்ற சத்தத்தை அல்லது சில பொருட்களை தொடும்போது மின்சாரம் கையிலிருந்து அப்பொருளின்மேல் வெளிச்சத்துடன் பாய்வதையும் கண்டிருப்பார்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-04-2004, 02:09 PM
[No subject] - by E.Thevaguru - 05-04-2004, 03:38 PM
[No subject] - by Mathan - 05-04-2004, 03:53 PM
[No subject] - by vasisutha - 05-04-2004, 08:25 PM
[No subject] - by anpagam - 05-04-2004, 11:04 PM
[No subject] - by E.Thevaguru - 06-05-2004, 04:56 PM
[No subject] - by Paranee - 06-06-2004, 06:07 PM
[No subject] - by E.Thevaguru - 06-07-2004, 01:23 AM
[No subject] - by ganesh - 06-11-2004, 12:01 AM
[No subject] - by Mathivathanan - 06-11-2004, 12:50 AM
[No subject] - by ganesh - 06-11-2004, 10:23 PM
[No subject] - by Mathivathanan - 06-11-2004, 10:47 PM
[No subject] - by ganesh - 06-11-2004, 11:04 PM
[No subject] - by E.Thevaguru - 06-13-2004, 01:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)