Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் கலாச்சாரம்
#7
3 வயது பாலகனை வெட்டிý கொன்ற தந்தை மனைவி, மாமியாருக்கும் கத்திவெட்டு

புலோலி வல்லிபுரக்குறிச்சி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல், குடும்பத்தகராறு காரணமாக தனது மூýன்று வயது மகனை வெட்டிýக்கொலை செய்த தந்தையொருவர், மனைவியையும், மாமியாரையும் வெட்டிýப் படுகாயப்படுத்தியதுடன், தன்னை தானே வெட்டிýயுமுள்ளார்.

குடும்பத் தகராற்றை தீர்க்க பொலிஸார் தனது வீட்டுக்கு ந்துகொண்டிýருப்பதை அவதானித்த பின்பே அவர் இந்த வெறியாட்டத்தை ஆடிýயுள்ளார்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:.

சீவல் தொழிலாளியான ராஜதுரை ராஜ்குமார் (33 வயது) என்பவர், ஹற்றன் டிýக்கோயாவைச் சேர்ந்த ஜெயந்திமாலா (30 வயது) என்பவரைக் காதலித்து மணம் முடிýத்தார்.

ஆனாலும், இவர்களுக்கிடையே அடிýக்கடிý குடும்பத்தகராறு ஏற்படவே, இவரது மனைவி தனது தாயாருடனும், பிள்ளையுடனும் டிýக்கோயாவுக்கு சென்றுவிட்டார்.

எனினும், பலத்த முயற்சியின் பின் டிýக்கோயா சென்ற இவர் அங்கிருந்த ஒருவாறு 3 வயது மகனுடன் வீடுவந்து சேர்ந்தார்.

அதேநேரம் தனது மனைவியை வருமாறு பலதடவை அழைத்த நிலையில் அவரும் அங்கிருந்து தாயாருடன் புலோலி வந்து சேர்ந்தார்.

ஆனாலும், இவர்களுக்கிடையிலான குடும்பத் தகராறு தொடரவே, மனைவி இது குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். விசாரணைக்காக பொலிஸாரும் நேற்று முற்பகல் வீட்டிýற்கு வந்துள்ளனர்.

பொலிஸார் வருவதை கண்டு கடும் சினமுற்ற நிலையில் தனது 3 வயது மகன் ராசாவை தூக்கி நிலத்திலடிýத்ததுடன் கத்தியால் வெட்டிý அவனை கொன்றுள்ளார்.

மகனை மீட்க வந்த மனைவியை கண்டபடிý வெட்டிýயதில் அவரது வலது கை தோள்மூýட்டிýற்கு கீழே துண்டாகி கீழே விழுந்தது.

மகளைக் காப்பாற்ற முயன்ற மாமியார் மீதும் கண்டபடிý வெட்டிýயதில் அவரும் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து, தனது தலை, கழுத்து, தோள் பகுதிகளில் வெட்டிýயதில் இவரும் படுகாயமடைந்தார்.

இவ்வேளையில் அங்கு வந்த பொலிஸார், படுகாயமடைந்த மனைவியையும், உயிரிழந்த மகனையும் மந்திகை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அதேநேரம், படுகாயமடைந்த நிலையில் இவரையும், இவரது மாமியாரையும் பொலிஸார், யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 05-31-2004, 11:25 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 12:34 AM
[No subject] - by Mathan - 06-01-2004, 01:48 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 02:15 PM
[No subject] - by Eelavan - 06-01-2004, 04:31 PM
[No subject] - by Mathan - 06-05-2004, 04:10 PM
[No subject] - by Mathivathanan - 06-05-2004, 04:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)