06-04-2004, 08:23 PM
மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் தேசியத் தலைவரால் பாராட்டி விருது வழங்கி கௌரவிப்பு
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் குறிப்பாக பத்திரிகை உலகில் பணியாற்றி தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் இனத்தின் எழுச்சிக்கும் மகத்தான சேவையாற்றிய கோபு என்று அழைக்கப்படும் எஸ்.எம்.கோபாலரத்தினம், தமிழீழ தேசியத் தலைவரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவரது கௌரவம் குறித்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை வருமாறு:
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
04-06-2004
மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் (கோபு) தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பாராட்டி விருது வழங்கிக் கௌரவிப்பு
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் குறிப்பாக பத்திரிகையுலகில் பணியாற்றி தமிழ்தேசியத்திற்கும், தமிழ் இனத்தின் எழுச்சிக்கும் மகத்தான சேவையாற்றி உள்ளார்.
எழுத்துத்துறையில் இவரின் எழுத்து நடையானது, கருத்துக்களின் முன்வைப்பு, முன்வைத்த கருத்துக்களுக்கு ஏற்ற தலைப்பால் மிகவும் வித்தியாசமானதாகவும் கூர்மைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வாசகர்களின் மனங்களை கவ்விப்பிடித்து அவர்களை அதன்பால் சிந்திக்க து}ண்டும் ஈர்ப்பினை கொண்டதாகவும் இருக்கும். வாசகர் பரப்பில் இருக்கக்கூடிய எல்லாத்தரப்பினரையும் கருத்தில் எடுத்து எளிய நடையில் புரியும் வகையில் சொற்களையும், சொற்தொடர்களையும் கையாண்டு ஆக்கங்களை படைத்துள்ளார்.
இதன்மூலம் எல்லா மக்களையும் போராட்டத்தின்பால் சிந்திக்க து}ண்டிய சேவையை மிகத்திறம்பட ஆற்றியுள்ளார். இவரின் இச்சேவையைப் பாராட்டி இன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் புலிச்சின்னம் பதித்த விருது வழங்கிக் கௌரவி;த்துள்ளார்.
பத்திரிகையாளனுக்கு இருக்கவேண்டிய முக்கிய பணியாகிய எதிர்காலத்தை நிகழ்காலத்துடன் இணைத்துக் கருத்துக்களை முன்வைக்கும் சிறப்பு இயல்பு இவரிடம் ஆழமாக குடிகொண்டிருந்தது இதனால் அவரது ஒவ்வொரு படைப்புக்களும், அந்த படைப்புக்களின் தலைப்புக்களும், உயிரோட்டமுள்ளவையாகவும் உள்ளன.
இத்தகைய ஒரு சிறந்த பத்திரிகையாளன் தொடர்ந்தும் தனது சேவையை ஆற்றி பத்திரிகை உலகிற்கும் தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலை வரலாற்றுக்கும் பெரும்பணியாற்ற வேண்டும் அத்துடன் வளர்ந்துவரும் இளைய ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதையும் தெரிவித்து அவரின் நீண்டகால சேவையை பாராட்டுவதோடு தொடர்ந்தும் சிறப்பாகப் பணியாற்ற எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>