06-04-2004, 06:53 PM
நல்லபுகைப்படம் எடுக்க உதவிகரமான சில அறிவுரைகள்.
புகைப்படம் எடுப்பது நபராக இருக்கும் பட்சத்தில். புகைப்படக்கருவியை அவரது கண் மட்டத்தில் வைத்திருத்தல் நல்ல பலனைக்கொடு;க்கும்.குழந்தைகளாக இருப்பின் குனிந்து அவர்கள் உயரத்திற்கு ஏற்றாற்போல் குனிந்து புகைப்படம் எடுக்கலாம். அதற்காக புகைப்படம் எடுக்கும் போது அவர்கள் புகைப்படக்கருவியைத்தான் பார்க்கவேண்டும் என்பதில்லை.
புகைப்படம் எடுப்பதற்கு முன் ஏற்கனவே சொன்னது போல் புகைப்படக்கருவியின் சட்டதினூடாக எடுக்கும் நபரையோ பொருளையோ சுற்றி என்ன இருக்கிறது என்ற பார்த்துக்கொள்ளவேண்டும். இதன்மூலம் தலையில் இருந்து மரம் முளைத்திருப்பது போன்ற காட்சிகளைத்தவிர்க்கலாம்.
மதியநேரம் தானே எதற்கு தனியாகவிளக்கு என்று புகைப்படக்கருவியில் பொருத்தியுள்ள விளக்குகை அலட்சியம் செய்யவேண்டாம். மதிய நேரத்தில் வெளிச்சம் அதிகம் இருப்பினும் முகத்தில் கண்களுக்கு கீழே மற்றும் கழுத்துப்பகுதியில் நிழல் கருமையாக தெரிய வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே புகைப்பட விளக்கைப்பயன்படுத்துவது அந்த நிழல்களை அகற்றி முகத்தை தெளிவாக்கும். வானம் மந்தமாக உள்ளபோது வேண்டுமானால் விளக்கைத்தவிர்த்தும் புகைப்படம் எடுக்கலாம்.
எடுக்கும் பொருள் காரைவிடச்சின்னதாயின் சற்று தள்ளி நின்று ஆனால் புகைப்படக்கருவியில் பெரிதாக்கி பதிவு செய்யலாம். பெரிதாக்கி எடுப்பதால் காட்சியில் அப்பொருள் பெரும்பகுதியை நிரப்புவது மட்டுமன்றி அதன் சிறு சிறு பாகங்களும் தெளிவாகத்தெரியும். ஆனால் காட்சியில் அப்பொருளை பெரிதாக நிரப்பவேண்டும் என்பதற்காக மிக அருகில் சென்று எடுப்பது நல்லதல்ல. அருகில் செல்வதால் அப்பொருள் தெளிவற்று பதிய வாய்புண்டு. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே புகைப்படக்கருவியை அருகில் கொண்டு செல்லலாம். அந்த குறிப்பிட்ட அளவை மீறும் போது காட்சி தெளிவற்றுப்போய்விடும். இதை அறிய உங்கள் புகைப்படக்கருவியுடன் வந்த கையேட்டில் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள்.
மலர்களை புகைப்படம் எடுப்பதற்கு தனியாக குவிவு வில்லைக்கண்ணாடிகளைப் பயன்படு;த்தவேண்டும்.
புகைப்படத்திற்கான காட்சியைத்தீர்மானிக்கும் போது முக்கியமான பொருளோ நபரோ மையப்பகுதில் இருக்கவேண்டும் என்பதில்லை. வலப்புறமோ இடப்புறமோ கூடஇருக்கலாம். மையப்பகுதில் இருப்பதைவிட ஒருப்பக்கமாக இருத்தல் அழகாகஇருக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் புகைப்படம் எடுக்கும் நபர் மையப்பகுதில் இல்லை என்றால் புகைப்படக்கருவியில் அவரை வைத்து காட்சியைத் தெளிவு செய்ய முடியவில்லை என்று கவலைப்படவேண்டாம் .புகைப்படக்கருவியைத்திருப்பி அவரை மையப்படுத்தி காட்சியைத் தெளிவு செய்தபின் எந்த மற்றமும் செய்யாது புகைப்படகருவியை திருப்பி, கோணத்தில் மட்டும் மாற்றம் செய்து தெளிவான புகைப்படம் எடுக்கமுடியும்
புகைப்படக்கருவில் பொருத்தியுள்ள விளக்கானது சுமார் பத்து முதல் பதினைந்து அடி தூரம் மட்டுமே வெளிச்சம் கொடுக்கும். ஆகவே இரவில் புகைப்படக்கருவில் உள்ளவிளக்கைப்பயன்படுத்தி தூரத்தில் உள்ள காட்சிகளை பதிவது எந்தப்பலனும் தராது. முடிந்தவரை நபரையோ அல்லதுபொருளையோ பத்தடி இடைவெளிக்குள் வைத்து புகைப்படம் எடுப்பது நலம்.
வசதிப்படி புகைப்படக்கருவியை திருப்பி காட்சியைப்பதியலாம். காட்சி சட்டத்தை அழகான கோணத்தில் நிரப்பவே;ண்டும் என்பதுதான் மிக முக்கியம்