06-01-2004, 09:26 PM
புகைப்படம் எடுப்பது ஓவியம் வரைவது போல ஒரு கலையாகத்தான் கருதப்படுகிறது. நீங்கள் எடுக்கின்ற புகைப்படம் நல்ல புகைப்படம எனப்படும்போது அது ஆண்டாண்டு காலத்திற்கும் உங்கள் பெயர் சொல்லும்.
புகைப்படம் எடுப்பது மிகவும் இலகுவானது என்று தான் எண்ணுகிறோம். அது உண்மை என்றபோதிலும் சில புகைப்படங்களே கலையம்சம் கொண்டதாக போற்றப்படுகிறது. நல்ல புகைப்படம் எடுப்பதற்கு நல்ல புகைப்படக்கருவியோ நல்ல ஒரு காட்சியோ மட்டும் போதாது கலைநுணுக்கம் அதை எடுக்கும் கோணம் வெளிச்சத்தின் அளவு என பலகாரணிகள் ஒன்று சேரவேண்டி உள்ளன. அவை மட்டுமன்றி சில விதிகளும் பின்பற்றப்பட வேண்டும் அவற்றை எல்லாம் பார்ப்பதற்கு முன் முக்கியமான இரண்டு செயல்கள் எவை என்று பார்ப்போம். அதில் ஒன்று காட்சியைத்தீர்மானிப்பது. மற்றையது காட்சியைப்பதிவு செய்வது.
காட்சியைத்தீர்;மானி;ப்பது என்பது எதை எடுக்கப்போகிறோம் என்பதை புகைப்படக்கருவியுூடாகப்பார்த்து நுணுக்கமாக தீர்மானிப்பதாகும். இச்சந்தர்ப்த்திலே நீங்கள் வேண்டாதவற்றை நீக்கி தேவையானதை மட்டும் புகைப்படக்கருவி ஊடாக தீர்மானித்துக்கொள்ளலாம்.; இங்கே சிறிது கலைநுணுக்கம் தேவைப்படுகிறது.
அடுத்த செயல் காட்சியை புகைப்டச்சுருளில் பதிவுசெய்வதாகும். இங்குதான் விஞ்ஞானம்(physics and chemistry) முழுமையாக உதவுகிறது எனலாம். வெளிச்சத்தையும் இரசாயனபதார்த்தங்களையும் பயன்படுத்தி காட்சியானது புகைப்பட்சுருளில் பதிவுசெய்யப்படுகிறது.