06-01-2004, 01:48 PM
எல்லாம் மறந்துவிட்டோம்!!பாணுக்கு கியூ, சீனிக்கு கியூ, ...
எல்லாம் மறந்துவிட்டோம்!!
அகதியாய் தெருவெங்கும்
ஓடி ஒளிந்ததுவும்,
அநாதரவாய் வீதிகளில்
அலைந்து திரிந்ததுவும்,
குண்டு வீச்சுக்காய்
குழிகளில் பதுங்கியதும்,
அண்டை அயலெல்லாம்
அவலமாய்ச் செத்ததுவும்!
கூடப்படித்தவர்கள்
காணாமற் போனதுவும்,
கூடித் திரிந்தவர்கள்
காட்டுக்கு ஓடியதும்!
வீதித்தடைகளில்
இறங்கி நடந்ததுவும்,
சென்றிக்கு சென்றி
சலாம் போட்டதுவும்!.
ஊரடங்கு, காவலரண்,
செம்மணி, சுடுகாடு,
பண்டுக்கு உள்ளே,
பண்டுக்கு வெளியே.!
பாணுக்கு கியூ,
சீனிக்கு கியூ,
பால்மாவுக்கு தட்டுப்பாடு,
பனடோலுக்குக் காத்திருப்பு.
கொழும்பு போக பாஸ்,
திரும்பி வர பாஸ்,
வடமராச்சிக்கு ஒரு பாஸ்,
வலிகாமம் இன்னோர் பாஸ்.
எல்லாம் மறந்துவிட்டோம்!
எதுவுமே நினைவில்லை!!.
போர் ஓய்ந்து போனதோடு,
ஓரிழவும் நினைவில்லை!.
பணம், பகட்டு மட்டுமல்ல
பஜாஜ் பல்ஸர் கூட
கண்களை மறைத்துக்
களியாட்டம் போடுதோ?
நாளொரு கொள்ளை,
பொழுதொரு கற்பழிப்பு!
நாலு பேர் கூடினால்,
நாளுக்கு ஒரு சண்டை!
ஹையேஸ் கடத்தல்கள்,
காசுக்கு வெருட்டல்கள்.
வாளெடுத்துச் சண்டைகள்,
தாளுடைத்துத் திருட்டுக்கள்.
இதுதானா நாம் பார்க்கும்
இன்றைய யாழ்ப்பாணம்?
இந்தச் சீரழிவுக்கா?
இத்தனை உயிரிழப்பு!!
நன்றி - ஈழநாதன்
எல்லாம் மறந்துவிட்டோம்!!
அகதியாய் தெருவெங்கும்
ஓடி ஒளிந்ததுவும்,
அநாதரவாய் வீதிகளில்
அலைந்து திரிந்ததுவும்,
குண்டு வீச்சுக்காய்
குழிகளில் பதுங்கியதும்,
அண்டை அயலெல்லாம்
அவலமாய்ச் செத்ததுவும்!
கூடப்படித்தவர்கள்
காணாமற் போனதுவும்,
கூடித் திரிந்தவர்கள்
காட்டுக்கு ஓடியதும்!
வீதித்தடைகளில்
இறங்கி நடந்ததுவும்,
சென்றிக்கு சென்றி
சலாம் போட்டதுவும்!.
ஊரடங்கு, காவலரண்,
செம்மணி, சுடுகாடு,
பண்டுக்கு உள்ளே,
பண்டுக்கு வெளியே.!
பாணுக்கு கியூ,
சீனிக்கு கியூ,
பால்மாவுக்கு தட்டுப்பாடு,
பனடோலுக்குக் காத்திருப்பு.
கொழும்பு போக பாஸ்,
திரும்பி வர பாஸ்,
வடமராச்சிக்கு ஒரு பாஸ்,
வலிகாமம் இன்னோர் பாஸ்.
எல்லாம் மறந்துவிட்டோம்!
எதுவுமே நினைவில்லை!!.
போர் ஓய்ந்து போனதோடு,
ஓரிழவும் நினைவில்லை!.
பணம், பகட்டு மட்டுமல்ல
பஜாஜ் பல்ஸர் கூட
கண்களை மறைத்துக்
களியாட்டம் போடுதோ?
நாளொரு கொள்ளை,
பொழுதொரு கற்பழிப்பு!
நாலு பேர் கூடினால்,
நாளுக்கு ஒரு சண்டை!
ஹையேஸ் கடத்தல்கள்,
காசுக்கு வெருட்டல்கள்.
வாளெடுத்துச் சண்டைகள்,
தாளுடைத்துத் திருட்டுக்கள்.
இதுதானா நாம் பார்க்கும்
இன்றைய யாழ்ப்பாணம்?
இந்தச் சீரழிவுக்கா?
இத்தனை உயிரிழப்பு!!
நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

