05-31-2004, 11:15 AM
[align=center:de8e3f4cb9]<img src='http://www.kumudam.com/reporter/030604/pg8-t.jpg' border='0' alt='user posted image'>[/align:de8e3f4cb9]
தோராபோரா. இது ஒரு மலைப்பிரதேசம். மலை என்றால் பறங்கிமலை மாதிரி மலை அல்ல. இமயமலை மாதிரி சிக்கல்மிக்க மடிப்புகள் கொண்ட ஒரு மலைத்தொடர். ஆப்கனிஸ்தானில் ஜலாலாபாத்துக்குத் தெற்கே இது அமைந்திருக்கிறது. நன்றாக கால் நீட்டிப்படுத்த காவல் தேவதை மாதிரி, இதன் கிழக்கு எல்லை பாகிஸ்தான் பார்டர் வரைக்கும் நீள்கிறது. பெஷாவர் நகரிலிருந்து ஆப்கனுக்குள் நுழைவதென்றால் தோராபோரா தரிசனமில்லாமல் முடியாது. கைபர் கணவாயைத் தாண்டிவிட்டால் தோராபோராவைக் கடந்துதான் ஊர்ப்பக்கம் போக முடியும். ஆப்கனிஸ்தானின் பிரசித்திபெற்ற நதிகளான வாஸிருதான், அகம்தன் போன்றவை இங்கேதான் உற்பத்தியாகின்றன.
இந்த மலைக்குப் பல விசேஷங்கள் உண்டு. இதன் பல பகுதிகள் மைசூர் சாண்டல் சோப் நிறத்தில் காணப்படும். இது ஓர் அபூர்வம். உலகில் வேறெந்த மலையும் வெளேரென்று இருக்காது. பனி மூடிய வெண்மை அல்ல இது. இயற்கையான பாறைகளின் வெண்மை. மேலும் எக்கச்சக்க இயற்கை குகைகளும் இங்கே உண்டு. கோடிக்கணக்கான ஆண்டுகள் இறுகிய இதன் மேற்புறம், குண்டு வீச்சில் சிறுவிரிசல் கூடக் கொள்ளவில்லை என்பது அமெரிக்கப் படைகளுக்கு இன்றுவரை தீராத ஆச்சர்யம். இயற்கையான குகைகள் தவிர, பின்லேடனின் அல்கொய்தா ஆட்கள் தமக்கென பிரத்தியேகமாகக் கட்டிக்கொண்ட செயற்கை குகைகளும் இம்மலைத்தொடரின் பல பகுதிகளில் உண்டு. யுத்த காலத்தில் வெறும் பேரீச்சம்பழ பாக்கெட்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு இங்கே குடிபெயர்ந்த பின்லேடனும் அவரது வீரர்களும் மாதக்கணக்கில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இங்கே தாக்குப்பிடிக்க முடிந்திருக்கிறது. யுத்த தளவாடங்கள், கம்ப்யூட்டர்கள், சாட்டிலைட் தொலைபேசிகள் மற்றும் பேரீச்சம்பழ பாக்கெட்டுகள். அவ்வளவுதான். ஆப்கன் யுத்தம் தொடங்கிய ஒன்பதாவது வாரம் இவற்றுடன், கழுதைகள் உதவியுடன் தோராபோராவுக்குக் குடிமாறி வந்து சேர்ந்தார் பின்லேடன்.
அதே ஒன்பதாவது வாரத்தில்தான் அமெரிக்கப் படைகளும் தோராபோராவைக் குறிவைத்தன. வடக்குக் கூட்டணிப் படைகளின் இன்ஃபார்மர்களாகச் செயல்பட்ட சில ஆதிவாசிகள்தான் முன்னதாக அல்கொய்தா ஆட்கள் மலைப்பகுதிக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்துச் சொல்லியிருந்தார்கள். பொதுவாக யாரும் மோப்பம் பிடிக்கிற விதத்தில் தமது நடமாட்டத்தை பின்லேடன் அமைத்துக்கொள்ள மாட்டார். ஒரே இரவில் இரண்டு மூன்று இடங்களில் அவரது ஆட்களைப் பார்த்ததாகக் குழப்பமான தகவல்கள் வரும். சம்பந்தமில்லாத நான்காவது இடத்துக்குத்தான் அவர்கள் போயிருப்பார்கள். இதுதான் வழக்கம். ஆனாலும், எப்படியோ அம்முறை அல்கொய்தாவினரின் நடமாட்டத்தைத் துல்லியமாக மோப்பம்பிடித்துத் தகவல் சொல்லிவிட்டார்கள் உளவாளிகள்.
உடனே புறப்பட்டுவிட்டது அமெரிக்க விமானப்படை. முதலில் சிறு உளவு விமானங்களை தோராபோரா மலையின் மீது பறக்கவிட்டார்கள். விமானங்கள் புறப்பட்டவுடனேயே வடக்குக் கூட்டணிப் படை வீரர்களையும், ஆதிவாசி வழிகாட்டிகளையும் நாலாபுறமும் முன்னேறச் சொல்லி அனுப்பிவிட்டு, ஒவ்வொரு குழுவுடனும் பத்து அல்லது பன்னிரண்டு அமெரிக்க வீரர்கள் உடன் சென்றார்கள். கவனிக்கவும். இவர்களும் ப்ரொஃபஷனல் தரைப்படை வீரர்கள் அல்ல. விமானப்படை வீரர்கள்தான். தரைப்படை அப்போதுகூட ஆப்கனுக்குள் நுழைந்திருக்கவில்லை. முன்பே பார்த்தபடி அதில் அவர்களுக்கு மிகுந்த தயக்கமே இருந்து வந்தது.
திட்டமிட்டு தோராபோரா மலையைச் சுற்றி வளைத்தன வடக்குக் கூட்டணிப் படைகள். அவர்களின் முதல் வெற்றி, மலையின் வடக்கு வாசலான மிலவா பள்ளத்தாக்கில் கிடைத்தது. ரஷ்யப்போரில் பங்குபெற்ற மூன்று சீனியர் வீரர்கள் அந்தப் படையில் இருந்தார்கள். அவர்கள் கண்ணில் ஒரு அல்கொய்தா பதுங்குமுகாம் தென்பட்டுவிட்டது. கவனமாக அடியெடுத்துவைத்து, சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவர்கள் நடத்திய தாக்குதலில் முதன்முதலாகச் சில அல்கொய்தா வீரர்கள் அங்கே பலியானார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட எஞ்சிய வீரர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் திருப்பித் தாக்கிவிட்டு கூடாரத்தைக் காலி செய்துவிட்டு ஓடிப்போனார்கள்.
ரஷ்யப் போரில் பங்குபெற்று தோராபோரா மலையின் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் அப்போது கூட்டணிப்படைக்கு ஆதரவாக இருந்ததுதான் அமெரிக்காவுக்கு அமைந்த மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். முதல் முகாமைக் கண்டுபிடித்த உற்சாகத்தில், அடுத்தடுத்து நாலைந்து முகாம்களை அவர்களால் சுலபமாகச் சுற்றிவளைக்க முடிந்தது. ஓரிடத்தில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது தாக்குப்பிடிக்க முடியாமல் அல்கொய்தாவினர் தப்பியோட முடிவு செய்யும்போது, ரேடியோ சிற்றலைகளைப் பயன்படுத்தி அடுத்த இடத்தில் பதுங்கியிருக்கும் தமது கூட்டாளிகளுக்குத் தகவல் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். கீழே யுத்தம் நடந்துகொண்டிருக்கும் அதேசமயம், மேலே உளவு விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் அமெரிக்க வீரர்கள் அந்த ரேடியோ அலைகளை இடைமறித்துக்கேட்டு அவர்கள் தப்பியோடும் பாதையைக் கண்டறிந்து சொல்வார்கள். உடனே, எதிர்ப்புறத்திலிருந்து கூட்டணிப்படையின் இன்னொருபிரிவு வந்துவிடும்.
இப்படியான திட்டமிட்ட செயல்பாட்டால், தோராபோராவில் வேட்டை தொடங்கிய முதல் சில தினங்களிலேயே அமெரிக்கக் கூட்டுப்படைக்குச் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகள் கிடைத்தன. சுமார் இருநூறு அல்கொய்தா வீரர்களை அவர்கள் அந்தத் தாக்குதல்களில் கொன்றார்கள். அதேசமயம் வடக்குக் கூட்டணிப்படைத் தரப்பிலும் இழப்பு கணிசமாகவே இருந்தது. மலைப்பகுதி, அல்கொய்தாவுக்கு ஹோம்லேண்ட் மாதிரி. மேலே இருந்துகொண்டு இருநூறு மீட்டர் தொலைவுவரை சளைக்காமல் சுடக்கூடிய நவீன ஆயுதங்களை அவர்கள் வைத்துக்கொண்டிருந்ததால், சகட்டுமேனிக்கு கூட்டு ராணுவப்படையிலும் இழப்புகள் ஏற்பட்டன.
அல்கொய்தாவின் படைபலம் குறைவாகவும், அமெரிக்கப் படையின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததால்தான் அந்தக் குறிப்பிட்ட தாக்குதலில் அமெரிக்காவால் நிறைய வெற்றி காண முடிந்தது என்பதையும் சொல்ல வேண்டும். பல இடங்களில் அல்கொய்தாவினர் சரணடையவும் முன்வந்தார்கள். நிபந்தனையற்ற சரணாகதிக்கு மட்டும் சம்மதித்தது அமெரிக்க ராணுவம்.
தோராபோராவில் அமெரிக்க ராணுவத்துக்குக் கிடைத்துவந்த வெற்றிகளைத் தொடர்ந்து எப்படியும் விரைவில் பின்லேடனைப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை உண்டானது. அதனால்தான் காலாட்படையையும் துணிந்து யுத்தம் தொடங்கிய பத்தாவது வார இறுதியில் கொண்டுவந்து இறக்கினார்கள். தரைப்படை வந்தது, பின்லேடனைப் பிடிக்க உதவியதோ இல்லையோ, அமெரிக்காவுக்காகப் போராடிக் கொண்டிருந்த வடக்குக் கூட்டணிப்படை வீரர்களுக்கு மிகுந்த தெம்பைத் தந்தது அது. மேலும் தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் கூடிய அவர்களது போர் வியூகங்கள் அவர்களுக்கு மிகவும் புதிதாக இருந்ததால், கூடுதல் பரவசம் தந்தது. தமது ஒத்துழைப்பைப் பரிபூரணமாகத் தந்து ஒருவழியாகப் பதினொராவது வார இறுதியில் தோராபோரா மலைப்பகுதியை முழுவதுமாகச் சுற்றிவளைத்து முன்னேற ஆரம்பித்தார்கள்.
இதனிடையே, மலைக்குகைகளை எப்படி கண்டுபிடிப்பது என்கிற சூட்சுமத்தை அமெரிக்க வீரர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். ஒரு பதுங்கு குகை என்றால் வாசல் தெளித்து, கோலம் போட்டா எண்ட்ரன்ஸ் இருக்கும்? இருக்கிற இடமே தெரியாதபடிதான் இருக்கும். இயற்கையான மலையின் மர்மங்களைப் பயன்படுத்தி, அதன் பள்ளங்களை லேசான பூச்சு வேலைகளுக்குப் பின் மேல்புறம் மூடி குகைகளாக்குவார்கள். உட்புறம் குடைந்து மறுவாசல் அமைப்பது ஒரு கட்டாயம். இது செயற்கை குகைகளில் மட்டும்தான். இயற்கையான குகைகள் என்பவை மிகவும் நீளமானவை. சில குகைகள் இருபது மீட்டர் நீளம்கூட இருக்கும்.
ஆனால், அமெரிக்கப்படை கண்டறிந்த அல்கொய்தாவின் செயற்கை குகைகள் மிகவும் சிறியவை. பத்துக்குப் பத்து அறை மாதிரிதான் அவை இருந்தன. ஆனால், மேல்புறம் ஓர் ஆள் நுழையும் அளவு மட்டுமே வழி இருந்தது. கடும் இருட்டுக்குக் கண்ணைப் பழக்கிக்கொண்டு உள்ளே இறங்கினால் மிகவும் குளிராகவும், கதகதப்பாக இருப்பதுபோலவும் ஒரே சமயத்தில் இருவேறு உணர்ச்சிகளை உணரலாம் என்று சொன்னார்கள் அமெரிக்க வீரர்கள்.
யாரும் கண்டுபிடித்து வராதவரை அங்கே பதுங்கியிருப்பது அல்கொய்தா வீரர்களுக்குப் பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால், சுற்றிவளைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து மேலே வந்து தப்பிப்பது மிகவும் கஷ்டம் என்பதால்தான், அவர்களில் பலர் சரணடைய வேண்டியதானது. இதுவிஷயத்தில் அமெரிக்கர்கள் செய்த ஒரே புத்திசாலித்தனமான காரியம் என்னவெனில், செயற்கை குகை ஒன்றை முதலில் கண்டுபிடித்த உடனேயே சுற்றிவளைக்காமல், அதன் மறுவாசல் எங்கே இருக்கும் என்று ஊகித்துத் தேடி முதலில் அதனை அடைத்துவிட்டு வந்து சுற்றி வளைத்ததுதான். அதனால்தான் அவர்களால் கொத்துக் கொத்தாகப் பல அல்கொய்தாவினரைப் பிடித்துவிட முடிந்தது.
இந்தச் சமயத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. யாருமே எதிர்பாராத விஷயம் அது. யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது யாராவது கேஷ§வலாக உட்கார்ந்து சிரித்தபடி ஒரு டி.வி. பேட்டி கொடுப்பார்களா? பின்லேடன் அதனைச் செய்தார்.
ஜலாலாபாத்துக்கு அருகே ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அந்த வீடியோ கேசட் (நவம்பரில் இது கிடைத்தது. அக்டோபர் 7_ம் தேதி யுத்தம் தொடங்கிய நாற்பத்திரண்டாவது தினம்.) திட்டமிட்டு தாலிபன் வீரர்களால் அங்கே விட்டுச் செல்லப்பட்டிருந்தது. செப்டம்பர்_11 சம்பவம் குறித்தான பின்லேடனின் பிரகடனங்களும், யுத்தத்தில் வீரர்கள் எழுச்சி கொள்ளும் விதமான வார்த்தைகளும், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் திரண்டுவந்து தாலிபன்களுக்கு உதவ வேண்டியது பற்றிய வேண்டுகோளும் அந்த வீடியோ கேசட்டில் இருந்தன. சவுதி அரேபியாவிலிருந்து பின்லேடனின் விருந்தாளியாக வந்திருந்த ஒரு ஷேக்குடன் (இவரது பெயர் அலிபின் அல்லது அல் காம்தியாக இருக்கலாம் என்று சி.ஐ.ஏ. சொன்னது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை.) பின்லேடன் பேசிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டிருந்தது அது.
அந்த டேப்பில் பின்லேடன் சொல்லியிருந்தவற்றுள் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. செப்டம்பர் 11_ம் தேதி தாக்குதல் பற்றிய அவரது வருணிப்பில் பின்வரும் தகவல்கள் இருந்தன:
1. தாக்குதலில் ஈடுபட்ட எமது வீரர்களுக்கு. அவர்கள் விமானத்தில் ஏறுவதற்குச் சில நிமிடங்கள் முன்புவரைகூட அவர்கள் எந்த இலக்கைத் தாக்க அனுப்பப்படுகிறார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அதேமாதிரி குழுக் குழுவாகப் பிரித்து செய்யப்படுகிறது இது என்றும் அவர்களுக்குத் தெரியாது. அதாவது, ஒரு விமானத்தில் ஏறும் வீரர்களுக்கு, அடுத்தபடியாக இன்னொரு விமானம் நம்மைத் தொடர்ந்து வரப்போகிறது என்பதே இறுதிவரை தெரியாது.
2. முதல் விமானம் இலக்கைத் தாக்கிய விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அடுத்தடுத்து குழுக்களில் இருந்தவர்கள் மகிழ்ச்சியில் கூத்தாடுவதாகக் கேள்விப்பட்டேன். திட்டத்தில் தம்மைத்தவிரவும் பலர் பங்குபெற்றிருக்கிற விஷயமே அவர்களுக்கு அப்போதுதான் தெரியும். அமைதியாக இருந்து காரியத்தை முடிக்கக் கேட்டுக்கொண்டேன்.
3. விமானத்திலுள்ள எரிவாயுவுலிருந்து தீ கிளம்பினால் அதன் வெப்பம் இரும்பை உருக்கும் என்று நான் நினைத்தேன். என் அனுபவத்தில் போட்ட கணக்குத்தான் இது. அது பிசகாமல், விமானம் மோதியதும் கட்டடத்தில் இருந்த இரும்புகள் உருகத் தொடங்கின. அதனால்தான் அழிவு சாத்தியமானது.
அமெரிக்கத் தாக்குதலில் பின்லேடன் சம்பந்தப்படவில்லை என்று தொடர்ந்து சொல்லிவந்த தாலிபன்களின் குரல் இதனால் அமுங்கிப்போனது. அமெரிக்காவின் பதில் தாக்குதலில் நியாயம் உள்ளதாக உலகம் பூரணமாக நம்ப ஆரம்பிக்கவும் இந்த வீடியோ டேப் மிகவும் உதவி செய்தது.
"என்னதான் இஸ்லாமிய சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்து அதில் பின்லேடன் பேசியிருந்தாலும், செப்டம்பர்_11 தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய விவரம் அதில் இருந்தபடியால் அது இஸ்லாமிய சமூகத்தினரிடையே எந்தவித அனுதாபத்தையும் உண்டாக்காது" என்று டொனால்டு ரம்ஸ்பீல்டு இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்தார்.
புஷ்ஷ§க்குத்தான் கோபம் தலைக்கேறி இருந்தது. பின்லேடன் கிடைக்கவில்லை. ஆனால், வீடியோ டேப் கிடைத்தது! நூற்றுக்கணக்கில் அல்கொய்தாவினர் சரணடைவதாகச் செய்தி வந்துகொண்டிருந்தாலும் (அது உண்மையும்கூட.) பின்லேடன் இருப்பிடம் பற்றியோ, முல்லா ஓமர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது பற்றியோ நம்பகமான ஒரு செய்திகூட அதுவரை வராததில் அவருக்கு மிகவும் கடுப்பானது. எதிர்பார்த்ததைவிடவும் போர் இழுத்துக்கொண்டே போவதும் அவருக்குக் கலவரமாக இருந்தது.
உண்மையில் ஆப்கன் என்பது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம் சைஸ்தான். அத்துனூண்டு இடத்தில் இரண்டு தலைகளைத் தேடிப்பிடிக்கத் துப்பில்லாமல் இப்படியா இழுத்துக்கொண்டிருப்பார்கள்?
'ஏதாவது செய்யுங்கள். அவனைப் பிடித்துவிட்டோம் என்று சொல்லுங்கள்' என்று தமது தளபதிகளுக்கு இறுதி உத்தரவு அனுப்பிவிட்டு, 'காபூல் எப்படி இருக்கிறது இப்போது?' என்று விசாரித்தார் ரம்ஸ்பீல்டிடம்.
காபூல். புராதனமான அந்த நகரம் அப்போது இருந்த நிலைமையை வெறும் சொற்களில் விவரித்துவிட முடியாது!
(தொடரும்)
Kumudam.com