05-30-2004, 08:02 PM
எங்கே போகிறோம்..........?
உலகம் இருபத்தோராம் நூற்றாண்டில்
காலடி வைக்கக் காத்திருக்கும் போது
நாம்
பதினேழாம் நூற்றாண்டின்
புழுதிக்குள்ளே மல்லாந்து கிடக்கின்றோம்.
செவ்வாய்க் கிரகத்திலிறங்கி
சோதனை நடத்துகிறது பாத்ஃபைன்டர்
இங்கே
மன்னார்த் தடைமுகாம் தாண்டும் தேதியறிய
பத்திரிகைகளுள் பரபரக்கிறோம்.
எங்கே போகிறோம் நாம்?!
எங்கே போகிறோம் நாம்?!
கத்தியில்லாமல் இரத்தமில்லாமல்
மூளைக்குள்ளேயே லேசர்க் கதிரினால்
நுட்பமான சத்திரசிகிச்சை நடக்கிறது
ஆனால் நாமோ
தலையிடிக்குப் போடப் பனடோலுக்கும்
வழியின்றி.......!
எங்கே போகிறோம் நாம்?!
அனல் மின்சாரம்
புனல் மின்சாரம்
நியோன் ஒளிவெள்ளம்
எலெக்ரோனிக் மின்நடனம்
என
நகரங்களெல்லாம் பிரகாசித்துப் பளபளத்து
நர்த்தனமாட......
நாம்
குப்பி விளக்கிற்கு எண்ணெய் தேடி
குடும்பக் காட்டுடன்
கியூ வில் நிற்கிறோம்
உண்மையில்
நாம் எங்கே போகிறோம்?!
மரங்களை வெட்டாதே
மலர்களைக் கொய்யாதே
உயிர்களைக் வதைக்காதே
மயில்களைச் சுடாதே
சூழலைக் கெடுக்காதே
என்றெல்லாம் உலகெங்கும்
குரல்கள் கேட்கிறதே!!!
இங்கே
பள்ளிக்குப் போன பயிர்
சுள்ளியாய் முறிந்து கிடக்கிறதே!
தட்டோடு பூ வேந்திப் போனவள்
பட்டாடை சிவப்புறப் புறபாதையிலே கிடக்கிறாளே!
மொட்டாக மலராக பூங்கொத்தாக பிஞ்சாக
கனியாக கனிக்கொத்தாக
எத்தனை குடும்பங்கள் வாழ்வழிந்து
போயினவே!
எங்காவது
எமக்காகக் குரல்கள் கேட்கிறதா?!
சத்தியமாக நாம் எங்கே போகிறோம்?!
- <b>தீட்சண்யன்</b> -
உலகம் இருபத்தோராம் நூற்றாண்டில்
காலடி வைக்கக் காத்திருக்கும் போது
நாம்
பதினேழாம் நூற்றாண்டின்
புழுதிக்குள்ளே மல்லாந்து கிடக்கின்றோம்.
செவ்வாய்க் கிரகத்திலிறங்கி
சோதனை நடத்துகிறது பாத்ஃபைன்டர்
இங்கே
மன்னார்த் தடைமுகாம் தாண்டும் தேதியறிய
பத்திரிகைகளுள் பரபரக்கிறோம்.
எங்கே போகிறோம் நாம்?!
எங்கே போகிறோம் நாம்?!
கத்தியில்லாமல் இரத்தமில்லாமல்
மூளைக்குள்ளேயே லேசர்க் கதிரினால்
நுட்பமான சத்திரசிகிச்சை நடக்கிறது
ஆனால் நாமோ
தலையிடிக்குப் போடப் பனடோலுக்கும்
வழியின்றி.......!
எங்கே போகிறோம் நாம்?!
அனல் மின்சாரம்
புனல் மின்சாரம்
நியோன் ஒளிவெள்ளம்
எலெக்ரோனிக் மின்நடனம்
என
நகரங்களெல்லாம் பிரகாசித்துப் பளபளத்து
நர்த்தனமாட......
நாம்
குப்பி விளக்கிற்கு எண்ணெய் தேடி
குடும்பக் காட்டுடன்
கியூ வில் நிற்கிறோம்
உண்மையில்
நாம் எங்கே போகிறோம்?!
மரங்களை வெட்டாதே
மலர்களைக் கொய்யாதே
உயிர்களைக் வதைக்காதே
மயில்களைச் சுடாதே
சூழலைக் கெடுக்காதே
என்றெல்லாம் உலகெங்கும்
குரல்கள் கேட்கிறதே!!!
இங்கே
பள்ளிக்குப் போன பயிர்
சுள்ளியாய் முறிந்து கிடக்கிறதே!
தட்டோடு பூ வேந்திப் போனவள்
பட்டாடை சிவப்புறப் புறபாதையிலே கிடக்கிறாளே!
மொட்டாக மலராக பூங்கொத்தாக பிஞ்சாக
கனியாக கனிக்கொத்தாக
எத்தனை குடும்பங்கள் வாழ்வழிந்து
போயினவே!
எங்காவது
எமக்காகக் குரல்கள் கேட்கிறதா?!
சத்தியமாக நாம் எங்கே போகிறோம்?!
- <b>தீட்சண்யன்</b> -
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

