05-29-2004, 02:30 PM
பிரிவு
இந்தக் கவிதையின் எளிமையும், நேர்மையும் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னைத் தூண்டின. மனிதன் பொய்களற்று இருந்தபோது பிறந்த கவிதை இது. காதலை மிக நேர்மையுடன் அணுகி அதன் மீது தெய்வீகச் சாயமெதையும் பூசாமல் நிர்வாணமாய் தரிசிக்கிறது கவிதை. அதனால் அப்போது காதல் தான் எவ்வளவு ஆழமாய் சுழித்துக்கொண்டு அவனை உள்வாங்கிக் கொள்கிறது!
இப்போது
என் படுக்கை
எவ்வளவு இருட்டாயிருக்கிறது.
உனது உடம்பு நிலவு.
உனது கண்கள் கலைமான்களுடையவை.
எனது வைரமே,
உனது கூந்தல் நீளமானது.
நீ என்னை
இரண்டு நாள் காதல் செய்தாய்.
இப்போது
உனது நிலத்துக்குப் போய்விட்டாய்.
இப்போது
என் படுக்கை
எவ்வளவு இருட்டாயிருக்கிறது.
மாமரக்கிளையில் குயில் அழுகிறது.
காட்டில் மயில் அழைக்கிறது.
நதிக்கரையில் கொக்கு குரல் கொடுக்கிறது.
இவற்றின் இசையை
நான் காதலியின் குரலாகத்
தவறாகப் புரிந்து கொள்கிறேன்.
இப்போது
என் படுக்கை
எவ்வளவு இருட்டாயிருக்கிறது.
சூரியனின் வெளிச்சத்தைத் திருடி
சந்திரன் எழுகிறது.
அவள் தொடைகளுக்கிடையில்
அவன் அமிர்தத்தைத் திருடுகிறான்.
மாமரக்கிளையை நீ உலுக்குகிறாய்.
நீ அதை கீழே இழுத்து முறித்துவிட்டாய்.
நீ என்னைக் காதலுக்காக அழ வைத்துவிட்டாய்.
நீ ஒரு கயிற்றை வெட்டி
கிளையோடு கட்டினாய்.
அதை அசைத்து அசைத்து கீழே தள்ளிவிட்டாய்.
சிக்னிமுகி கிராமத்தின்
ஒல்லியான பெண்
எனது வீட்டில்
என்னோடு காதல் வார்த்தைகள் பேசுகிறாள்.
வா,
நாம் காட்டிற்கு போவோம்.
நிலா மேலே வருகிறது
நிறைய நட்சத்திரங்களால் சூழப்பட்டு.
உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால்
உன் விருப்பம்போல் செய்.
ஆனால் உன்மேல் உள்ள காதலால்
நான் தூரத்துக்கு விலகிப் போகமாட்டேன்.
உன் பழக்க வழக்கங்கள் பற்றி
எனக்குக் கவலை இல்லை.
உன்நீதிநெறிகளைப் பற்றி
எனக்குக் கவலை இல்லை.
உனது நாக்கு
இனிப்பாக இருக்கும் வரையிலும்
நீ என்னைக் கவனித்துக் கொள்ளும் வரையிலும்
எதைப் பற்றியும் கவலை இல்லை.
உனது கிணற்றிலிருந்து
கொஞ்சம் தண்ணீர் கொடு.
எனது மனதைக் கழுவிக்கொண்டு
"மனமே அமைதியாக இரு"
என்று சொல்லிவிடுவேன்.
ஆனால் இதுபோன்ற ஒன்றை
என் உடம்பிற்கு நான் எப்படிச் சொல்லமுடியும்?
பெண்ணே,
நான் உன்னை விடவே மட்டேன்.
இங்கு என்ன இருக்கிறதோ
அதை நாம் இருவரும் சேர்ந்து சுவைக்கலாம்.
பூமித்தாய் முதலில் பிறந்தால்.
மனிதன் பிறகு தான் பிறந்தான்.
ஒவ்வொரு வேலியிலும் அவர்கள்
கொம்புகளை நடுகிறார்கள்.
உனக்குப் புரியாது பெண்ணே
உன்னை நான் விடவே மாட்டேன்.
நிலவுக்கு
வயது இரண்டு ஆகிறது.
அவர்கள்
வீட்டில் விளையாடுகிறார்கள்.
காதலியே,
உன்னைக் கனவில் கூடக் காண முடியவில்லை.
நடு இரவில் கண்விழித்து
உன்னைத் தேடிப் பார்த்தும்
என்னால்
உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை,
-சட்டிஸ்கார்ஹி மலையினப்பாடல்
(நன்றி - கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் - ஆதிவாசிக் கவிதைகள்,
தமிழில்: இந்திரன்.
வெளியீடு: INDP, பாண்டிச்சேரி.)
நன்றி - Thangamani
இந்தக் கவிதையின் எளிமையும், நேர்மையும் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னைத் தூண்டின. மனிதன் பொய்களற்று இருந்தபோது பிறந்த கவிதை இது. காதலை மிக நேர்மையுடன் அணுகி அதன் மீது தெய்வீகச் சாயமெதையும் பூசாமல் நிர்வாணமாய் தரிசிக்கிறது கவிதை. அதனால் அப்போது காதல் தான் எவ்வளவு ஆழமாய் சுழித்துக்கொண்டு அவனை உள்வாங்கிக் கொள்கிறது!
இப்போது
என் படுக்கை
எவ்வளவு இருட்டாயிருக்கிறது.
உனது உடம்பு நிலவு.
உனது கண்கள் கலைமான்களுடையவை.
எனது வைரமே,
உனது கூந்தல் நீளமானது.
நீ என்னை
இரண்டு நாள் காதல் செய்தாய்.
இப்போது
உனது நிலத்துக்குப் போய்விட்டாய்.
இப்போது
என் படுக்கை
எவ்வளவு இருட்டாயிருக்கிறது.
மாமரக்கிளையில் குயில் அழுகிறது.
காட்டில் மயில் அழைக்கிறது.
நதிக்கரையில் கொக்கு குரல் கொடுக்கிறது.
இவற்றின் இசையை
நான் காதலியின் குரலாகத்
தவறாகப் புரிந்து கொள்கிறேன்.
இப்போது
என் படுக்கை
எவ்வளவு இருட்டாயிருக்கிறது.
சூரியனின் வெளிச்சத்தைத் திருடி
சந்திரன் எழுகிறது.
அவள் தொடைகளுக்கிடையில்
அவன் அமிர்தத்தைத் திருடுகிறான்.
மாமரக்கிளையை நீ உலுக்குகிறாய்.
நீ அதை கீழே இழுத்து முறித்துவிட்டாய்.
நீ என்னைக் காதலுக்காக அழ வைத்துவிட்டாய்.
நீ ஒரு கயிற்றை வெட்டி
கிளையோடு கட்டினாய்.
அதை அசைத்து அசைத்து கீழே தள்ளிவிட்டாய்.
சிக்னிமுகி கிராமத்தின்
ஒல்லியான பெண்
எனது வீட்டில்
என்னோடு காதல் வார்த்தைகள் பேசுகிறாள்.
வா,
நாம் காட்டிற்கு போவோம்.
நிலா மேலே வருகிறது
நிறைய நட்சத்திரங்களால் சூழப்பட்டு.
உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால்
உன் விருப்பம்போல் செய்.
ஆனால் உன்மேல் உள்ள காதலால்
நான் தூரத்துக்கு விலகிப் போகமாட்டேன்.
உன் பழக்க வழக்கங்கள் பற்றி
எனக்குக் கவலை இல்லை.
உன்நீதிநெறிகளைப் பற்றி
எனக்குக் கவலை இல்லை.
உனது நாக்கு
இனிப்பாக இருக்கும் வரையிலும்
நீ என்னைக் கவனித்துக் கொள்ளும் வரையிலும்
எதைப் பற்றியும் கவலை இல்லை.
உனது கிணற்றிலிருந்து
கொஞ்சம் தண்ணீர் கொடு.
எனது மனதைக் கழுவிக்கொண்டு
"மனமே அமைதியாக இரு"
என்று சொல்லிவிடுவேன்.
ஆனால் இதுபோன்ற ஒன்றை
என் உடம்பிற்கு நான் எப்படிச் சொல்லமுடியும்?
பெண்ணே,
நான் உன்னை விடவே மட்டேன்.
இங்கு என்ன இருக்கிறதோ
அதை நாம் இருவரும் சேர்ந்து சுவைக்கலாம்.
பூமித்தாய் முதலில் பிறந்தால்.
மனிதன் பிறகு தான் பிறந்தான்.
ஒவ்வொரு வேலியிலும் அவர்கள்
கொம்புகளை நடுகிறார்கள்.
உனக்குப் புரியாது பெண்ணே
உன்னை நான் விடவே மாட்டேன்.
நிலவுக்கு
வயது இரண்டு ஆகிறது.
அவர்கள்
வீட்டில் விளையாடுகிறார்கள்.
காதலியே,
உன்னைக் கனவில் கூடக் காண முடியவில்லை.
நடு இரவில் கண்விழித்து
உன்னைத் தேடிப் பார்த்தும்
என்னால்
உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை,
-சட்டிஸ்கார்ஹி மலையினப்பாடல்
(நன்றி - கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் - ஆதிவாசிக் கவிதைகள்,
தமிழில்: இந்திரன்.
வெளியீடு: INDP, பாண்டிச்சேரி.)
நன்றி - Thangamani
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

