05-29-2004, 04:34 AM
புலிகளிடம் விமானம் இருப்பது குறித்து தாம் அச்சம் கொள்ளவில்லையென விமானப் படைத் தளபதி தெரிவிப்பு
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 29 மே 2004, 6:54 ஈழம் ஸ
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் விமானப் படை இருப்பது குறித்து அதிகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சிறிலங்காவின் விமானப் படைத்தளபதி எயார் மார்சல் டொனால்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் விமானத்தளம் ஒன்றிருப்பது தமக்கு முன்னரே தெரிந்த செய்தியெனக் குறிப்பிட்டுள்ள இவர், தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மிடமுள்ள விமானத்தை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மாத்திரமே பயன்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
தமது கட்டுப்பாட்டுப் பகுதியை மீறிப் படைக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்;குள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் பயணம் செய்யும் பட்சத்தில் அது போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகவே அமையுமெனவும் எயார் மார்சல் டொனால்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிடம் விமானத்தளம் ஒன்றிருப்பது குறித்து விடுதலைப் புலிகள் ஒத்துக்கொண்டிருப்பதும், அதுகுறித்து சிறிலங்கா விமானப்படை உத்தியோகபூர்வமாக கருத்து வெளியிட்டிருப்பதும் இதுவே முதற்தடவையாகும்.
விடுதலைப் புலிகளுடைய விமானங்கள் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவது போர் நிறுத்த மீறல் என்று தெரிவித்திருப்பதன் மூலம், அந்த விமானங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பறக்கமுடியும் என்பதை படைத்தளபதி ஒப்புக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>