Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் கேட்டவை
#24
தத்துவப் பாடல்களில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கண்ணதாசன் அவர்கள்,கண்கெட்ட பிறகு சூரியோதயம் என்ற பழமொழியை எவ்வளவு அழகாகப் பாடலாக்கியுள்ளார்,
ஆடிய ஆட்டமென்ன கூடிய கூட்டமென்ன என்ற வரிகளின் தொடர்ச்சியாய் வரும் இந்தப்பாடல்

இப்பாடலைப் கேட்கும் போது இன்னொரு பாடல் நினைவு வரும்,கடவுள் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான் என்ற ஆளவந்தான் படப் பாடல்தான் அது

படம்: ஆலயமணி
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: T.M.S

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இன்று ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

மனம்சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கண்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 04-14-2004, 06:55 PM
[No subject] - by Eelavan - 04-15-2004, 05:31 PM
[No subject] - by sOliyAn - 04-15-2004, 10:39 PM
[No subject] - by Mathan - 04-15-2004, 11:17 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:47 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:49 PM
[No subject] - by Eelavan - 04-30-2004, 02:02 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:47 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:56 AM
[No subject] - by Eelavan - 05-18-2004, 08:35 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:56 PM
[No subject] - by Eelavan - 05-18-2004, 09:59 PM
[No subject] - by shanmuhi - 05-18-2004, 11:00 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 12:11 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 08:01 AM
[No subject] - by shanmuhi - 05-20-2004, 09:26 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:18 AM
[No subject] - by shanmuhi - 05-22-2004, 05:42 PM
[No subject] - by Eelavan - 05-24-2004, 06:31 AM
[No subject] - by Eelavan - 05-26-2004, 03:13 PM
[No subject] - by shanmuhi - 05-26-2004, 09:04 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 03:03 PM
[No subject] - by vasisutha - 06-02-2004, 02:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)