Yarl Forum
நீங்கள் கேட்டவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீங்கள் கேட்டவை (/showthread.php?tid=7205)

Pages: 1 2


நீங்கள் கேட்டவை - Eelavan - 04-14-2004

அன்பு நெஞ்சங்களே காலத்தால் அழியாத அரிய பொருட்களை உடைய உங்களைக் கவர்ந்த திரையிசைப் பாடல்கள் ஈழ கீதங்களை இங்கே எழுதுங்கள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
படம் - நீர்க்குமிழி
இசை - வி. குமார்
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் - கண்ணதாசன்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா


- shanmuhi - 04-14-2004

அருமையான பாடல்.


- Eelavan - 04-15-2004

அச்சம் என்பது மடமையடா
படம் - மன்னாதி மன்னன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் டி..எம். செளந்தரராஜன்
பாடல் - கண்ணதாசன்

அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உரிமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நு¡றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........
கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நு¡றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பான் தமிழன்னை
ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நு¡றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நு¡றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா


- sOliyAn - 04-15-2004

பாடலாசிரியரை இணைத்தால் நல்லது!


- Mathan - 04-15-2004

sOliyAn Wrote:பாடலாசிரியரை இணைத்தால் நல்லது!

<b>ஆடி அடங்கும் வாழ்க்கையடா</b> மற்றும் <b>அச்சம் என்பது மடமையடா</b> இவை இரண்டும் கண்ணதாசன் இயற்றிய பாடல்கள்.


- Eelavan - 04-18-2004

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது "நீங்கள் கேட்டவை" மனதை விட்டு நீங்கா திரைப்படப்பாடல்கள் நயப்பு நிகழ்ச்சி

தத்துவப் பாடல்கள் போன்றே காதல் சுவை ததும்பும் பாடல்களிலும் சிறந்து விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன்

கேட்கும் தோறும் மனதுக்கு இனிமை தரும் இப்பாடல்கள் வரிசையில் ஆலயமணி படத்திலிருந்து ஒலிக்கும் இப்பாடல் அவரது நாவன்மைக்கு ஒரு சான்று
கணவனே கண்கண்ட தெய்வம் என்னும் பெண்கள் மத்தியில் காதலனைத் தெய்வமாக உருவகித்துப் பாடும் பெண்ணாக சுசீலாவின் குரல் பாடலுக்கு அழகு சேர்க்கின்றது

காதல் தேவன் கோவிலிலே இறைவன் மடியினிலே அடைக்கலமானதை இதோ அவர் குரலிலே கேட்போமே


- Eelavan - 04-18-2004

படம் : பாலும் பழமும்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : P.சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோவில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோவில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்


- Eelavan - 04-30-2004

காதல் தோல்விப் பாடலைக் கெட்டிருக்கிறோம்,கதாநாயகன் தாய் இறந்த துயரில் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்களைக் கேட்டிருக்கிறோம் இன்னும் நண்பர் பிரிவு ,உறவுகளினால் ஏமாற்றம் என்று பலவகையான சோகப்பாடல்களைக் கேட்டிருக்கின்றோம்

பொதுவாக சோகப்பாடல்கள் அர்த்தம் நிறைந்தவை என்பது பலரது கருத்து தத்துவப்பாடல்கள் என்று கூடச் சொல்லலாம் ஏனெனில் மனிதனுக்குக் கவலை மேலிடும் போதுதான் தத்துவ விசாரம் வருகின்ரது

பிரிவுத் துயர் கூறும் பாடல்கள் வரிசையில் மகளைப் பிரிந்த சோகத்தில் தந்தை பாடும் பாடல் உங்களுக்காக "நீங்கள் கேட்டவை"யில்

அவள் பறந்து போனாளே என்னை மறந் து போனாளே
படம் - பார் மகளே பார்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர்கள் - டி.எம். செளந்தரராஜன் - பி.பி. சிறீநிவாஸ்
பாடல் - கண்ணதாசன்

டி.எம் எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே


விடுகதையா......... இந்த வாழ - Chandravathanaa - 05-03-2004

<b>படம் - முத்து
பாடியவர் - ஹரிஹரன்
இசை - ஏ.ஆர்.ரகுமான்

[b]விடுகதையா......... இந்த வாழ்க்கை
விடை தருவார்......... யாரோ

எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ

ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழை என் நீதிக்குக் கண் உண்டு பார்வை இல்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விசமென்ன கறக்கவா முடியும்
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன? நான் செய்த தீங்கு என்ன?

[b]விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ </b>

வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்

மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவளென்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ...? இரண்டும் தீர்வதெப்போ...?

<b>விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ</b>

உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்கக் கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
தொல்லை நேராது தூயவனே!

கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப் பாடக் காத்திருக்கும் பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே....? நாங்கள் போவதெங்கே....?

http://www.yarl.com/articles.php?articleId=396


- Eelavan - 05-03-2004

பாடல் வரிகள் வைரமுத்து என நினைக்கிறேன்


- Eelavan - 05-03-2004

பறவைகள் போல் சுதந்திரமாக நீலவான் வெளியில் பறந்து திரியவும் அலைகள் போல் ஆடிக்களிக்கவும் யாருக்கு விருப்பமில்லை

சுதந்திர வானிலே சிறகடித்துப் பறக்கவிரும்பும் மக்கள் குரலாய் ஒரே கீதம் உரிமைக் கீதம் படிக்கும் கண்ணதாசனின் அற்புத வரிகள் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சி மூலம் உங்களை வந்தடைகின்றன



படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியது: T.M.சௌந்தரராஜன் குழுவினர்.
பாடல்: கண்ணதாசன்



அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

குழு:
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

குழு: சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

குழு:
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

குழு: பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே

குழு:
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

குழு:
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


- Eelavan - 05-18-2004

நிம்மதியான வாழ்வை விரும்பாதார் யார் ? ஓடி ஓடிப் பொன்னும் பொருளும் சேர்த்து வைத்துவிட்டு வாழ்வின் இறுதிக்காலத்தில் நிம்மதி தேடி அலையும் பலரைப் பார்த்திருக்கிறோம் இது கொஞ்சம் வித்தியாசமாக காதல் தோல்வியினால் மனமுடைந்து போன ஒருவர் குரலாக அமைகின்றது.

கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்ற வரிகள் காதலின் சோகத்தையும்...... எங்கே மனிதர் எவருமில்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்ற வரிகள் மனித குலத்தின் மீதே விரக்தியால் ஏற்பட்ட வெறுப்பையும் சுட்டுகின்றன.

நண்பர் குருவிகளுக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் என நினைக்கின்றேன் எப்படியிருப்பினும் உங்கள் அனைவருக்காகவும் நீங்கள் கேட்டவை.....


படம் : புதிய பறவை
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S


எங்கே நிம்மதி..... எங்கே நிம்மதி .........
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஹோ, இறைவன் கொடியவனே
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஓ, உறங்குவேன் தாயே
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


- Mathan - 05-18-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->
நண்பர் குருவிகளுக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் என நினைக்கின்றேன் எப்படியிருப்பினும் உங்கள் அனைவருக்காகவும் நீங்கள் கேட்டவை.....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:?: ஏன் குருவிக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று நினைக்கின்றீர்கள் ?


- Eelavan - 05-18-2004

மனிதனால் அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும் நான் என்றோ அல்லது எங்கே நிம்மதி என்றோ பாடத்தான் முடியும் குருவிகளால் இரண்டும் முடியுமே

மனிதன் இல்லாத இடத்தில் நிம்மதி கிடைக்குமெனின் குருவிகளால் தேடிப்போக முடியும் மனிதனால்?
(எப்படித் தப்பித்துக்கொண்டேன் பார்த்தீர்களா?)


- shanmuhi - 05-18-2004

Å¡Éõ ±ýÉ Å¡Éõ ¦¾¡ðΠŢ¼Ä¡õ
¦ÅøÖõŨà šú쨸 ¦ÅýÚ Å¢¼Ä¡õ
Å¢øÄ¡¸ Å¡ÉÅ¢ø¨Ä ¨¸Â¢ø ²ó¾ §ÅñÎõ
«õÀ¡¸ Á¢ýÉø¸¨Ç «ûÇ¢ Åà §ÅñÎõ
¿¢Ä×ìÌ §Á§Ä ¿¢ýÚ §ƒ §À¡¼§ÅñÎõ
Å¢ñ¦ÅǢ¢ý §Á§Ä Òø¦ÅÇ¢ ¨Åô§À¡õ
Òø¦ÅǢ¢ý §Á§Ä âòÐ ¸¢¼ô§À¡õ

(Å¡Éõ ±ýÉ Å¡Éõ)

¦¿ïº¢§Ä þó¾ ¦¿ïº¢§Ä
¸¼ø ¦À¡í̧¾ ¬Éó¾Á¡ö
¨¸Â¢§Ä þó¾ ¨¸Â¢§Ä
¦ÅüÈ¢ Åó¾§¾ ¬ÃõÀÁ¡ö
«¼ šɢø þý§È ¾¢ÈôÒ Å¢Æ¡
þÉ¢ Å¡ú쨸 ±íÌõ źó¾í¸Ç¡
¸¼Öì¸¢í§¸ ¨¸¸û ¾ð¼ ¸üÚ ¾ó¾¢¼Ä¡õ
â×즸øÄ¡õ ¦Ã쨸¸û ¸ðÊ ÀÈì¸ ¦º¡øÄ¢¼Ä¡õ

(Å¡Éõ ±ýÉ Å¡Éõ)

¦º¡ó¾Á¡ö ´Õ ÝâÂý
«ó¾ Å¡Éò¨¾ §¸ð¼¡¦ÄýÉ
þø¨Ä§Âø ¿¡õ ¦º¡ó¾Á¡ö
´Õ Å¡Éò¨¾ ¦ºö¾¡ø ±ýÉ
² â§Å â§Å ±ýÉ º¢Ä¢÷ôÒ
¯ý Å¡ºõ ±øÄ¡õ Å£ðÎì¸ÛôÒ
º¢¸Ãõ ±ýÉ º¢¸Ãõ ±øÄ¡õ º¢ýÉ ÒûÇ¢¸§Ç
¸¡üÚ츢ø¨Ä ¸¡üÚ츢ø¨Ä ÓüÚ ÒûÇ¢¸§Ç...

(Å¡Éõ ±ýÉ Å¡Éõ)


- Mathan - 05-19-2004

<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Eelavan+--><div class='quotetop'>QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->
நண்பர் குருவிகளுக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் என நினைக்கின்றேன் எப்படியிருப்பினும் உங்கள் அனைவருக்காகவும் நீங்கள் கேட்டவை.....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:?: ஏன் குருவிக்கு இந்த பாடல் பிடிக்கும் என்று நினைக்கின்றீர்கள் ?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->மனிதனால் அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும் நான் என்றோ அல்லது எங்கே நிம்மதி என்றோ பாடத்தான் முடியும் குருவிகளால் இரண்டும் முடியுமே  

மனிதன் இல்லாத இடத்தில் நிம்மதி கிடைக்குமெனின் குருவிகளால் தேடிப்போக முடியும் மனிதனால்?
(எப்படித் தப்பித்துக்கொண்டேன் பார்த்தீர்களா?)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சமாளிபிகேஷன்? சரி பிழைத்துப் போங்கள்.


- Eelavan - 05-20-2004

பார்க்காத காதல்,பேசாத காதல்,தொலைபேசியில் காதல்,இணையத்தில் காதல் என்று அனைத்தையும் பார்த்துவிட்டோம்,இதுவும் ஒரு காதல்தான்.அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாலென்று கண்கள் பூப்பூக்க கனவுகளில் விழுந்த காதல்.

கன்னியவள் உள்ளமதைக் கொள்ளை கொண்ட காதலன், தன் எண்ணத்தை மனதிலிருத்தி உருவத்தை விழியிலிருத்தி வாடிய கொடிபோல் கிடக்கும் பெண்ணை அவள் மனதைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்கின்றான் அந்தப் பிரிவுத்துயரை காதலியின் குரலில் கேளுங்கள்


படம்: காத்திருந்த கண்கள்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல்: கவியரசு கண்ணதாசன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்




ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...

ஆசையெனும் மேடையிலே... ஆஆ
ஆடிவரும் வாழ்வினிலே... ஏஏ
ஆசையெனும் மேடையிலே ஆடிவரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...

கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்... ஓ .. ஆ ..
பாட்டு வரும் வெளியினிலே... ஏஏ
கூட்டுக்குள்ளே குயில் இருக்கும் பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே குயிலிருந்தும் பயனில்லே
ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் கரையினிலே...
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே


- shanmuhi - 05-20-2004

கூட்டுக்குள்ளே குயில் இருக்கும் பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்தபின்னே குயிலிருந்தும் பயனில்லே

«Õ¨ÁÂ¡É Åâ¸û.


- Eelavan - 05-22-2004

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என தமிழில் ஒரு முதுமொழி உண்டு.கண்ணால் பார்க்கும் எதையும் நம்பி விடுவதும் அதைப்போல நடக்க முயற்சிப்பதும் மனித மனம்.அதனால் தான் என்னவோ கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் முன்னோர்.

இன்று பெருகிவரும் சினிமா மோகமும் அதனைப் பார்த்துவிட்டு அதனை மாதிரியே செய்யத்துடிக்கும் என் போன்ற இளைஞர்களுக்கும் நல்லதொரு சாட்டை
நான் ரசித்த இந்த வரிகள்
"பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்"

உங்கள் அனைவருக்காகவும் நீங்கள் கேட்டவையில்


படம் : பணம் படைத்தவன்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன் ?
பாடியவர் : T.M.சௌந்தரராஜன்

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா


- shanmuhi - 05-22-2004

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

அருமையான வரிகள்