05-27-2004, 03:50 PM
நட்பாகுமா?
தேர் நேராய் செல்லாமல்
திசை கொஞ்சம் மாறினால்
தடைப் போட்டுத் திருப்பாமல்
தடம் புரளச் செய்யவோ!
நீர்மூடிய சேற்றினில் - நீ
நீராட இறங்கையில்
'நில்' என்று சொல்லாமல்
நீந்தென்று தள்ளவோ!
கள்ளினுள் விழும் வண்டாய் - நரிவால்
கவ்விடும் வயல் நண்டாய் - நீ
தொல்லையைத் தேடிப்போய்
'தொப்' பென்று விழுகையில்
தூரத்தே ஓடுதல் நட்பாகுமா?!
நன்றி - பனசை. நடராஜன்
தேர் நேராய் செல்லாமல்
திசை கொஞ்சம் மாறினால்
தடைப் போட்டுத் திருப்பாமல்
தடம் புரளச் செய்யவோ!
நீர்மூடிய சேற்றினில் - நீ
நீராட இறங்கையில்
'நில்' என்று சொல்லாமல்
நீந்தென்று தள்ளவோ!
கள்ளினுள் விழும் வண்டாய் - நரிவால்
கவ்விடும் வயல் நண்டாய் - நீ
தொல்லையைத் தேடிப்போய்
'தொப்' பென்று விழுகையில்
தூரத்தே ஓடுதல் நட்பாகுமா?!
நன்றி - பனசை. நடராஜன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

