05-27-2004, 03:37 PM
ஒருநாள் காலை ரவியின் அம்மா சித்திரகுப்தன் பூசை நடத்தினார். அப்பூசையின் போது ராமருக்கு ஒரு சிறு குறிப்பெழுதுவது மரபு என்றும் அதனை என்னை எழுதும்படி எனது மாமியார் வேண்டுகிறார் என்றும் எனக்கு விளக்கப்பட்டது. நான் ஜூத இனத்தில் பிறந்து அச்சமயத்தை நடைமுறையில் பின்பற்றாத போதும் ஜூத சமயமல்லாத ஒன்றில் நான் ஈடுபடுவது முடியாத காரியம் என்று நினைத்தேன். என்னை இந்து சமயத்திற்கு இழுக்க எனது மாமியார் முயலுகிறார் என்று நான் முதலில் சிறிது குழப்பமுற்றேன். இந்து சமயம் யாரையும் அதற்குள் இழுப்பதில்லை நான்தான் தவறாக நினைத்துவிட்டேன் என்று பின்னர் உணர்ந்து கொண்டேன். எனது மாமியார் இந்து சமயத்தை விடாது இஸ்லாம், கிறீஸ்தவ சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதையும் அவதானித்தேன்.
எமது திருமணம் நடந்து நான்கரை வருடங்கள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகள் என் கணவருடன் வாழ்ந்த பின்னர் இப்போது அவரது பண்பாடு என்னில் ஒரு பகுதியாகிவிட்டது. இருவர் அன்புடன் கூடி வாழும் போது இவ்வாறு ஏற்படுவது இயல்பான ஒன்றே. சக இந்தியரை விட எனக்கு இந்தியப் பண்பாடு பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது. நான் இந்திய இசை, திரைப்படங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் கலந்து கொள்கிறேன். மற்றைய இந்தியப் பெண்களைப் போலவே தற்கால பாடகர்கள் நடிகர் பற்றிய விபரங்களும் பொலிவுட் gossip களும் எனக்குத் தெரிந்திருக்கிறது. இந்திய இசையையும் திரைப்படங்களையும் ரசிக்கப் பழகிவிட்டேன். புதியதான எதனையும் நீண்ட காலம் கேட்டு வந்தால் அதனை ரசிக்கலாம் என்று உணர்ந்து கொண்டேன். எனது புலன்கள் அனைத்தும் விழித்துக் கொண்டதுடன் இந்திய விஷயங்களையே விரும்புகிறது. நான் spicy உணவை உண்ணப் பழகிக் கொண்டதுடன் இப்போது அந்த உணவையே என் நா விரும்புகிறது. ரஷ்யர்களுடனோ அல்லது புதிதாக அமெரிக்க பண்பாட்டில் மூழ்கியவர்களுடனோ அன்றி இந்தியருடன் பழகுவது எனக்கு முழுமையான திருப்தியைத் தருகிறது. நான் உறைப்பைக் குறைத்து ரஷ்ய மயமாக்கிய இந்திய உணவைச் சமைக்கிறேன். என் கணவர் அந்த உணவு தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறுகிறார்.
சாதாரண இனக்கலப்புத் திருமணங்களை விட எமது திருமணத்தில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால் நாம் எம்மை மேலும் விருத்தியாக்குவதற்கு முயலுவதுடன் நாளுக்கு நாள் ஒருவரை ஒருவர் மதிக்கவும் மேலும் மேலும் அன்பு பாராட்டவும் பழகி வருகிறோம். ஒருவர், மற்றவரது பண்பாடு, குடும்ப உறவு, வாழ்க்கை முறை பற்றி தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம். நாம் இருவரும் ஒருவர் மற்றவரது மொழியைப் படிக்கிறோம். வரலாற்றையும் இலக்கியங்களையும் வாசித்து விவாதிக்கிறோம். ஒருவரது இனத்திலுள்ள இசை, கலைகள் பற்றி மற்றவர் அறிந்து கொள்கிறோம். ஒருவரது ஆங்கில accent யை மற்றவர் கேலி செய்து சிரித்து மகிழ்கிறோம். ரஷ்ய ஹிந்தி மொழிகளிலிருந்து code words யை உருவாக்கி ஆங்கிலத்துடன் கலந்து பேசுகிறோம். இன, புவியியல் வேறுபாடுகளுக்கிடையில் எமது ஆன்மாவும், வாழ்க்கை முறையும், கருத்துகளும், பின்னணியும் ஒன்று போலவே இருக்கின்றன. எனது கணவருடன் எனக்குள்ள இத்தகைய நெருக்கத்தை அமெரிக்க பண்பாட்டில் வளர்ந்த ஒருவருடன் ஒருபோதும் பெற்றிருக்க மாட்டேன் என்று எனக்கு இப்போது நன்கு தெரிகிறது. எனது கணவர் எனது பண்பாட்டுடன் மீண்டும் என்னைத் தொடர்புபடுத்த உதவுகிறார். இந்தியக் கணவருடன் வாழும் போது அமெரிக்க பண்பாட்டை விட ரஷ்ய பண்பாட்டுடன் எனக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
எமது குழந்தைக்குப் பெயர் தெரிவு செய்த போது பல இந்திய, ஜூத பெயர்கள் ஒரே மாதிரி ஒலித்ததை அறிந்து கொண்டோம். நாம் Baruk என்ற பெயரைத் தெரிவு செய்தோம். Hebrew மொழியில் Baruch என்ற பெயருக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் அதாவது blessed என்று கருத்தாகும். ஹிந்தியில் Baruka என்பதற்கு பொறுப்புள்ளவன், பாரத்தை அகற்றுபவன் என்பது அர்த்தமாகும். இரண்டு பண்பாடுகள் கொண்ட எமது வீட்டில் மகனை வளர்க்கும் போது இன்னும் அதிக சவால்கள் ஏற்படலாம். எப்படி இரண்டு விதமான அதாவது ரஷ்ய ஜூதப் பண்பாட்டிலும் இந்தியப் பண்பாட்டிலும் எமது மகனை வளர்க்கப் போகிறோம்? தனது மரபுகளில் பெருமையுள்ளவனாக அதே நேரம் மற்றைய பண்பாடுகளை மதிக்கும் உலகப் பிரஜையாக எப்படி அவனை வளர்த்தெடுக்கப் போகிறோம்? நாம் ஜூத இந்து மரபுகளில் அவனுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யச் சொல்லப் போகிறோமா? அல்லது நாமே அவனுக்காக ஒன்றைத் தெரிவு செய்யப் போகிறோமா? இந்த முக்கியமான கேள்விகளை எதிர் நோக்குவதற்கு நாம் தயாராகி வருகிறோம்.
இதுவே அந்த நீண்ட கடிதம். இதில் கலப்பு மணம் செய்தவர்களை, செய்ய விரும்புகின்றவர்களைச் சிந்திக்க வைக்கும் பல அம்சங்கள் உள்ளன. கலப்பு மணத்தில் எதிர் நோக்கக் கூடிய சவால்கள் என்னென்ன என்று இக் கடிதம் தொட்டுக் காட்டுகின்றது. ஆயினும் இருவரும் கருத்தொருமித்தவர்களானால் திருமணத்தில் ஏற்படும் எந்தச் சவால்களையும் சுமுகமாக எதிர் கொள்ள முடியும்.
நன்றி - சந்திரலேகா/திண்ணை

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>