Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆய்த எழுத்து
#18
"ஆய்த எழுத்து': திரை விமர்சனம்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்திருக்கிறது மணிரத்னத்தின் "ஆய்த எழுத்து'.

சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. பைக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கிறார் சூர்யா. அவரை காரில் பின் தொடர்கிறார் மாதவன். அதே பாலத்தில் காதலி த்ரிஷாவின் சம்மதத்துக்காக தவம் கிடக்கிறார் காதலன் சித்தார்த். சூர்யாவை நெருங்கியதும் துப்பாக்கியால் சுடுகிறார் மாதவன். சூர்யாவை மாதவன் சுட்டது எதற்காக... "ப்ளாஷ் பேக்' நீள்கிறது.

கல்லூரி மாணவரான சூர்யா அரசியலுக்கு வர முடிவு செய்கிறார். அவரது நடவடிக்கைகள் அமைச்சரான பாரதிராஜாவுக்கு தலைவலியாக அமையவே மாதவனை வைத்து அவரை சுட வைக்கிறார்.

குண்டடிப்பட்ட சூர்யாவை காப்பாற்றுகிறார் சித்தார்த். சூர்யாவுடன் அவரும் அரசியலில் நுழைய தயாராகிறார். மாதவனும் அவர்களுடன் இணைந்தாரா, இல்லையா. சூர்யா ஜெயித்தாரா என்பதை படம் விவரிக்கிறது.

விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படத்தில் இடையில் தொய்வு ஏற்படுகிறது. அதே சமயம் மாதவன், தனது அண்ணனை சுட்டுக் கொன்ற பின்னரே மீண்டும் ஒருவித ஈர்ப்பு படத்தின் மீது ஏற்படுகிறது. அந்த இறுதிக்கட்ட காட்சிகள் தான் "ஆய்த எழுத்து'க்கு பலம்.

சித்தார்த் -த்ரிஷா கேரக்டர், படத்தை இளமைத் தனத்துடன் காட்ட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த கதைக்கு சித்தார்த் கேரக்டர் தேவைதானா என்பதை மணிரத்னம் யோசித்திருக்கலாம்.

சுயநலவாதியாக சித்திரிக்கப்படும் சித்தார்த், உயிரைப் பணயம் வைத்து சூர்யாவைக் காப்பாற்றுவது, அவருடன் அரசியலில் நுழைவது நம்பும்படியாக இல்லை.

"நெஞ்சமெல்லாம்' பாடலில் அத்னான் சமியின் அந்த குரலும், ரஹ்மானின் இசையும் இதயத்தில் நுழைந்து இதம் தருபவை. படம் வரும் முன் இப்பாடலைக் கேட்டபோது இப்படித்தான் உணர முடிந்தது. ஆனால் படத்தில் அப்பாடலை படமாக்கியுள்ள விதம், அந்த சூழல் எரிச்சலூட்டுகிறது.

பேசிப் பேசியே நேயர்களை தனது பித்தர்களாக்கிவிட்ட ரேடியோ மிர்ச்சி சுசித்ராவை, நடிக்க வாய்ப்பளித்துவிட்டு வசனமே தரவில்லையே.

கணவனைப் பிரிந்த மீரா ஜாஸ்மின் என்ன ஆனார் என்பதை காட்டாததும் "மைனஸ்'.

இந்த குறைகளுக்கிடையே நிறைகளை தெளிப்பதில் சூர்யா, மாதவனின் கேரக்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

தலையில் சின்ன சின்ன முடிகளுடன் நக்கலான சிரிப்புடன் மெட்ராஸ் தமிழில் பேசும்போது நிஜ ரெüடியும் மீரா ஜாஸ்மினை அடித்து துன்புறுத்தும்போது சேரியில் வாழும் போக்கிரி கணவனும் "இன்பா' போலத்தான் இருப்பான் என சொல்லவைக்கிறார் மாதவன்.

"இளம் ரத்தம், அதுதான் கொதிக்கிறது' என்பார்களே சூர்யாவின் நடிப்பு, அந்த சொல்லுக்கு அர்த்தம் புகட்டுகிறது. படத்துக்குப் படம் நடிப்புடன் தோற்றத்தையும் மாற்றி ஏற்றம் கண்டு வருகிறார் இந்த இளைய சூரியன். ஒவ்வொரு படத்திலும் சூர்யா நடிப்பில் புதுமை செய்தாலும் கோபக்கார இளைஞனாகவே (பேரழகனில் கூட குத்துச் சண்டைக்காரன் வேடம்) எல்லாப் படங்களிலும் சித்திரிக்கப்படுகிறார். சூர்யா இதை கவனிக்க வேண்டும்.

மணிரத்னத்தின் எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நாயகிக்கு ஒரு தனி முக்கியத்துவம் இருக்கும். படத்தின் கதையும் அவளை சார்ந்து இருக்கும். ஆனால் இதில் அப்படி இல்லை. இஷா, த்ரிஷா அழகுக்கும் குறும்புக்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள். கேரளா "கேக்' மீரா ஜாஸ்மின் மட்டும் தான் இதில் விதிவிலக்கு. முரட்டுக் கணவனிடம் அடிபட்டதால் அவனிடமிருந்து ஒதுங்குவதும் காதல் வந்ததும் அவனை அரவணைப்பதும் என மீரா, யதார்த்தமாகியிருக்கிறார்.

பாரதிராஜா பற்றி சொல்லியே ஆக வேண்டும். அப்பழுக்குடைய அரசியல்வாதியாக வந்து நடிப்பில் ஆர்ப்பரிக்கிறார். தைலம் போட்ட சூடு நீர் அண்டாவில் முகத்தை விட்டு, உடலை போர்த்திக் கொண்டு ஆவேசமடையும் பாரதிராஜா, நடிப்பிலும் தான் "ராஜா' எனக் காட்டியிருக்கிறார்.

ரஹ்மானின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் படத்துக்கு "ப்ளஸ்'. குறிப்பாக "ஜனகணமன' பாடலும் அதை படமாக்கிய விதமும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவில் மழையில் அந்த கபடி காட்சி, அழகு.

மூன்று பேரின் கதையை மூன்று "பிளாஷ் பேக்'காக காட்டியிருப்பது புதுமை.

விறுவிறுப்பான திரைக்கதையை நாடுவதாக இப்படத்தின் "தீம்' உள்ளது. தனது பாணியிலிருந்து சிறிது விலகி இன்னும் வேகமாக படத்தை கொண்டு சென்றிருக்கலாம் மணிரத்னம். அதே சமயம் படத்தில் தொய்வு ஏற்படும்போதொல்லாம் அடுத்து ஒரு நல்ல காட்சியுடன் படத்தை தூக்கி நிறுத்திவிடுகிறார்.

அரசியல் ஒரு சாக்கடை என இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருந்தால் போதாது. சாக்கடையில் இறங்கி அதை சுத்தப்படுத்த வேண்டும் என நல்ல செய்தியுடன் வந்திருக்கிறார் மணி. கை கொடுக்கலாம்.

நன்றி - திணமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
ஆய்த எழுத்து - by shanmuhi - 03-19-2004, 08:45 PM
[No subject] - by shanmuhi - 03-23-2004, 11:52 AM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 12:58 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 02:03 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 05:57 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 06:43 PM
[No subject] - by Eelavan - 03-24-2004, 05:21 AM
[No subject] - by shanmuhi - 03-24-2004, 10:42 AM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 10:15 AM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:10 PM
[No subject] - by Mathan - 04-02-2004, 01:56 PM
[No subject] - by sWEEtmICHe - 04-03-2004, 03:53 PM
[No subject] - by shanmuhi - 05-01-2004, 10:43 AM
[No subject] - by Mathan - 05-26-2004, 06:25 PM
[No subject] - by Eelavan - 05-26-2004, 06:32 PM
[No subject] - by tamilini - 05-26-2004, 06:45 PM
[No subject] - by kuruvikal - 05-27-2004, 12:23 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:11 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:19 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 12:24 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 02:36 PM
[No subject] - by Mathan - 05-28-2004, 09:27 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 09:32 PM
[No subject] - by Mathan - 05-28-2004, 10:34 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:47 PM
[No subject] - by tamilini - 06-15-2004, 03:57 PM
[No subject] - by Mathan - 06-23-2004, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)