05-27-2004, 02:37 PM
[b]இந்தியாவில் தடை நீடிப்பு துரதிஷ்டவசமானது விமானப்படை எம்மிடம் இருப்பது உண்மை: தமிழ்ச்செல்வன்.
வீரகேசரி வியாழக்கிழமை, 27 மே 2004,
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்தியா நீடித்துள்ளமை துரதிஷ்டவசமான நிகழ்வாகும். புலிகளை இந்தியா அங்கீகரித்து தார்மிக ஆதரவினை வழங்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் உணர்வும், எதிர்பார்ப்புமாகும். ஆனால் இதற்கு மாறாக தடையை இந்தியா நீடித்துள்ளமை துரதிஷ்டவசமானது என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளது. அந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பொறுத்தே எதிர்காலத்தில் நாம் இந்திய அரசு தொடர்பாக விமர்சனங்களை கூற முடியும் என்றும் தமிழ்ச் செல்வன் இங்கு கூறினார்.
விடுதலைப் புலிகளிடம் விமானப் படை மற்றும் விமானம் இருப்பது உண்மை. விமான ஓடு பாதை இருப்பதும் உண்மை.
இது நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டி எழுப்பப்பட்டதாகும் என்றும் தமிழ்ச்செல்வன் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். விடுதலைப் புலிகளிடம் விமானம் உண்டா? முல்லைத்தீவு பகுதியில் அது விழுந்ததா? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது அரசாங்கமும், படைத்தரப்பும் காலத்துக்கு காலம் கூறும் விடயம் இது. விடுதலைப் புலிகளிடம் விமானப் படையிருப்பது வெளிப்படையான விடயம். இது புதிய விடயமல்ல. புதிய விடயமாக கேள்வி எழுப்புவது தான் புரியாத புதிராகவுள்ளது என்றும் அவர் கூறினார்.
நன்றி புதினம்...!
-------------------------
தமிழ்ச்செல்வன் கூறியது உண்மையே...குருவிகளின் அறிவுக்கு எட்ட 1994/95 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த மேதின ஊர்தி பவனியில் இதைச் சித்தரிக்கும் காட்சி கொண்ட ஒரு ஊர்தி சென்றதைக் கண்டதாக அதைக் கண்ணுற்ற பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்....! 1995 இன் பிற்பகுதியிலேயே யாழ்ப்பாணம் சிங்கள அரச படைகளினால் சூரியக்கதிர் (ரிவிரெச) இராணுவ நடவடிக்கை மூலம் கட்டம் கட்டமாக ஆக்கிரமிக்கப்பட்டது...! (our view)

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>