Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் கேட்டவை
#22
பாட்டாளி,முதலாளி வர்க்கவேறுபாடுகள் பற்றிக் கவிதைகள் வருவது போன்று திரைப்பாடல்களும் வந்தவண்ணமிருக்கின்றன.

உழைத்தவன் பசியில் வாடவும்,உடுக்கத் துணியின்றிக் குளிரில் வாடவும் உண்டு களித்திருக்கும் முதாளித்துவத்தைச் சாடி எழுதப்பட்ட பாடல் இது.

மடி நிறையப் பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும் என்ற வரிகளின் தாக்கம் அதிகம்

படம்: படகோட்டி
பாடல்: வாலி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: T.M.S


கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வேளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக.. ஒன்று.. எனக்காக.. ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்

படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட.. சிலர் வாழ வாழ..
ஒரு போதும் தெய்வம் பொறுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய.. பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும்.. பொது என்று வைத்து..
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 04-14-2004, 06:55 PM
[No subject] - by Eelavan - 04-15-2004, 05:31 PM
[No subject] - by sOliyAn - 04-15-2004, 10:39 PM
[No subject] - by Mathan - 04-15-2004, 11:17 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:47 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:49 PM
[No subject] - by Eelavan - 04-30-2004, 02:02 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:47 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:56 AM
[No subject] - by Eelavan - 05-18-2004, 08:35 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:56 PM
[No subject] - by Eelavan - 05-18-2004, 09:59 PM
[No subject] - by shanmuhi - 05-18-2004, 11:00 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 12:11 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 08:01 AM
[No subject] - by shanmuhi - 05-20-2004, 09:26 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:18 AM
[No subject] - by shanmuhi - 05-22-2004, 05:42 PM
[No subject] - by Eelavan - 05-24-2004, 06:31 AM
[No subject] - by Eelavan - 05-26-2004, 03:13 PM
[No subject] - by shanmuhi - 05-26-2004, 09:04 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 03:03 PM
[No subject] - by vasisutha - 06-02-2004, 02:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)