05-23-2004, 01:37 AM
[align=center:f51a8a5f38]<img src='http://www.kumudam.com/reporter/230504/pg8t.jpg' border='0' alt='user posted image'>[/align:f51a8a5f38]
<span style='font-size:22pt;line-height:100%'>
அல்கொய்தா தாக்குதல் நடந்த மறு விநாடி தொடங்கியே ஆப்கன் மீதான யுத்தத்துக்கு அமெரிக்கா தயாராகிவிட்டதாக இன்றுவரை உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. உண்மையில் அந்தச் சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கழித்துத்தான் யுத்தம் குறித்த முடிவுக்கே அமெரிக்க அதிபர் வந்தார். ஏதாவது செய்து அல்கொய்தாவினரை ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் என்று நினைக்கவும் பேசவும் செய்தார்கள்தான் என்றாலும், ஒரு நேரடி யுத்தத்தை அவர்கள் தீர்மானித்தது செப்டம்பர் 16_ம் தேதிதான்.
கேம்ப் டேவிட் என்கிற இடத்தில் முதலில் ஒரு ரகசியக்கூட்டம் கூட்டப்பட்டது. முன்னதாக, அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் அத்தனை பேரும் அவரவர் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து ஆளுக்கொரு திட்டம் தயாரித்துவைத்திருந்தனர். என்ன செய்வது, எப்படிச் செய்வது, என்ன செலவாகும், எத்தனை நாட்கள் பிடிக்கும் _ அவரவர் திட்டங்களுடன் இந்த நான்கு கேள்விகளுக்கும்கூட விடை எழுதிக்கொண்டு வரும்படி அதிபர் புஷ் உத்தரவிட்டிருந்தார்.
<img src='http://www.kumudam.com/reporter/230504/pg8.jpg' border='0' alt='user posted image'>
தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சில அதிகாரிகள் மட்டுமே அந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதிபர் புஷ், உள்துறைச் செயலாளர் காலின் பாவெல், ராணுவச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்டு, உதவி ஜனாதிபதி டிக் செனி, சி.ஐ.ஏ.வின் இயக்குநர் டெனட், எஃப்.பி.ஐ. இயக்குநர் ராபர்ட் முல்லர், அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் _ இவர்கள் தவிர, குறிப்புகள் எடுக்க இரண்டு அசிஸ்டெண்டுகள்.
யுத்தம்தான். அல்கொய்தாவை ஒழிப்பதுதான் ஒரே நோக்கம். ஆனாலும் அது அமெரிக்கா _ அல்கொய்தா யுத்தமாக மட்டும் இருக்கக்கூடாது; நல்ல சக்திக்கும் தீயசக்திக்கும் இடையிலான யுத்தமாக மட்டுமே கருதப்பட வேண்டும். அதற்கான யோசனைகளை முதலில் தீர்மானித்துவிட்டுப் பிறகு வேலையில் இறங்கலாம் என்று புஷ் கருதினார். கவனிக்க, இந்த இடத்தில்கூட அமெரிக்கா மட்டும் நேரடியாகக் களத்தில் இறங்குகிற உத்தேசத்தில்தான் புஷ் இருந்தார். இங்கிலாந்து உள்ளிட்ட பிற கூட்டணி தேசங்களை உதவிக்கு அழைக்கிற யோசனை அவருக்கு அப்போது இல்லை. இந்த ஆபரேஷனுக்கு சி.ஐ.ஏ. மட்டுமே போதுமானது என்பதுதான் அவரது தீர்மானம். ஏனெனில், பல்லாண்டுகளாக அல்கொய்தா பற்றிய ஆராய்ச்சியிலும் பின்தொடர்தலிலும் களையெடுப்பு நடவடிக்கைகளிலும் ஊறி ஊறி, சி.ஐ.ஏ.வின் அனைத்து ஆபீஸர்களுமே கிட்டத்தட்ட அரை அல்கொய்தாவினர் ஆகியிருந்தார்கள் அப்போது. அதாவது, அல்கொய்தாவினரின் இயல்புகள் அனைத்துமே அவர்களுக்கு அத்துபடியாகியிருந்தது. நிகரற்ற சுதந்திரமுடன் ஒரு பெரிய வாய்ப்பை அளித்தால், மந்திரித்து விடப்பட்டவர்கள் மாதிரி போய் மோதி அழித்துவிடுவது இம்முறை அவர்களுக்குச் சிரமமாக இராது என்று புஷ் நினைத்தார்.
<img src='http://www.kumudam.com/reporter/230504/pg8-1.jpg' border='0' alt='user posted image'>
அது ஓரளவு உண்மையும்கூட. ஆனால், அனைத்து சாத்தியங்களையும் ஆராயாமல் ஓரடிகூட எடுத்துவைக்கக்கூடாது என்று காலின் பாவெல் கருதினார். அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஓர் ஆரோக்கியமான தடைச் சக்தியாக அவர்தான் விளங்கினார். ஏனெனில், உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையிலிருந்த புஷ் என்னவாவது விவகாரமான முடிவுகளை எடுத்துவிட்டால், அது என்றென்றைக்கும் அமெரிக்காவின் அழிக்க முடியாத கறையாகிவிடும் அபாயம் உண்டு. செய்யப்போவது கொலைகள். ஆப்கனை சட்னியாக்கிவிடுவது என்று முடிவாகிவிட்டது. அல்கொய்தாவை இருக்குமிடம் தெரியாமல் வேரறுத்துவிடுவது. இது ஒழுங்காக நடப்பதும் நடக்காததும் அமெரிக்கப் படைகளின் கையில் இருக்கிறது. ஆனால், ஆப்கன் தாக்குதல் காரணமாக அமெரிக்காவுக்கு எந்தக் கெட்டபெயரும் வரக்கூடாதென்றால், அது அங்கே கூடியிருந்த பெரும்புள்ளிகள் எடுக்கும் தீர்மானங்களில்தான் இருக்கிறது. யாருமே குறைசொல்ல முடியாதபடிக்கு ஒரு போர்த் திட்டம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தார் பாவெல்.
<img src='http://www.kumudam.com/reporter/230504/pg8-2.jpg' border='0' alt='user posted image'>
அதனால்தான் அவர், அமெரிக்கா மட்டும் நேரடியாக மோதாமல், கூட்டணி நாடுகளை உடன் இணைத்துக்கொண்டு போரைத் தொடங்கவேண்டும் என்று சொன்னார். முன்னதாக, சுமார் எண்பது நாட்டு அதிபர்களுடனும் பிரதமர்களுடனும் அவர் தாமே நேரடியாகத் தொலைபேசியில் பேசி, விவாதித்து அமெரிக்காவின் ஆப்கன் நடவடிக்கைகள் குறித்து ஓரளவு விளக்கி ஆதரவு கேட்டிருந்தார். உள்நாட்டில் போதிய மக்கள் ஆதரவில்லாமல், மீண்டும் ஒரு புரட்சிக்கான வெளிப்படையான சாத்தியங்களுடன் கலவரம் கொண்டிருந்த பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபின் ஆதரவு இவ்விஷயத்தில் மிக முக்கியமானதென்று எடுத்துச்சொன்னார். ஆப்கனைச் சுற்றியுள்ள துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய தேசங்கள் விரும்பியோ, நிர்ப்பந்தத்தின் பேரிலோ யுத்தம் ஆரம்பித்த சூட்டில் தம் எல்லைகளை மூடிவிடவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆப்கனிலிருந்து ஒரு கொசுகூட வெளியே தப்பிப் போகக்கூடாது என்பதே அவர் திட்டம்.
எப்படியும் எக்கச்சக்கப் பணம் செலவிடவேண்டிவரும் என்று நினைத்தார் சி.ஐ.ஏ. இயக்குநர் டெனட். அவரது முக்கிய குறி, ஆப்கனின் வடக்குக் கூட்டணிப் படை. வேண்டிய அளவு பணம், ஆயுதபலம், உளவுத்துறை ஒத்துழைப்பு. இந்த மூன்றையும் வெள்ளமாக வழங்கும்பட்சத்தில் தாலிபன் அரசுக்கு எதிரான யுத்தத்தை வடக்குக் கூட்டணிப் படையைக் கொண்டே தொடங்கி, முடித்துவிட முடியும் என்று சொன்னார் அவர்.
மறுபுறம் எஃப்.பி.ஐ. இயக்குநர் முல்லர், அமெரிக்காவிலுள்ள ஆப்கானியர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொன்னார். ஏனெனில் அன்றைய தேதியில் அமெரிக்காவெங்கும் தாலிபன்கள், அல்கொய்தாவினர், வடக்குக் கூட்டணிப்படையினர் என்கிற முத்தரப்பினரின் அனுதாபிகளும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். தாக்குதல் சம்பவமே இவர்களது ஒத்துழைப்பில்லாமல் நடந்திருக்க முடியாது என்னும் நிலையில், ஒரு முழு நீள யுத்தம் என்று வரும்போது உள்நாட்டுப் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாததாகிறது.
இதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது ராணுவச் செயலாளர் ரம்ஸ்ஃபீல்டுக்குக் கவலை வந்துவிட்டது. இதென்ன, குவைத் யுத்தத்தின்போது சதாம் உசேன் விஷயத்தில் நடந்துகொண்ட மாதிரி அல்லவா இருக்கிறது? ஒரு தனிநபருக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தமாகவா நாம் திட்டமிடுகிறோம்? தீவிரவாதத்தை ஒழிப்பது என்பதுதான் அமெரிக்காவின் முடிவு. அதற்கான பரந்துபட்ட திட்டமாக இவையெல்லாம் இல்லையே என்று அவர் சொன்னார்.
சுமார் நாலரை மணிநேரம் இடைவிடாமல் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, பாயிண்ட் பாயிண்டாகத் தீர்மானங்கள் வரையறுக்கப்பட்டன. அவை, இவை:
<img src='http://www.kumudam.com/reporter/230504/pg8-3.jpg' border='0' alt='user posted image'>
1. இது அமெரிக்காவுக்கும் அல்கொய்தாவுக்கும் இடையில் நடக்கப்போகிற யுத்தம் இல்லை. பயங்கரவாதத்துக்கும் நல்ல சக்திகளுக்கும் இடையிலான தர்ம யுத்தம். அப்படித்தான் சொல்லவேண்டும். அதற்கான முயற்சிகளை முதலில் எடுக்கவேண்டும்.
2. இங்கிலாந்து உள்ளிட்ட கூட்டணி நாடுகளின் ஆதரவைக் கோரிப்பெறுவது, யுத்தத்தில் அவர்களின் பங்கை மிகவும் மதிப்பது.
3. ஆப்கனிலுள்ள வடக்குக் கூட்டணிப்படையை ஒரு மாற்று அரசாக முன்வைத்து, அவர்களுக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து, போர்க்களத்தில் அவர்களை முன்னால் போக விடுவது.
4. செலவைப் பொருட்படுத்தாமல் அல்ஜீரியா, ஜோர்டன், எகிப்து போன்ற தேசங்களின் அரசு மற்றும் தனியார் உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பைக் கோரிப் பெறுவது. அல்கொய்தாவினரின் நடவடிக்கைகளுடன் மிகுந்த பரிச்சயம் உள்ள அவர்களின் அனுபவத்தை விலைகொடுத்துப் பெறுவது.
5. அமெரிக்காவின் சார்பில் சி.ஐ.ஏ.வே தலைமையேற்று யுத்தத்தை நடத்தும். முழு அளவிலான பொருளாதார, ராணுவ உதவிகள் வழங்கப்படும். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் மேலிட உத்தரவுகளுக்காக எப்போதும் காத்திருக்காமல் சுதந்திரமாகச் செயல்பட்டு எவ்விதமான முடிவையும் சி.ஐ.ஏ. எடுக்கலாம். கேள்வி கேட்கப்பட மாட்டாது.
6. பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் தம் ஆதரவைத் தெரிவித்திருப்பதற்குப் பதிலாக அந்நாட்டுக்கு அணு ஆயுத உதவிகள் செய்ய அமெரிக்கா தயார் என்று வாக்களிப்பது. அதனைக்கொண்டே யுத்தத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வது.
7. உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எஃப்.பி.ஐ. கவனித்துத் தீர்மானித்துச் சொல்லவேண்டும்.
8. ஆப்கனுக்கு எவ்வகையிலும் ஈராக்கை உதவ விடக்கூடாது. சதாம் உசேனைத் தனியே கண்காணிக்க வேண்டும். ஈராக்குடனான ஆப்கன் தொடர்புகள் அனைத்துக்கும் முதலில் தடை உண்டாக்கவேண்டும். தவிரவும், சுமார் எண்பது தேசங்களில் பரவியுள்ள அல்கொய்தாவின் நெட் ஒர்க்கைச் செயலிழக்கச் செய்யவேண்டும். இதை சி.ஐ.ஏ.வே முதலில் செய்தாக வேண்டும்.
9. சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லிவிட்டதால், ஆப்கன் தாக்குதலுக்கான திட்டத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கூட்டணி நாடுகளுடன் பேசப் போகமுடியாது. உடனடியாக பிற தீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள், பலங்கள் குறித்த முழுமையான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும். ஏனோதானோ என்றில்லாமல் உண்மையிலேயே உருப்படியான அறிக்கையாக அது அமைந்தாக வேண்டும்.
10. இந்த ஆப்கன் தாக்குதலுக்கான முழுச் செலவுத்திட்டம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக அமெரிக்கா முதலீடு செய்யும் முதல்கட்டத் தொகை பற்றிய விரிவான நிதியறிக்கை தயாராகவேண்டும்.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுள் விவரம் தெரியவந்தவை மேற்சொன்ன பத்து பாயிண்டுகள்தான். ஆனால், ரகசியமாக மேலும் ஏழு அல்லது எட்டுத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேல் விவரம் இல்லை.
தீர்மானமும் தெளிவான திட்ட வரைபடமும் தயாரானதும், தாலிபன் அரசுக்கு நாற்பத்தெட்டு மணிநேர அவகாசம் கொடுத்து, பின்லேடனை ஒப்படைக்கும்படி சொன்னார் அதிபர் புஷ். இதெல்லாம் ஒரு ஃபார்மாலிடிதான் என்று முல்லா ஓமருக்கும் தெரியும், ஜார்ஜ் புஷ்ஷ§க்கும் தெரியும். ஆனாலும் இதனையெல்லாம் செய்யாமல் இருக்க முடியாதே.
தாலிபன்களின் தலைவர் முல்லா ஓமர், மிகத் தெளிவாகச் சொன்னார். \"என் பார்வையில் ஒசாமா பின்லேடன் எந்தத் தவறும் செய்யவில்லை. செப்டம்பர் 11_ம் தேதி தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவேளை அவர் விசாரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்றால், முதலில் அவர் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்கா வெளியிடவேண்டும். அவை சரியான ஆதாரங்களாக இருக்கும்பட்சத்தில், இரு தேசங்களும் பொதுவானதொரு மூன்றாவது தேசத்திடம் அவரை ஒப்படைக்கிறோம். அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டோம். பின்லேடன் எங்கள் மதிப்புக்குரிய விருந்தாளி!\"
கொஞ்சம் ஊன்றிக் கவனிக்கவேண்டும். முல்லா, பின்லேடனை சர்வதேச நீதிமன்றத்திடம்கூட ஒப்படைப்பதாகச் சொல்லவில்லை. வேறு ஏதாவது ஒரு தேசத்திடம் ஒப்படைப்பதாகவே சொன்னார். இதன் காரணம் எளிதில் ஊகிக்கக்கூடியது. அமெரிக்கா தொடர்பாக சர்வதேச நீதி மன்றத்துக்கு ஏதாவது வழக்குப் போனால் அதன் கதி என்னவாகும் என்பதை ஏற்கெனவே நிகரகுவா விஷயத்தில் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை அமெரிக்கா மதிக்கிற வழக்கம் கிடையாது என்பதுதான் மூன்றாம் உலக நாடுகளின் ஒட்டுமொத்த அபிப்பிராயம். அதனால்தான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நடுநிலைமை பேணக்கூடிய அமெரிக்கா அல்லாத, அதன் கூட்டணியைச் சேராத வேறு ஏதாவது ஒரு தேசத்திடம் பின்லேடனை ஒப்படைப்பதாக முல்லா ஓமர் தெரிவித்தார்.
ஆனால், புஷ் அந்தக் கருத்தை முற்றிலுமாக நிராகரித்தார். 'வேறு வழியில்லை. யுத்தம் செய்ய வருகிறோம், தயாராக இருங்கள்!' என்று வெளிப்படையாக அறிவித்தார்.
(தொடரும்)</span>