05-21-2004, 10:13 AM
புலிகளிடம் வான ஊர்தியா? பாதுகாப்புத்துறை கலக்கம்
முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் வானு}ர்தி ஒன்று பறந்து திரிந்ததாக வெளியான ஊடகத் தகவல்களை அடுத்து அரசின் பாதுகாப்பு உயர் மட்டங்களில் அது தொடர்பாகக் கலக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
இந்த விவரத்தை அடுத்து விமானப் படையின் உயரதிகாரிகளை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று அவசரஅவசரமாக அழைத்து நிலைமைகளை ஆய்வு செய் திருக்கின்றார். புலிகள் வைத்திருக்கக்கூடிய விமானங்கள், வான ஊர்திகள் அவற்றின் உத்தேச செயல்திறன், அதனால் இலங்கையின் கேந்திர முக்கியத்து வம்வாய்ந்த நிலைகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்து ஆகியவை குறித்தும் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
இத்தகைய வசதியைப் புலிகள் கொண்டிருப்பதால் எழக்கூடிய ஆபத்தை எதிர்கொள் வதற்காக இலங்கைப் பாதுகாப்புத்துறை செய்யவேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கை கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக ஒரு தகவல் தெரிவித்தது.
இந்த ஆபத்தை சமாளிப்பதற்குத் தேவையான கருவிகள், ஆயுதங்கள் முன்னெச்சரிக்கைத் திட்டங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு விரைந்து நட வடிக்கை எடுக்கவும் இக்கூட்டத்தில் பச்சைக்கொடி காட்டப்பட்டதாக அறியவந்தது. புலிகள் தங்கள் வான்படையையும் விரிவுபடுத்துகின்றார்கள் என்ற தகவல் இலங்கை யின் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதை அறியமுடிகின்றது.
உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>