05-21-2004, 10:12 AM
புலிகளின் விமான வெள்ளோட்டம்
கடற்படை ராடரில் தெரிந்ததாம்
தமிழீழ விடுதலைப் புலிகள் விமானம் ஒன்றை வெள்ளோட்டம் விட்டுச் சோதித்திருக்கிறார்கள் என்று கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சுமார் 12 மைல் து}ரம் விமானம் ஒன்றைச் சோதனைக்காகப் பறக்கவிட்டுத்திருப்பி இறக்கியிருக்கிறார்கள் என்று அச்செய்தி கூறுகின்றது.
இரணைமடுப் பகுதியில் விமான ஒடுபாதையொன்றைப் புலிகள் அமைத்திருக்கிறார்கள் என்று அண்மையில் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்ததும் சுட்டிக்காட்டப்பட ;டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் கடற்படைக்கலம் ஒன்றின் ராடர்| திரையில் வானத்தில் ஒரு பொருள் பறப்பது அவதானிக்கப்பட்டதாகவும் அந்த மர்மப் பொருள் முல்லைத்தீவின் கரைக்கப்பால் கடலை நோக்கி நகர்வது ராடரில் தெரிந்ததாகவும், சுமார் 12 கடல் மைல் து}ரம் பறந்ததின் பின்னர் தரையை நோக்கித் திரும்பியதாகவும், அத்துடன் ராடர் திரையிலிருந்து மறைந்துவிட்டதாகவும் கடற்படை யினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்தில் விமானப்படை விமானம் எதுவும் அப்பகுதி வானில் பறக்கவில ;லையென்று விமானப்படை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அப்பொருள் ஒரு விமானமாக இருக்கலாம் என்பதில் கடற்படையினரால் உறுதியாகக் கூறமுடியாவிட் டாலும் அதன் வேகத்தையும் திசையையும் கவனிக்கும்போது அது ஒரு விமானமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
கிளிநொச்சிப் பகுதியில் விமானம் போன்ற பறக்கும் சாதனம் ஒன்றைப் புலிகள் வைத்திருப்பது பற்றிய புலனாய்வுத் தகவல்கள் தம்மிடமிருப்பதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>