05-21-2004, 09:44 AM
புலிகளின் விமானம் முல்லை கடற்பரப்பில் பறப்பு: சிறிலங்கா விமானப்படை தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் பறந்ததைத் தாம் அவதானித்ததாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் முல்லைத்தீவு கடலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில்; பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தை ரேடார் கருவிகள் மூலம் தாம் அவதானித்ததாகவும், சில மணி நேரத்தின் பின் இந்த விமானம் தரையிறங்கியதாகவும் சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இந்த விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், இந்த விமானம் உலங்கு வானு}ர்தி ஒன்றின் வேகத்திற்கு சமமான வேகத்தைக் கொண்டிருந்தாகவும் சிறிலங்கா விமானப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விமானம் பறந்து கொண்டிருக்கையில் சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் எவையும் இவ்வான் பரப்பில் பறக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள சிறிலங்கா விமானப் படை வட்டாரங்கள், இந்த விமானம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாகவே இருக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளன.
இதேவேளை தம்மிடம் வன்னியில் ஒரு விமானத் தளம் இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>