Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் கேட்டவை
#12
நிம்மதியான வாழ்வை விரும்பாதார் யார் ? ஓடி ஓடிப் பொன்னும் பொருளும் சேர்த்து வைத்துவிட்டு வாழ்வின் இறுதிக்காலத்தில் நிம்மதி தேடி அலையும் பலரைப் பார்த்திருக்கிறோம் இது கொஞ்சம் வித்தியாசமாக காதல் தோல்வியினால் மனமுடைந்து போன ஒருவர் குரலாக அமைகின்றது.

கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்ற வரிகள் காதலின் சோகத்தையும்...... எங்கே மனிதர் எவருமில்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்ற வரிகள் மனித குலத்தின் மீதே விரக்தியால் ஏற்பட்ட வெறுப்பையும் சுட்டுகின்றன.

நண்பர் குருவிகளுக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும் என நினைக்கின்றேன் எப்படியிருப்பினும் உங்கள் அனைவருக்காகவும் நீங்கள் கேட்டவை.....


படம் : புதிய பறவை
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.S


எங்கே நிம்மதி..... எங்கே நிம்மதி .........
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஹோ, இறைவன் கொடியவனே
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஓ, உறங்குவேன் தாயே
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேன்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 04-14-2004, 06:55 PM
[No subject] - by Eelavan - 04-15-2004, 05:31 PM
[No subject] - by sOliyAn - 04-15-2004, 10:39 PM
[No subject] - by Mathan - 04-15-2004, 11:17 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:47 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:49 PM
[No subject] - by Eelavan - 04-30-2004, 02:02 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:47 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:56 AM
[No subject] - by Eelavan - 05-18-2004, 08:35 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:56 PM
[No subject] - by Eelavan - 05-18-2004, 09:59 PM
[No subject] - by shanmuhi - 05-18-2004, 11:00 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 12:11 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 08:01 AM
[No subject] - by shanmuhi - 05-20-2004, 09:26 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:18 AM
[No subject] - by shanmuhi - 05-22-2004, 05:42 PM
[No subject] - by Eelavan - 05-24-2004, 06:31 AM
[No subject] - by Eelavan - 05-26-2004, 03:13 PM
[No subject] - by shanmuhi - 05-26-2004, 09:04 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 03:03 PM
[No subject] - by vasisutha - 06-02-2004, 02:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)