05-18-2004, 07:31 PM
பிரதமர் பதவி எனது நோக்கம் அல்ல - சோனியா காந்தி திட்டவட்ட அறிவிப்பு!
இந்த நாட்டிற்கு மதச்சார்பற்ற பலமான, நிலையான ஒரு ஆட்சியைத் தருவதே எனது பொறுப்பே தவிர, பிரதமர் பதவி என்றும் எனது நோக்கமாக இருந்ததே இல்லை என்று சோனியா காந்தி அறிவித்துவிட்டார்!
320 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பிரதமராக பதவியேற்கயிருந்த நிலையில், அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்ட சோனியா காந்தி தனது முடிவிற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சற்றுமுன் துவங்கிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் தான் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை சோனியா காந்தி படித்தார்.
"இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கக் கூடிய ஒரு நிச்சயமான சூழ்நிலையில் எனது உள் குரலைக் கேட்டேன், நான் இந்தப் பொறுப்பை ஏற்பதா? அல்லது தவிர்ப்பதா? என்று. நான் இந்தப் பொறுப்பை தாழ்மையுடன் மறுத்துவிட வேண்டும் என்று அந்தக் குரல் கூறியது. அதுவே எனது முடிவு. நான் பிரதமர் பதவி ஏற்கப் போவதில்லை."
இவ்வாறு சோனியா காந்தி கூறியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு சோனியா நெருங்கி முடிவை மாற்றிக் கொள்ளுமாறு உணர்ச்சி கொந்தளிப்புடன் வலியுறுத்தினர்.
அவர்கள் பேசுவதை சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்த சோனியா காந்தி, தனது உரையை தொடர்ந்தார்.
"எனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடுமையான அழுத்தம் தருகின்றனர். எனது நோக்கம் இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காப்பதும், இந்திரா காந்தியும், எனது கணவர் ராஜீவ் காந்தியும் காத்த கொள்கைகளை நிலை நிறுத்துவதும்தான் எனது நோக்கம். என்னுடைய முடிவை நீங்கள் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் எனது முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை."
"எனது உள் குரல் கூறியதை சொல்கின்றேன். இந்த நாட்டிற்கு மதச்சார்பற்ற பலம் வாய்ந்த, நிலையான ஆட்சியை தருவதே மட்டுமே எனது நோக்கமாகும். பிரதமர் பதவி அல்ல. மதச்சார்பற்ற கொள்கையை காக்கவேண்டும் என்கின்ற எனது உறுதி மிகத் திடமானது. அதிகாரத்தை என்றும் நான் விரும்பியது கிடையாது" என்று கூறிவிட்டு சோனியா காந்தி அமர்ந்தார்.
சோனியா காந்தி ஆங்கிலத்தில் படித்த தனது அறிக்கையை பிறகு ஹிந்தியிலும் படித்தார். அவர் படித்து முடித்ததும், காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் சோனியாவை சூழ்ந்துகொண்டு முடிவை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தினர். ஆனால், எந்த பதிலும் கூறாமல் சோனியா அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசி முடித்த பிறகு தனக்கு பதிலாக நாடாளுமன்ற கட்சித் தலைவராக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை சோனியா காந்தி அறிவிக்க உள்ளார்.
வெப் உலகம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>