05-18-2004, 12:15 PM
மதமாற்ற தடை சட்டம் ரத்து அரசு ஊழியர் தண்டனை ரத்து கருணாநிதி மீதான வழக்கு வாபஸ் ஜெ. 'அந்தர் பல்டி'
மதமாற்றத் தடை சட்டம், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான வழக்குகள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், ரேசன் கார்டுகளில் குத்தப்பட்ட எச் முத்திரை ஆகிய அனைத்தும் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
விவசாயிகளுக்கு ரத்து செய்யப்பட்ட இலவச மின்சாரமும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரத்து செய்யப்பட்ட இலவச பஸ் பாஸ்களும் மீண்டும் உடனடியாக வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அத்தோடு கல்லூரி மாணவர்களுக்கும் பஸ் கட்டணத்தில் புதிதாக சலுகையும் அளிக்கப்படும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கான சத்துணவில் வாரம் ஒரு நாள் மீண்டும் முட்டை வழங்கப்படும்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த பெரும் அடியைத் தொடர்ந்து இந்த முடிவுகளை ஜெயலலிதா எடுத்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:
ரூ. 5,000க்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு ரேசன் கடைகளில் எச் முத்திரை குத்தி அரிசி வழங்கப்படாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக அனைவருக்கும் ரேசன் அரிசி வழங்கும் வகையில் எச் முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு புதிய அரிசி கார்டு வழங்கப்படும்.
எச் முத்திரை பதிக்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே எச் முத்திரை பதிக்கப்பட்ட கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பொருட்கள் மீண்டும் வழங்கப்படும். மாத வருவாய் ரூ. 5000 என்ற வருவாய் வரம்பும் நீக்கப்படுகிறது.
கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை ரத்து செய்வதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்.
கருணாநிதி, இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.
விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின்சாரம் வழங்கப்படும். அதே போல இந்து ஆசிரியர் என்.ராம் உள்ளிட்ட அனைத்துப் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அவமதிப்பு வழக்குகளையும் உடனடியாக வாபஸ் பெறப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நிதி பற்றாக்குறை காரணமாகவே இந்த சலுகைகளை ரத்து செய்வதாக முன்பு அறிவித்திருந்த ஜெயலலிதா தற்போது தான் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>