Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னும் காதல் இலக்கணம்...
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/love.jpg' border='0' alt='user posted image'>

கண்ணடிக் காதல்
கைக்குட்டைக் காதல்
வேலியால் வளர்ந்த காதல்
எல்லாம் போயே போச்சு
ஈ மெயில் காதல்
சற் காதல்
டேற்றிங் காதல் என்று
காதலில் புதுவகை வந்தாச்சு
கேட்டால் சொல்கிறான்
இது காதலின்
புதுயுகம் என்று...!

அதுதானாக்கும்
கண்ட இடத்திலும் கட்டிப்பிடிச்சு
காளையும் கன்னியும்
மெய்மறந்து களித்திருக்க
பார்த்தவர் சிலர்
முகம் சுழிச்சு முணுமுணுக்க....
அது என் சுதந்திரம்
என்கிறான்
கலி காலக் காதல் கொண்டான்...!

எட்ட நின்று
கண்ணும் மனதும் கொண்டு
பேசி வளர்த்த
காதல் நாகரிகம்
போயே போச்சு....
கிட்ட இருந்து
நண்டு பிடிச்சு
காதல் இன்றிக்
காமம் வளர்க்கும்
நிலையும் ஆச்சு....!

கருக் கலைப்பென்றால்
மிருகத்துக்கென்றிருந்தது போய்
இன்று
மனிதருக்கு என்று ஆச்சு....!
மாத்திரை முதல்
விதம் விதமாய் அதுவும்
மனிதரைக் காதலிக்குது....!
இவை கண்டு...
பழைய கனவில் சிலர்
கலி முற்றிப் பேச்சென்று
முணுமுணுக்க
அதைக் கேட்பார்
யாரும் இல்லை
என்ற நிலையும் ஆச்சு இன்று....!

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும் நிதர்சனமாய்...
மனிதன் மாறிவிட்டான் - கூடவே
அவனிரு மனமும் மாறிப்போச்சு
அவை கொண்ட
ரசனையும் மாறிப்போச்சு...!
இருந்தும்
இயற்கை மட்டும்
மாறவேயில்லை
அதற்குச் சாட்சியாய்
இதோ ஒரு காதல் ஜோடி
நாகரிகமாய் காதல்
செப்பினம்...!

முதற்பதிவு செய்யப்பட்ட இடம்...
http://kuruvikal.yarl.net/archives/000778.html#more
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இன்னும் காதல் இலக்கணம - by kuruvikal - 05-18-2004, 12:43 AM
[No subject] - by வெண்ணிலா - 05-16-2005, 05:55 PM
[No subject] - by tamilini - 05-16-2005, 05:58 PM
[No subject] - by Malalai - 05-16-2005, 05:59 PM
[No subject] - by வெண்ணிலா - 05-16-2005, 06:02 PM
[No subject] - by Malalai - 05-16-2005, 06:03 PM
[No subject] - by kuruvikal - 05-16-2005, 06:43 PM
[No subject] - by tamilini - 05-16-2005, 07:44 PM
[No subject] - by shanmuhi - 05-16-2005, 08:02 PM
[No subject] - by kuruvikal - 05-16-2005, 08:20 PM
[No subject] - by KULAKADDAN - 05-16-2005, 09:08 PM
[No subject] - by kavithan - 05-17-2005, 03:04 AM
[No subject] - by Malalai - 05-17-2005, 04:42 PM
[No subject] - by KULAKADDAN - 05-17-2005, 06:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)