07-07-2003, 10:46 AM
வணக்கம் ரஜனி...
உங்கள் கணணி எந்தப் "பணிசெய் அமைப்பினைக்"(Operating System) கொண்டது. மற்றும் கணணியின் வேகம் என்ன என்பதையும் குறிப்பிட்டால் கணணி பற்றிய அறிவுடையோர் உங்களிற்கு அதுபற்றிய தகவல்களை வழங்குவார்கள் என எண்ணுகிறேன்.
<b>நானறிந்த சில தகவல்கள்:</b>
1. உங்கள் கணணியில் நீங்கள் எத்தனை வகையான எழுத்துருக்களை(Font) பதிந்து வைத்துள்ளீர்கள்? எழுத்துருக்களின் கூடிய தொகையும் கணணியின் வேகத்தைக் குறிப்பாக எழுதிகளின் வேகத்தைக் குறைக்கும்.
2. உங்கள் கணணியில் எத்தனை வகையான செயலிகளை நிறுவியுள்ளீர்கள்? அவசியமற்றவையை அழித்துவிடுவதே நல்லது. இவற்றின் அளவுகளும் உங்கள் கணணியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.
3. உங்கள் கொள்பணிப் பட்டையில் (Taskbar) எத்தனை குறியீடுகள் உள்ளன? அளவுக்கு மீறிய அவசியமற்ற குறியீடுகளும் கணணியின் வேகத்தை மட்டுப்படுத்தும்.
4.நீங்கள் உங்கள் கணணியை அடிக்கடி Defragmentation (அதாவது கணணியில் பதிகின்ற தரவுகளை சரியான ஒழுங்குமுறையில் அடுக்குவது) செய்வீர்களா? அதனைக் கட்டாயமாகச் செய்யவேண்டும். காரணம் நீங்கள் பதிகின்ற தரவுகள் எப்பொழுதுமே ஒழுங்காக அடுக்கப்படுமென்பது இல்லை. அங்கொரு மூலையில் இங்கொரு மூலையில் என்று தனக்கு வசதியான இடத்தில் தூக்கி எறியப்படும். பதிந்த தகவல்களை மீண்டும் நீங்கள் பார்வையிட முயற்சிக்கும் பொழுது எங்கெங்கொ எல்லாம் போட்டவற்றை மீண்டும் தேடிக்கண்டுபிடித்து தொகுத்து வழங்கும் போதும் கணணியின் வேகம் குறைகிறது. எனவே அடிக்கடி உங்கள் கணணியைத் துப்பரவு செய்யுங்கள். நீண்டகாலத்தின் பிறகு நீங்கள் Defragmentation செய்தீர்களென்றால் அதற்கு நீண்டநேரம் எடுக்கும், என்றாலும் அதனைச் செய்யவிடுங்கள். (நானும் ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கு ஒருமுறைதான் செய்வேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
இவ்வளவுந்தான் தற்போதைக்கு என்னால் குறிப்பிடத்தக்கது. வன்பொருள் மூலமாக உங்கள் கணணியின் வேகத்தை எப்படி அதிகரிக்கலாம், அல்லது அதற்கென இருக்கும் சிறப்பு மென்பொருள்கள் பற்றியும் கண்ணன் அண்ணா, மற்றும் கணணிப்பித்தன் ஆகியோர் தான் தகவல்கள் தரவேண்டும்.
உங்கள் கணணி எந்தப் "பணிசெய் அமைப்பினைக்"(Operating System) கொண்டது. மற்றும் கணணியின் வேகம் என்ன என்பதையும் குறிப்பிட்டால் கணணி பற்றிய அறிவுடையோர் உங்களிற்கு அதுபற்றிய தகவல்களை வழங்குவார்கள் என எண்ணுகிறேன்.
<b>நானறிந்த சில தகவல்கள்:</b>
1. உங்கள் கணணியில் நீங்கள் எத்தனை வகையான எழுத்துருக்களை(Font) பதிந்து வைத்துள்ளீர்கள்? எழுத்துருக்களின் கூடிய தொகையும் கணணியின் வேகத்தைக் குறிப்பாக எழுதிகளின் வேகத்தைக் குறைக்கும்.
2. உங்கள் கணணியில் எத்தனை வகையான செயலிகளை நிறுவியுள்ளீர்கள்? அவசியமற்றவையை அழித்துவிடுவதே நல்லது. இவற்றின் அளவுகளும் உங்கள் கணணியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.
3. உங்கள் கொள்பணிப் பட்டையில் (Taskbar) எத்தனை குறியீடுகள் உள்ளன? அளவுக்கு மீறிய அவசியமற்ற குறியீடுகளும் கணணியின் வேகத்தை மட்டுப்படுத்தும்.
4.நீங்கள் உங்கள் கணணியை அடிக்கடி Defragmentation (அதாவது கணணியில் பதிகின்ற தரவுகளை சரியான ஒழுங்குமுறையில் அடுக்குவது) செய்வீர்களா? அதனைக் கட்டாயமாகச் செய்யவேண்டும். காரணம் நீங்கள் பதிகின்ற தரவுகள் எப்பொழுதுமே ஒழுங்காக அடுக்கப்படுமென்பது இல்லை. அங்கொரு மூலையில் இங்கொரு மூலையில் என்று தனக்கு வசதியான இடத்தில் தூக்கி எறியப்படும். பதிந்த தகவல்களை மீண்டும் நீங்கள் பார்வையிட முயற்சிக்கும் பொழுது எங்கெங்கொ எல்லாம் போட்டவற்றை மீண்டும் தேடிக்கண்டுபிடித்து தொகுத்து வழங்கும் போதும் கணணியின் வேகம் குறைகிறது. எனவே அடிக்கடி உங்கள் கணணியைத் துப்பரவு செய்யுங்கள். நீண்டகாலத்தின் பிறகு நீங்கள் Defragmentation செய்தீர்களென்றால் அதற்கு நீண்டநேரம் எடுக்கும், என்றாலும் அதனைச் செய்யவிடுங்கள். (நானும் ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கு ஒருமுறைதான் செய்வேன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )இவ்வளவுந்தான் தற்போதைக்கு என்னால் குறிப்பிடத்தக்கது. வன்பொருள் மூலமாக உங்கள் கணணியின் வேகத்தை எப்படி அதிகரிக்கலாம், அல்லது அதற்கென இருக்கும் சிறப்பு மென்பொருள்கள் பற்றியும் கண்ணன் அண்ணா, மற்றும் கணணிப்பித்தன் ஆகியோர் தான் தகவல்கள் தரவேண்டும்.