Yarl Forum
கணனிப்பிரச்சினைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணனிப்பிரச்சினைகள் (/showthread.php?tid=8406)

Pages: 1 2 3 4 5


கணனிப்பிரச்சினைகள் - Selan - 04-26-2003

அன்றாடம் எமது கணனியில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் அதற்கு நீங்கள் எவ்வாறு தீர்வு கண்டீர்கள் என்பது பற்றி பரிமாறிக்கொள்வோமா?
எனக்கு நடந்த சம்பவங்களை நான் கூறிக்கொள்கிறேன் அதே போல் மற்றவர்களும் கூறமுன்வாருங்கள்.

அதே போல் எனக்கு ஏற்படும் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கும் உங்கள் உதவிகள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன்.
அதற்கான உதவியை எங்கள் கணனி விற்பனர்களான கணனிப்பித்தன் இளைஞன் போன்றவர்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

கேள்விர்பட்டால் சிரிப்பீர்கள் எனது கணனி அனூபவ ஆரம்பகாலத்தில் வைரஸ் என்றால் என்னவென்று புரியாது இருந்தேன்.
உயிரினங்களைத்தாங்கும் நூண்கிருமியா இது? அப்படி இருக்க சந்தர்ப்பம் இருக்காது இது எல்லாம் கட்டுக்தை என்று நினைத்தேன். சிலருடன் வாக்குவாதம் கூட நடத்தினேன் பின்பு அதுபற்றி புத்தகங்களை படித்து படிப்படியாக அறிந்து கொண்டேன்.
இப்படி பல சொல்லலாம் மற்றவர்களுக்கும் பயன்படும் விதத்தில் அதை பின்பு எழுதுகிறேன்.
மற்றவர்களும் தங்கள் அனூபவங்களை கூறுங்கள்


- sethu - 06-26-2003

எனது கணனி மிகவும் சிலோவாக வேலைசெய்கிறது இதனை வேகமாக வேலைசெய்ய ஏதாவது இலவச கணனி மென்பொருள்கள் இருக்கின்றதா?


- இளைஞன் - 06-26-2003

வணக்கம் சீலன் அவர்களே...

நான் ஒன்றும் கணணி விற்பனன் அல்லன். உங்களைப் போன்று தனிப்பட்ட அனுபவங்களும், பாடசாலையில் கற்றவையும், வாசித்தவையும் மட்டுந்தான். இருந்தாலும் என் மீது இத்தனை நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள் என்று காணும்போது மகிழ்ச்சியாயுள்ளது. உங்கள் சந்தேகங்களை, கேள்விகளை முன்வையுங்கள் - முடிந்தளவு முயற்சி செய்து பதில் எழுதுவேன். எனக்குத் தெரியாத போது உங்களோடு சேர்ந்து நானும் கற்றுக்கொள்ள முயல்கிறேன்.


- rajani - 06-30-2003

வணக்கம் நண்பர்களுக்கு,

பாவனைக்கு சிறந்தது "தனியாள் கணணிகளா" (Personal computer) அல்லது "ஏட்டுக் கணணிகளா" (Notebook computer) ?
தற்காலத்தில் நல்லதொரு கணணியொன்று எந்த "அமை வடிவம்" (Configuration) கொண்டதாக இருக்கவேண்டும். தெரிந்தவர்கள் அறியத்தாருங்களேன்.

பி.கு : எனது கணணி மிகவும் மெதுவாகவே வேலை செய்கிறது.வேகப்படுத்துவதற்கு ஏதும் வழிமுறைகள் உண்டா?

ரஜனி


வணக்கம் - இளைஞன் - 07-07-2003

வணக்கம் ரஜனி...

உங்கள் கணணி எந்தப் "பணிசெய் அமைப்பினைக்"(Operating System) கொண்டது. மற்றும் கணணியின் வேகம் என்ன என்பதையும் குறிப்பிட்டால் கணணி பற்றிய அறிவுடையோர் உங்களிற்கு அதுபற்றிய தகவல்களை வழங்குவார்கள் என எண்ணுகிறேன்.

<b>நானறிந்த சில தகவல்கள்:</b>

1. உங்கள் கணணியில் நீங்கள் எத்தனை வகையான எழுத்துருக்களை(Font) பதிந்து வைத்துள்ளீர்கள்? எழுத்துருக்களின் கூடிய தொகையும் கணணியின் வேகத்தைக் குறிப்பாக எழுதிகளின் வேகத்தைக் குறைக்கும்.

2. உங்கள் கணணியில் எத்தனை வகையான செயலிகளை நிறுவியுள்ளீர்கள்? அவசியமற்றவையை அழித்துவிடுவதே நல்லது. இவற்றின் அளவுகளும் உங்கள் கணணியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.

3. உங்கள் கொள்பணிப் பட்டையில் (Taskbar) எத்தனை குறியீடுகள் உள்ளன? அளவுக்கு மீறிய அவசியமற்ற குறியீடுகளும் கணணியின் வேகத்தை மட்டுப்படுத்தும்.

4.நீங்கள் உங்கள் கணணியை அடிக்கடி Defragmentation (அதாவது கணணியில் பதிகின்ற தரவுகளை சரியான ஒழுங்குமுறையில் அடுக்குவது) செய்வீர்களா? அதனைக் கட்டாயமாகச் செய்யவேண்டும். காரணம் நீங்கள் பதிகின்ற தரவுகள் எப்பொழுதுமே ஒழுங்காக அடுக்கப்படுமென்பது இல்லை. அங்கொரு மூலையில் இங்கொரு மூலையில் என்று தனக்கு வசதியான இடத்தில் தூக்கி எறியப்படும். பதிந்த தகவல்களை மீண்டும் நீங்கள் பார்வையிட முயற்சிக்கும் பொழுது எங்கெங்கொ எல்லாம் போட்டவற்றை மீண்டும் தேடிக்கண்டுபிடித்து தொகுத்து வழங்கும் போதும் கணணியின் வேகம் குறைகிறது. எனவே அடிக்கடி உங்கள் கணணியைத் துப்பரவு செய்யுங்கள். நீண்டகாலத்தின் பிறகு நீங்கள் Defragmentation செய்தீர்களென்றால் அதற்கு நீண்டநேரம் எடுக்கும், என்றாலும் அதனைச் செய்யவிடுங்கள். (நானும் ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கு ஒருமுறைதான் செய்வேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )

இவ்வளவுந்தான் தற்போதைக்கு என்னால் குறிப்பிடத்தக்கது. வன்பொருள் மூலமாக உங்கள் கணணியின் வேகத்தை எப்படி அதிகரிக்கலாம், அல்லது அதற்கென இருக்கும் சிறப்பு மென்பொருள்கள் பற்றியும் கண்ணன் அண்ணா, மற்றும் கணணிப்பித்தன் ஆகியோர் தான் தகவல்கள் தரவேண்டும்.


- TMR - 07-07-2003

உங்கள் உதவிக்கு என் நன்றி இளைஞன்!!!!!


ஒரு சிறிய பதில் வேண்டு - TMR - 07-11-2003

என் நண்பி ஒருவரின் 3 மின்னஞ்சல்களின் இரகசிய வார்த்தையை(passwerd) ஐ யும் ஒருவர் எடுத்து வேரொரு இரகசிய வார்த்தையை(passwerd) மாத்தி விட்டாராம் அவர் சொன்னதை நம்பாமல் நண்பி login செய்தால் உள்ளே போக முடியவில்லை பின் அவர் சொன்ன இரகசிய வார்த்தையை(passwerd) ஐ குடுக்க உள்ளே செல்ல முடிகிறது இத்தனைக்கும் தான் அவருக்கு சொல்லவில்லையாம் அத்தோடு கணணி online இல இல்லை (என் கணணி 24 மணிநேரமும் online)அத்தோடு நண்பியின் HARD DISK இல என்ன இருக்கு என்டு சொன்னாராம் இப்படி நடக்குமா ??
செய்யலாமா???

பி:கு :- நண்பியின் தங்கைக்கு இரகசிய வார்த்தை(passwerd) தெரியும் :x :x :x

அதாவது நான் கேட்பது online இல் இல்லாத ஒரு கணணியில அவரின் மின்னஞ்சல் முகவரியை வைத்து இரகசிய வார்த்தையை(passwerd) எடுக்கலாமா????????


Re: ஒரு சிறிய பதில் வேண் - GMathivathanan - 07-11-2003

உது.. புருஷன்.. பொண்டில்.. பிரச்சனை..மாதிரித்தெரியுது.. தலையிட்டால்.. பிரச்சனை.. பெரிசாப்போகும்.. அவையே.. சோட்டவுட்..பண்ணட்டும்..
Idea Idea Idea


- இளைஞன் - 07-11-2003

வணக்கம் ரஜி...

1. உங்கள் நண்பியின் கணணி Online இல் இல்லாமல்,
அவர் எப்படி தனது மின்னஞ்சல் முகரிகளை
உபயோகிக்கிறார்?

2. உங்கள் நண்பியின் மூன்று மின்னஞ்சல் முகவரியும்
ஒரே வழங்குநரிடம் (உதாரணம்: Hotmail) பெற்றுக்கொண்டதா?

3. வெவ்வேறு வழங்குநரிடம் பெற்றுக்கொண்டிருந்தால்
மூன்று மின்னஞ்சல் முகவரிகளின் "பாவனையாளர்
பெயர்களும்"(Username), மறைவுச் சொற்களும்(Password)
ஒன்றா?

இந்தக் கேள்விகளிற்குப் பதில் தாருங்கள், மற்றும்
முடிந்தால் உங்கள் நண்பியின் மின்னஞ்சல் முகவரியை
எழுதுங்கள் (விரும்பின் மட்டும்). அதன்பின்னர்
விளக்கம் தர முயற்சிக்கிறேன்.


- TMR - 07-11-2003

3 உம் வேறு என் நண்பியை சந்தித்து மேலும் விபரம் எழுதுகிறேன்


- TMR - 07-11-2003

Quote:உது.. புருஷன்.. பொண்டில்.. பிரச்சனை..மாதிரித்தெரியுது.. தலையிட்டால்.. பிரச்சனை.. பெரிசாப்போகும்.. அவையே.. சோட்டவுட்..பண்ணட்டும்..

தாத்தாக்கு லொள்ள பார் எப்ப பார் லொள்ளு தான்


- rajani - 07-12-2003

நன்றி இளைஞன் அண்ணா,
நான் விண்டோஸ் 98 பாவிக்கின்றேன்.

உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
வன்பொருட் தகவல்களையும் அறியத்தந்தால் உதவியாகவிருக்கும்.


- ganesh - 10-20-2003

புதிதாக கணனிவாங்க எண்ணியுள்ளீர்களா தைமாதம்
மட்டும் பொறுத்திருங்கோ

பென்ரியம் 4 புரசெஸ்சர் தற்போது
இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது
வருகிற தைமாதம் பென்ரியம் 5
விற்பனைக்கு வர தயாராகவுள்ளது
பல புதிய பதிய ரெக்னிக்உடன்
ஆகவே புதிதாக கணனிவாங்குபவர்கள் சிறிது காலம் பொறுத்திருங்கள் ஆனால் விலை சற்று அதிகமே


- இளைஞன் - 10-21-2003

தகவலுக்கு நன்றி கணேஸ்...
Pentium 5 சந்தைக்கு வந்ததும் எமக்கு அறியத் தாருங்கள். அத்தோடு நிற்காமல் அதுபற்றிய விளக்கங்களையும் தாருங்கள். புதியதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், பிழைதிருத்தங்கள், புதிய அம்சங்கள், பலம் பலவீனங்கள் என்று நிறைய சொல்வீர்கள் என நம்பிக் காத்திருக்கிறோம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mathivathanan - 10-21-2003

உந்தப் பென்ரியம் 4 எக்ஸ்பி படுகிற பாட்டைச் சொல்லி முடியேல்லை.. கழண்டு கொட்டுண்ணுமட்டும் எனக்கு என்ரை பென்ரியம் 2 வின்98 போதும்.. உந்தப் படம் பார்க்கிறவை கேம் விளையாடுறவைக்குத்தான் உந்த 4.5 தேவை.. தேவையில்லாமல் காசைக் கொட்டாதேங்கோ.. கொஞ்சம் பொறுத்து ஒரு 6 மாதத்தாலை தேவையெண்டால் வாங்குங்கோ.. சாதாரண பாவனைக்கு பழையதே பொதும் எதற்கும் விரலுக்கேத்த வீக்கமாயிருக்கட்டும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- mohamed - 10-21-2003

தாத்தா சொல்லுறது மெத்த சரி, நான் ஒரு பென்ரியம் 3, வின்டோஸ் 98 உடன் ஒரு 150 பவுணுக்கு வாங்கினன். நல்ல மலிவு, நல்லா வேலை செய்யுது. படமும் பாக்கிறன் கேமும் விளையாடுறன்.


- ganesh - 10-21-2003

நான் பாவிக்கும் கணனி உங்களுடையதை விட மலிவு
பென்ரியம்2 266 சீமென்ஸ் 49 ஈரோ எந்தவிதபிரச்சனையும் இல்லை
அத்துடன் கேபிள் மூலம் இன்டர்
நெற்இணைப்பு 20 ஈரோ பென்ரியம்
2 போதும்


- mohamed - 10-22-2003

ம் நல்ல மலிவுதான் நான் பாவிக்கிறது பென்றியம் 3 700. பென்றியம் 2 இஞ்சை ஒரு 40 பவுணுக்கு வாங்கலாம். ஆனால் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தால் பென்றியம் 3 நல்லா விலை குறையும்.


- shanmuhi - 11-11-2003

இணைய தளத்துக்கு போகும்போது Browser வராமல் உள்ளது.
BROWSER.EXE hat ein problem festgestellt und muss beendet werden
என்று வருகிறது.
windows XP home edition - t_online browser
என்னிடம் உள்ளது

புதிதாக install செய்தும் பலன் இல்லை.
விபரம் தெரிந்தவர்கள் உதவுவார்களா ?


- yarl - 11-11-2003

நெற்ஸ்கேப் வேலை செய்கிறதா?