05-15-2004, 11:27 AM
நோட்டம்: ஜக்குபாய்
தமிழில் எந்தப் புதுப்பட அறிவிப்பும் இப்படியொரு பரபரப்பைக் கிளப்புமா என்று தெரியவில்லை. ஆனால் ரஜினியின் புதுப்பட அறிவிப்பு மட்டும் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தொடர்ந்து சினிமா வட்டாரத்தைக் கடந்தும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டாண்டுகளுக்கு முன்பு "பாபா'. கடந்த வாரம் "ஜக்குபாய்'. அதே பரபரப்பு தொடர்கிறது.
ரஜினியின் ஒவ்வொரு படமும் பல கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக மதிப்பைக் கொண்டிருப்பதால் மற்ற படங்களுக்கு இல்லாத எதிர்பார்ப்பும் பரபரப்பும் உருவாகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
உண்மையில் சமீப காலங்களில் அரசியலுக்கு நெருக்கமாக அவர் இருப்பதால் அல்லது அப்படியொரு தோற்றத்தை அவர் தொடர்ந்து தக்க வைத்திருப்பதால் அவரது ஒவ்வொரு புதுப்பட அறிவிப்பும் திரை வட்டாரம் கடந்தும் கவன அலைகளை உருவாக்குகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் ரஜினி நடித்து வெளியான படங்கள் ஐந்துதான். தமிழக அரசியலில் ரஜினி அதிகமாக மையப்படுத்தப்பட்ட காலமும் இதுதான். இதே காலத்தில்தான் பட எண்ணிக்கையையும் அவர் குறைத்துக் கொண்டார். தமிழ்த் திரையுலகம் தன்னைக் கடந்து சென்றுவிட்டதாக நினைத்தோ அல்லது தனது சுற்றை முடித்துக்கொள்ள வேண்டிய வேளை நெருங்கிவிட்டதாக நினைத்தோ அவர் இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம்.
எப்படியிருப்பினும் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையிலான நீண்ட இடைவேளை அவரது ரசிகர்களைப் பொறுமையிழக்கச் செய்தது. "தலைவர் அரசியலுக்கு வந்துவிடுவார்' என்ற நம்பிக்கையில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அவர்கள் விரும்பிய பதிலை நேரடியாகச் சொல்ல முடியாமல் தவித்த ரஜினிஇ அவர்களைச் சற்றேனும் ஆறுதல்படுத்தும் முயற்சியாகத்தான் "பாபா'வைத் தந்தார். இப்போதும் அதே நோக்கில்தான் "ஜக்குபாய்' அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
"அபூர்வ ராகங்கள்' முதல் "பாபா' வரை கடந்த 27 ஆண்டுகளில் 151 படங்களில் நடித்திருக்கும் ரஜினிக்கு உலகெங்கிலும் 15 லட்சம் ரசிகர்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் நடத்தும் இணைய தளம் சொல்கிறது. இந்தக் கணக்கு உண்மைதானா என்று துருவத் தேவையில்லை. என்றாலும் அவர் படத்துக்கான ஈர்ப்பு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி நீண்டிருப்பது உண்மை.
கொஞ்சம் காமெடிஇ கொஞ்சம் காதல்இ வித்தியாசமான சண்டைக் காட்சிகள்இ தாளம் போட வைக்கும் பாடல்கள்இ பஞ்ச் டயலாக்... என ரஜினி படம்இ "படம் பார்த்த திருப்தியை' நிச்சயம் தரும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.
வில்லனாக அறிமுகமாகிஇ ஹீரோவாக உயர்ந்துஇ சூப்பர் ஸ்டாராகச் சக்கைபோடு போட்ட ரஜினி ஆரம்ப காலங்களில்இ ஆக்ஷன்இ சென்டிமென்ட் கலந்த படங்களையே அதிகம் தந்தார். பின்னர் காமெடி தூக்கலான படங்களில் ஆர்வம் காட்டினார். உண்மையிலேயே அவை பெரும் வரவேற்பைப் பெற்றன.
1992-லிருந்துதான் ரஜினியின் படங்களில் ("மன்னன்' முதல்...) அரசியல் நெடி தூவப்பட்டது. அது மெல்லஇ மெல்ல அதிகமாகி 1996-க்குப் பிறகு உச்சம் பெற்று இப்போது அந்த நிலையிலிருந்து பின்வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
"ஜக்குபாய்' அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்குள் ரசிகர்கள் "பஞ்ச் டயலாக்' பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதுள்ள அரசியல் தட்பவெப்பத்துக்கு ஏற்ப அவர்களே இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்து "டயலாக்' எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
"நான் சொல்றதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்' (அண்ணாமலை); "எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா எப்ப வரணுமோ அப்ப கரெக்டா வருவேன்' (முத்து); "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' (பாட்ஷா); "ஆண்டவன் சொல்றான்... அருணாசலம் செய்யறான்' (அருணாசலம்); "என் வழி... தனி வழி' (படையப்பா); "கதம்இ கதம்... முடிஞ்சது முடிஞ்சு போச்சு' (பாபா) -இப்படி ரஜினி படங்களின் பஞ்ச் டயலாக் ஒவ்வொன்றும் எல்லோரையும் பேச வைத்தது.
"நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி' என்ற வசனத்தைக் குழந்தைகள் ரஜினி மேனரிஸத்துடன் சொல்லும்போதுஇ பெற்றோர்கள்இ உற்றோர்கள் புளகாங்கிதமடைந்தார்கள். ஒவ்வொரு பஞ்ச் வசனத்துக்கும் "அகராதி' போடுமளவுக்கு அர்த்தங்கள் சொல்லி மீடியா இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினி படம் பார்த்தவர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட பஞ்ச் வசனங்களை ரசித்தார்கள்; ஜாலியாகத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்களே தவிரஇ அதைக் கடந்து அவர்கள் சீரியஸôக இதற்கு அர்த்தம் கண்டுபிடிக்க விரும்பவில்லை. ஆனால் ரஜினி ரசிகர்கள் இந்த வசனங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாங்கள் விரும்பியபடி பொருள்கொண்டு தங்களுக்குள் ஒரு "யாகமே' நடத்திவிட்டார்கள்.
இதன் எதிரொலியாகத்தான் "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்...' என்று ரசிகர்கள் தரப்பிலிருந்து வந்த பஞ்ச் வசனத்தையும் ரஜினி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.
"தளபதி' (1991) வரை பொருத்தமான பாத்திரமாக இருக்கும் பட்சத்தில் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கத் தயாராயிருந்த ரஜினிஇ அதற்குப் பிறகு அவ்வாறு இருக்க முடியவில்லை. அவருக்கென்று "கதை' தேட வேண்டியிருந்தது அல்லது உருவாக்க வேண்டியிருந்தது. அந்தக் கதையைஇ ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் படமாக்கும்இ வெற்றிப் படமாக்கும் இயக்குநர்களும் தேவைப்பட்டார்கள். ரஜினியின் வழக்கமான படத்தைக் காட்டிலும் கூடுதலாகவும் எச்சரிக்கையாகவும் செய்ய வேண்டிய வேலை இது.
"சூப்பர் ஸ்டார்' அந்தஸ்தையும் கடந்து அரசியல் களத்திலும் அடர்த்தியாக விரிந்திருந்த அவரது சொல்வாக்கும் செல்வாக்கும்இ ரஜினி என்ற நடிகரை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கின. ரஜினி நேரடி அரசியலுக்கு வந்திருந்தால் எப்போதோ இந்த நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கலாம். அதுவும் செய்யாமல்இ அதே நேரத்தில் அரசியலில் அவருக்கிருந்த "இடத்தை'த் தொடர்ந்து தக்க வைத்திருக்க ஒரு நடிகனாகவும் நீடிக்க வேண்டிய கட்டாயத்தில் முன்னிலும் இறுக்கமான சூழலுக்குத் தள்ளப்பட்
டிருக்கிறார்.
96-க்குப் பிந்தைய தேர்தல் அனுபவங்கள் அவருக்குள் ஏற்படுத்திய பாதிப்பின் எதிரொலியாக இடைக்காலத்தில் மெüனம் காத்த ரஜினிஇ இந்தத் தேர்தலில் மீண்டும் வெளிப்படையாகக் குரல் கொடுக்க நேர்ந்திருப்பதற்கும் இப்படிப்பட்ட நெருக்கடிதான் மூல காரணம்.
"பாபா'வைக் கடுமையாக விமர்சித்ததற்காகப் பா.ம.க போட்டியிடும் 6 தொகுதிகளில் மட்டும் பாஜக - அதிமுக அணிக்கு ஆதரவளிப்பதாக உணர்ச்சி பொங்க அறிவித்த ரஜினிஇ அதற்குப் பிறகு அதே வேகத்தில் செயல்படத் தயக்கம் காட்டுகிறார்.
இந்தத் தொகுதிகளில் நேரடியாக ரஜினி பிரசாரம் செய்வார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகஇ ரஜினியின் வாய்ஸ் ஒலிக்கும் ஆடியோ கேஸட்டுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. தொகுதிக்கு 30இ000 கேஸட்டுகள் வீதம் 6 தொகுதிகளில் 1இ80இ000 கேஸட்டுகள் வழியாக ரஜினியின் குரல் ஒலிப்பதில்தான் ரசிகர்கள் ஆறுதல் தேட வேண்டும் போலிருக்கிறது.
ரஜினி ரசிகர் மன்றத் தலைமைப் பொறுப்பாளர் சத்யநாராயணாகூடஇ "தேவைப்பட்டால் பிரசாரத்துக்குப் போவது பற்றி யோசிப்பேன்' என்று சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும்இ "இதோ... தலைவர் புறப்பட்டுவிட்டார்...' என்று ரசிகர்கள் எழுச்சியுடன் கிளம்பும்போது சற்றே தள்ளிப்போய் மறுபடியும் புறப்பட்ட புள்ளிக்கே "தலைவர்' வந்து நிற்பது போல அவர்களுக்குப் படுகிறது.
இந்த முறையும் அப்படியொரு உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் புதிய பட அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறார். உண்மையில்இ தேர்தல் முடிந்து மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு ஒரு மாதம் கழித்துதான் அதாவது ஜூலையில்தான் ரஜினி புதுப் படத்துக்கு அதிகாரப்பூர்வமாகப் பூஜை போடப்போகிறார். என்றாலும் வாக்குப்பதிவு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே "ஜக்குபாய்' அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
வழக்கம்போல முதல் அறிவிப்பிலேயே ரஜினியின் "கெட்-அப்' வித்தியாசமாக இருக்கிறது. ஒரு தீவிரவாதியைத் தெய்வீக அன்னை நெறிப்படுத்துவதுதான் கதை என்றும்இ நதிநீர்ப் பிரச்சினையை மையப்படுத்தும் விதத்தில் இரண்டு ஊர்களுக்கிடையிலான தண்ணீர்ச் சண்டையில் ரஜினி போராடி நீர் பெற்றுத் தருவதுதான் கதை என்றும் நாள்தோறும் புதுப்புதுக் "கதைகள்' வெளியாகி வருகின்றன.
படம் வெளியாவதற்குள் மீடியாவில் இதுபோன்று ஏகப்பட்ட "கதை'கள் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு படத்துக்கு இத்தனை பேர் "கதை பண்ணுவது' தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.
"முத்து'இ "படையப்பா' போல இந்தப் படத்திலும் அரசியல் இருக்கும்... ஆனால் அரசியல் படம் இல்லை என்கிறார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.
அதென்ன அரசியல்..?
""எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா எப்ப வரணுமோ அப்ப கரெக்டா வருவேன்'' என்ற ரஜினியின் பஞ்ச் வசனத்தை (முத்து) மறுபடியும் நினைவுபடுத்திக்கொண்டுஇ ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கூடவே அரசியல் கட்சிகளின் தலைவர்களும்.
ரசிகர்களை இன்னும்கூட காத்திருக்க வைக்கலாம். அவர்களும் தயாராக இருக்கலாம்.
தலைவர்களை..? சினிமா அரசியலுக்குத் தள்ளியது. அரசியல் மீண்டும் சினிமாவுக்குத் தள்ளுகிறது.
கரெக்டா ரஜினி சார்..?
நன்றி : தினமணி