Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகவல்லரசுளுக்கு எச்சரிக்கை !?
#10
<b>கார்த்திகைப்புூ உணர்த்திய உண்மைகள்</b>
-யாழிலிருந்து குரு-


ஆம், தமிழரின் தேசிய மலர் தொடர்பாக சென்ற ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவித்து விட்டார்கள். இது தொடர்பாக தமிழ்நெற்றில் 14-04-2004 (1:10 சர்வதேச நேரம்) விசேட கட்டுரை வந்தவுடன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி ரைம்ஸ் ஒப் இன்டியா 15 ஆம் திகதியும் (உள்ளுர் நேரப்படி 7:12 பிற்பகல்), அதனைத்தொடர்ந்து பி.பி.சி உலக சேவை 16 ஆம் திகதியும் (10:44 சர்வதேச நேரம்) அதனைத்தொடர்ந்து 16 ஆம் திகதியே வாஷிங்ரன் ரைம்ஸ் பத்திரிகையும் கார்த்திகைப்புூ தொடர்பாக செய்;தியும,; அது தொடர்பான விமர்சனங்களையும் வெளியிட்டன.

தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மீது சேற்றை வாரி இறைத்தே இந்த மூன்று செய்தி நிறுவனங்களும் தங்களுடைய வாசகர்களுக்கு கருத்தினை தெரிவித்து இருக்கின்றன. விடுதலைப் புலிகள் சென்ற வருடமே கார்த்திகைப்புூவை தேசிய மலராக அறிவித்ததும், அது தொடர்பாக உள்ளுர் பத்திரிகையில் கட்டுரைகள் வந்ததும், கார்த்திகைப்புூ தமிழர்களுக்கு ஒன்றும் புதிய புூ இல்லை என்பதும், தமிழர் வாழ்வில் நன்கு அறியப்பட்ட பூ என்பதையும், கார்த்திகைப்புூ தேசிய மலராக அறிவிக்கப்பட்ட பின்பு தான் இலங்கை அரசியலில் தேர்தல் வந்தது, அதில் தமிழ் மக்களின் 90 வீத வாக்குகளைப்பெற்று விடுதலைப் புலிகளை தலைமையாக ஏற்ற தமிழரசுக்கட்சி 22 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றம் சென்றதையும் இச் செய்தி நிறுவனங்கள் மறந்துவிட்டார்கள்.

ஆக, இந்த செய்தி மூலம் தமிழர்களுக்கு எந்தக்கருத்தையும் இந்த செய்தி நிறுவனங்களோ அல்லது அதனோடு சார்ந்தவர்களோ தெரிவிக்கவில்லை. இவ்வாறு இருக்க ஏன் இந்த செய்தியை பிரசுரித்தார்கள் என்று சாதாரணமாக எல்லோர் மனதிலும் எழும் கேள்வியாகும். ஈராக் நோக்கி அமெரிக்கா யுத்தத்தை ஆரம்பிக்க முன்பு போட்ட நாடகம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அதாவது இரசாயன ஆயுதம், அது, இது என்று சொல்லி சும்மா இருந்த சதாமையும் துரத்தி துரத்தி அடித்து ஈராக்கிய மக்களின் வாழ்வை நாசமாக்கியவர்கள், நாசமாக்கி கொண்டிருப்பவர்கள் அதுமட்டுமல்ல இவர்கள் கை போடாத அரசாங்கங்கள்; உலகில் இல்லை எனலாம்.

ஆனால், இவற்றில் உள்ள புதிய விடயம் என்னவெனில் இந்த முறை இந்தியாவையும் தங்கள் கூட்டில் இணைத்துக் கொண்டுள்ளார்கள். இவர்கள் எல்லோரும் போருக்காக பயன்படுத்தும் பணம் அவர்கள் பரம்பரையாகச் சேர்த்துவைத்த பணமல்ல. அந்தந்த நாட்டு மக்கள் வேர்வை சிந்தி உழைக்கும் போது அறவிடப்படும் வரிப்பணமே. ஆகவே, தமது நாட்டு மக்களுக்கு கணக்கு சொல்லியே ஆகவேண்டும். அதாவது தாங்கள் செய்யப்போகும் ஒரு செயலுக்காக இப்போதிருந்தே தமது மக்களை தயார்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.

இதனால் தான் தாங்கள் செய்யும் யுத்தம் எல்லாவற்றையும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று பிரகடனப்படுத்தி, தமது மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதாக கூறிக்கொள்கிறார்கள். நாளுக்கு நாள் இவர்களே பயங்கரவாதிகளை உருவாக்கியும் அதன் பயங்கரத்தால் நிம்மதி இழந்தும் தவிக்கிறார்கள் என்ற உண்மை இவர்களுக்கு புரியவா போகின்றது ?

அப்படியானால் உண்மையாகவே இந்த இந்திய, பிரித்தானிய, அமெரிக்க கூட்டுப்படை தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை செய்யப் போகின்றனவா?

இந்தியா ஏற்கனவே சூடு கண்ட புூனை. ஆகவே, இந்தியா நேரடியாக தலையிடாமல் விடலாம், ஆனால் பல ஆண்டுகளாக தமிழருக்கு எதிராக இயங்கியதையை மறைக்க முடியாது. அவற்றில் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 மூத்த புலிகளை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைக்க முனைந்த போது அவர்கள் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டமையும், பிரதித்தலைவர் மாத்தையாவை தலைமைத்துவத்திற்கு எதிராக மாற்றியமையும், கேணல் கிட்டுவை கப்பலோடு கைது செய்ய முயற்சித்த போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டதும், சமாதான காலத்தில் புலிகளின் இரண்டு சரக்கு கப்பலையும் அதிலிருந்த வீரர்கள் மூழ்கடிக்க உதவியமையும், கருணா விடயத்தில் அதிக ஆர்வம் காட்டி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு குது}கலித்தவர்கள் தான் இந்திய அரசும் அதனோடு சேர்ந்த புலனாய்வுப் பிரிவினரான றோ அமைப்பும் என்பதை தமிழருக்கு நினைவில் இல்லாமல் இல்லை. அது மட்டுமல்ல கண்ணிவெடி அகற்றுவதற்காக இந்திய இராணுவத்தின் கண்ணிவெடியகற்றும் பிரிவினர் வவுனியாவில் வந்து நிலைகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா இதுவரை பெரியளவில் முயற்சிகள் எதுவும் செய்ததாக இல்லை. இருப்பினும், இவர்கள் அமெரிக்காவின் மூதாதையர் என்பது உலகறிந்த உண்மை. அப்படியானால் அமெரிக்கா முயற்சி செய்ததா? இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில் முன்னைய காலங்களில் இலங்கை இராணுவத்திற்காக களத்தில் நின்று கூட வேலை செய்தவர்கள், கோடி கோடியாக பொருள் உதவி செய்தவர்கள், சமாதான காலத்திலும் கூட பல பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தவர்கள், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்ததைக்கு புலிகள் வரவேண்டும் என்று மிரட்டியவர்கள், பேச்சுக்கு வந்திருந்தால், வட-கிழக்குக்கு அதிக தொகையைத் தந்திருப்போம் என்று ஆசை காட்டியவர்கள், கருணாவுக்காக வக்காலத்து வாங்கியவர்கள் என்பதோடு கருணாவின் எண்ணத்திற்கு வித்திட்டவர்கள் என்று சொல்லப்பட்டது. (இதனை மறுத்து இலங்கைக்கான அமெரிக்க து}தர் அறிக்கை வெளியிட்டிருந்தார்)

இவை எல்லாம் நேரடியாக செய்ததாக எல்லோரும் அறிந்திருந்தாலும் மறைமுகமாக நம்மவர்களைக்கொண்டு செய்த பல காரியங்கள் உண்டு அவற்றையும் விரைவில் புரிந்து கொள்வீர்கள். ஆக மொத்தம் இதுவரை பல கருமங்கள் செய்தாகிவிட்டது. அவற்றை இப்போது சிலவற்றை நேரடியாக பார்க்க கூடியதாகவும் உள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு 20 இராணுவ வைத்தியர்களும் 10 உதவியாளருமாக 30 பேர் இரண்டு கிழமை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து 200 நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய உறுதி அளித்துள்ளார்கள். அதுமட்டுமல்ல அங்கிருந்து கொண்டுவந்த அனைத்து பொருட்களையும் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்போவதாகவும் உறுதியளித்துள்ளார்கள். (திரும்பிப்போகும் போது தான் சென்று பார்க்க வேண்டும் போதனா வைத்தியசாலையிலா அல்லது இராணுவ வைத்தியசாலையிலா விட்டுச்சென்றார்கள் என்று) இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சுகாதார அமைச்சால் நியமிக்கப்படும் புதிதாக வெளியேறிய யாழ். மருத்துவர்கள் 39 பேருக்குரிய வெற்றிடம் யாழ்ப்பாணத்தில் இருந்தும் 18 பேருக்கு மட்டுமே இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதற்கு கூறப்பட்ட காரணம் தெற்கில் வைத்தியர் போதைமை என்பதாகும்.

இந்த இராணுவ வைத்தியர்களின் வருகை தொடர்பாக ஏற்கனவே வருகை தந்த அமெரிக்க து}துவரால்; மாசி மாதத்திலேயே வைத்தியசாலை வட்டாரங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவ வைத்தியர்கள் திட்டமிட்டபடி யாழ்ப்பாணம் வந்துள்ளனர். அப்படியானால் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அமெரிக்காவின் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. ஆக அமெரிக்காவையும், தமிழர்களைப் பொறுத்தவரையும் இலங்கையின் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் ஒரே கொள்கையே கொண்டிருந்தன என்பதும் வெளிப்படையாகின்றது. அப்படியானால் புதிதாக செல்வாக்கு செலுத்துகின்ற Nஐ.வி.பிக்கு இந்த விடயம் தெரியுமா? ஆம் என்றே சொல்லவேண்டும் ஏனெனில் அம்மையார் நோர்வேயை மீண்டும் பேச்சுக்கு அழைக்கும் போது இதுவரை காலமும் நோர்வேக்கு எதிராக துள்ளிக் குதித்தவர்கள் அடக்கமாக நின்று வரவேற்கும் போதே விளங்குகின்றது. அவர்களுக்கும் இந்த சம்பவங்கள் தெரியும் என்பது.

இந்திய, பிரித்தானிய, அமெரிக்க கூட்டு, தமிழர் பிரச்சனையை ஈராக்கைப்போல் கையாளுமா? அல்லது இஸ்ரேலுடன் நின்று பலஸ்தீனத்திற்கு எதிராக செயற்படுவது போல் இயங்குமா ? இல்லை எல்லாவற்றையும் விட புதிய முறை ஒன்றைக்கையாளுமா? எல்லாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த இடத்தில் ஈசாப் கதைகளில் ஒன்றான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற கதை நினைவுக்கு வருகின்றது.

நீரோடை ஒன்றின் மேற்பகுதியில் நின்று ஒரு ஓநாய் நீர் குடித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்து நீர் ஓடிவரும் கீழ்ப்பகுதியில் ஆட்டுக்குட்டி ஒன்று நீர் அருந்த வந்தது.

ஆட்டுக்குட்டியைப் பார்த்தவுடன், அதை அடித்துச்சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஓநாய்க்குத் தோன்றியது. ஆட்டுக்குட்டியைக் கொல்வதற்கு ஏதோ ஒரு காரணம் வேண்டுமே என்று ஓநாய் யோசித்தது. ஆட்டுக்குட்டியைப் பார்த்து 'தண்ணீரைக் கலக்கி; சேறாக்குகிறாயே, நான் எப்படி தண்ணீர் குடிப்பது?" என்று ஓநாய் கூச்சலிட்டது.

'நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் நிற்கின்ற பகுதியிலிருந்துதான் என்னை நோக்கி தண்ணீர் வருகின்றது. அப்படி இருக்கும்போது, நீங்கள் குடிக்கின்ற தண்ணீரை நான் எப்படி சேறாக்க முடியும்?" என்று பணிவுடன் கேட்டது ஆட்டுக்குட்டி.

அதற்கு ஓநாய் 'பல வருடங்களாக நான் உன்னைப் பார்த்துக் கொண்டே வருகின்றேன். நீ இப்படித்தான் என் விஷயத்தில் தலையிட்டுக் கொண்டிருக்கின்றாய்" என்றது.

ஆட்டுக்குட்டி பணிவான குரலில் சொன்னது 'நான் பிறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. நீங்கள் சொல்கிறபடி பல வருடங்கள் உங்கள் வி;ஷயத்தில் நான் எப்படித் தலையிட்டிருக்க முடியும்?"

'நீ இல்லாவிட்டால் உன்னுடைய அப்பா அப்படிச் செய்திருப்பார். அதனால், அந்தக் குற்றத்திலி;ருந்து நீ தப்பிக்கமுடியாது. உன்னோடு வாதம் செய்து பயன் இல்லை" என்று கூறிக்கொண்டே ஓநாய் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து.....

என்ன வாசகர்களே ஈசாப் கதை உங்களுக்குப் ஒன்றைப் புரிய வைத்திருக்கும், ஆனால் இப்போது ஆற்றில் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பது ஆடு அல்ல என்பது நரிக்கு புரிந்திருக்காது.

நன்றி: ஈழநாதம்
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-25-2004, 03:04 PM
[No subject] - by Mathan - 03-25-2004, 03:52 PM
[No subject] - by anpagam - 03-25-2004, 11:44 PM
[No subject] - by Mathan - 03-26-2004, 12:12 AM
[No subject] - by anpagam - 03-26-2004, 12:17 AM
[No subject] - by Mathan - 03-26-2004, 12:30 AM
[No subject] - by anpagam - 03-26-2004, 12:34 AM
[No subject] - by Mathan - 03-26-2004, 12:41 AM
[No subject] - by anpagam - 05-05-2004, 09:15 AM
[No subject] - by anpagam - 01-06-2005, 01:29 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)