05-02-2004, 03:25 AM
இது தொடர்பாக தினக்குரலில் வந்த கட்டுரை ஒன்றூ. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ,,,,,
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ.........
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று இலங்கை ஒலிபரப்புக் கூýட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் 'விடிýயும் வேளை" நிகழ்ச்சியில் அளித்த பேட்டிýயொன்றை நான் கேட்டேன்.
அமைச்சரை தொலைபேசி மூýலமாக பேட்டிý கண்டவரும் அடிýக்கடிý 'அமைச்சரவையில் உள்ள ஒரே தமிழர் என்ற வகையில்" என்று தான் அடிýக்கடிý அவரிடம் கேள்விகள் கேட்டதையும் அந்த 'ஒரே தமிழர்" என்பதை ஏற்றுக் கொள்வதைப் போன்றே அவரும் பதில்களை அளித்ததையும் அவதானித்தேன்.
கதிர்காமர் என்று ஒருவர் அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பில் இருப்பதை தேவானந்தா தற்செயலாக அந்த விடிýயும் வேளையில் மறந்துவிட்டாரா அல்லது கதிர்காமரை தமிழர் என்று ஏற்றுக் கொள்ளவில்லையா என்று என் மனதுக்குள் ஒரு கேள்வி.
தேர்தல் முடிýவுகள் வெளியான பிறகு பத்திரிகையொன்றுக்கு பேட்டிýயளித்திருந்த கதிர்காமர், தேவானந்தாவுக்கு ஜனாதிபதி அமைச்சர் பதவி கொடுக்கும் சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்ததை இன்னமும் மனதில் வைத்துக் கொண்டு தேவானந்தா வன்மத்தைச் சாதித்தாரோ என்றும் எனக்கு ஒரு சந்தேகம்.
ஆனால், பின்னர் தான் பேட்டிý கொடுத்த பத்திரிகையாளரைக் கண்ட கதிர்காமர், நான் 'ஓப் த ரெக்கோட்" ஆகச் சொன்னதை நீங்கள் பிரசுரித்துவிட்டPர்களே என்று மனவருத்தப்பட்டதாகவும் அறிய வந்தது.
எது எப்படிýயோ, இலங்கையில்தான் கதிர்காமரால் இதயங்களை வெல்ல முடிýயாமல் இருக்கிறதே தவிர, இந்தியாவில் உள்ளவர்களின் இதயங்களை அவர் கொள்ளையேயடிýத்துவிட்டார் போங்கள்.
நேற்று முன்தினம் டிýல்லிக்குச் சென்றிருந்த கதிர்காமருக்கு என்ன வரவேற்பு, கட்டிýயணைப்பென்ன, கொஞ்சிக் குலாவலென்ன அசத்திவிட்டார். எங்கள் நாட்டான் அண்மைக் கால வெளியுறவு அமைச்சர்களில் டிýல்லிக்காரர்களின் அமோக அன்பைச் சம்பாதித்தவர் என்றால் அது கதிர்காமர் தான் என்பேன்.
இதைவிட, கதிர்காமர் டிýல்லியில் கூýறிய சில கருத்துக்களும் முன்னர் அவரிடம் இருந்த நிலைப்பாடுகளில் பலத்த மாற்றம் ஏற்பட்டிýருப்பதைப் புலப்படுத்துகின்றன.
விடுதலைப்புலிகளை கதிர்காமர் ஏகப் பிரதிநிதிகள் என்று ஒருபோதும் ஏற்றுக் கொண்டவரல்ல. ஆனால், இப்போது அவர் டிýல்லியில் வெளியிட்ட கருத்துக்கள் விடுதலைப்புலிகளை தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று அவர் கருதுவதற்குத் தயாராகிவிட்டார் என்று உய்த்துணரக் கூýடிýயதாக இருக்கின்றன.
டிýல்லியில் கதிர்காமரைச் சந்தித்த பிரபல பத்திரிகையாளர் வெங்கட் நாராயண், 'உங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வருவதானால் தங்களையே தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று முன்நிபந்தனை விதித்திருக்கிறார்களே" என்று கேட்டார். 'முன்னைய அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தபோது, பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்த இரு பிரதான தரப்பினர் அரசாங்கமும் விடுதலைப்புலிகளுமே. இரு வருடங்களுக்கு முன்னர் என்ன விதமாக சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டனவோ அதே மாதிரி எமது அரசாங்கமும் ஆரம்பிக்கும். நாம் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும்போது மேசையில் அமரும் இரு பிரதான தரப்பினர் அரசும் புலிகளுமே. எமது அரசு கூýட விடுதலைப்புலிகளை தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொள்கிறது என்பது தானே இதன் அர்த்தம்" என்று கதிர்காமர் பதில் அளித்திருக்கிறார்.
அது மாத்திரமல்ல, கடந்த அக்டோபரில் புலிகள் முன்வைத்த இடைக்கால நிருவாக சபை யோசனைகள் நிச்சயமாக பேச்சுவார்த்தைகளில் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்றும் கதிர்காமர் கூýறியிருக்கிறார்.
கடந்த வருடம் புலிகளின் இந்த யோசனைகளை கடுமையாக எதிர்த்து அம்மையார் தரப்பின் கருத்துக்களை உலகுக்கு எடுத்தியம்பிய கதிர்காமரா இன்று இப்படிýயெல்லாம் பேசுகிறார் என்று நம்ப முடிýயாமல் இருக்கிறதா? என்ன செய்வது நம்ப வேண்டிýயதுதான் நம் விதி.
எனக்கு ஆச்சரியமாக இருப்பதென்னவென்றால், விடிýயும் வேளையில் அமைச்சரவையில் இருக்கும் ஒரே தமிழர் என்ற பாணியில் கருத்துக்களைச் சொன்ன அமைச்சர் தேவானந்தா கூýட இப்படிýப் பேசுவாரோ என்பதுதான் என்ன இருந்தாலும் கதிர்காமர் அசத்திவிட்டார் போங்கள்.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நலன்கள் தான் இருக்கின்றன என்று ஹென்றி கீஸிங்கர் எங்கோ பேசியதாக முன்னர் ஒரு தடவை வாசித்த ஞாபகம்.
உண்மையிலேயே, நிரந்தர நலன்களைப் பேனுவதற்காகத் தான் கதிர்காமர் மனதில் மாற்றங்களைச் செய்திருக்கிறாரோ? தவிர்க்க முடிýயாமல் எழுகிறது இக் கேள்வி. அமைச்சர் தேவானந்தாவும் இதைச் சற்றுக் கவனிப்பது நல்லது.
அது போகட்டும், கதிர்காமரின் மனமாற்றம் ஒரு சினிமாப் பாடலை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
மாறியது நெஞ்சம்..... மாற்றியவர் யாரோ..... காரிகையின் உள்ளம் காண வருவாரோ.......

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>