Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் கேட்டவை
#8
காதல் தோல்விப் பாடலைக் கெட்டிருக்கிறோம்,கதாநாயகன் தாய் இறந்த துயரில் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்களைக் கேட்டிருக்கிறோம் இன்னும் நண்பர் பிரிவு ,உறவுகளினால் ஏமாற்றம் என்று பலவகையான சோகப்பாடல்களைக் கேட்டிருக்கின்றோம்

பொதுவாக சோகப்பாடல்கள் அர்த்தம் நிறைந்தவை என்பது பலரது கருத்து தத்துவப்பாடல்கள் என்று கூடச் சொல்லலாம் ஏனெனில் மனிதனுக்குக் கவலை மேலிடும் போதுதான் தத்துவ விசாரம் வருகின்ரது

பிரிவுத் துயர் கூறும் பாடல்கள் வரிசையில் மகளைப் பிரிந்த சோகத்தில் தந்தை பாடும் பாடல் உங்களுக்காக "நீங்கள் கேட்டவை"யில்

அவள் பறந்து போனாளே என்னை மறந் து போனாளே
படம் - பார் மகளே பார்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர்கள் - டி.எம். செளந்தரராஜன் - பி.பி. சிறீநிவாஸ்
பாடல் - கண்ணதாசன்

டி.எம் எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே
\" \"
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 04-14-2004, 06:55 PM
[No subject] - by Eelavan - 04-15-2004, 05:31 PM
[No subject] - by sOliyAn - 04-15-2004, 10:39 PM
[No subject] - by Mathan - 04-15-2004, 11:17 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:47 PM
[No subject] - by Eelavan - 04-18-2004, 12:49 PM
[No subject] - by Eelavan - 04-30-2004, 02:02 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:47 AM
[No subject] - by Eelavan - 05-03-2004, 05:56 AM
[No subject] - by Eelavan - 05-18-2004, 08:35 PM
[No subject] - by Mathan - 05-18-2004, 09:56 PM
[No subject] - by Eelavan - 05-18-2004, 09:59 PM
[No subject] - by shanmuhi - 05-18-2004, 11:00 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 12:11 AM
[No subject] - by Eelavan - 05-20-2004, 08:01 AM
[No subject] - by shanmuhi - 05-20-2004, 09:26 AM
[No subject] - by Eelavan - 05-22-2004, 05:18 AM
[No subject] - by shanmuhi - 05-22-2004, 05:42 PM
[No subject] - by Eelavan - 05-24-2004, 06:31 AM
[No subject] - by Eelavan - 05-26-2004, 03:13 PM
[No subject] - by shanmuhi - 05-26-2004, 09:04 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 03:03 PM
[No subject] - by vasisutha - 06-02-2004, 02:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)