04-28-2004, 05:38 PM
டக்ளஸ் தேவானந்தா வட பிரதேச நலன்கள் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக்கப்பட்டுள்ளதையிட்டுத் தமிழரசுக் கட்சி (தமிழர் தேசிய முன்னணி?) சார்பாகக் கடுமையான, விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா வடபிரதேச மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பதால் அவரைத் தமிழ் மக்களது நலன் சார்ந்த விடயங்களுக்கு அமைச்சராக்கியது அரசாங்கத்தின் நல்லெண்ணம் பற்றிய ஐயங்களை எழுப்பியுள்ளது என்பது அவர்களது வாதம். மக்களால் என்றுமே தெரியப்படாதவரும். <b>நிச்சயமாகத் தமிழ் மக்களால் என்றென்றைக்குமே நிராகரிக்கப்படக்கூடி ய வருமான லடீ;மன் கதிர்காமர் அயல் விவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டது தமிழ் மக்களின் நலன்கட்கு மேலும் கெடுதலாயிருந்திராதா?</b>
அமைச்சர் கதிர்காமரது கனவு நனவாகி அவர் முதலமைச்சராகியிருந்தால் அது பற்றித் தமிழ்த் தலைவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? <b>டக்ளஸ் தேவானந்த பற்றிய கவலைக்குக் காரணம், அவரால் அமைதி குலையும் என்பதோ தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் நலிவடையும் என்பதோ அல்ல. அவர் தனது பதவியைப் பாவித்து வடக்கில் ஒரு வாக்கு வங்கியைக் கட்டியெழுப்பி அடுத்த தேர்தலில் சற்று அதிகளவில் பாராளுமன்ற ஆசனங்களைப் பிடி க்க இயலுமாயிருக்கும் என்பதே வன்மையான காரணம் என்று நினைக்கிறேன்.</b>
மக்களால் தெரிவு செய்யப்படாமல் பழைய பாராளுமன்ற அமைப்பின் மூதவை உறுப்பினராக நியமனம் பெற்று, 1960 முதல் 1964 வரை }மாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்து நாட்டைப் பாலித்தார். அவர், ஒரு வேளை அல்ல, நிச்சயமாகவே தேர்தலில் நின்று வென்றிருக்கலாம். எனினும், அவர் அதைச் செய்யவில்லை. இம்மாதிரி விடயங்கள் இப்போது இங்கும் இன்னும் பல நாடுகளிலும் வழமையாகிவிட்டன. <b>அவை கண்டி க்கப்பட வேண்டும் என்பது உண்மையில் நியாயமானதே. ஆனாலும் கண்டிக்கிறவர்களுக்கு ஒரு யோக்கியம் வேண்டாமா?</b>
<b>இம்முறை மக்களால் நிராகரிக்கப்பட்ட இரு வேட்பாளர்கள் தேசியப் பட்டி யலில் இடம்பெறுவதற்கு வசதி செய்த ஒரு கூட்டமைப்பால் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படாத ஒருவர் அமைச்சரானதை நேர்மையாக விமர்சிக்க முடி யுமா?</b> வட்டுக்கோட்டைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு 1978 இல் எதிர்பாராதவிதமாக இறந்த பின்பு, அத் தொகுதியுடனோ யாழ்ப்பாண மக்களுடனோ எது விதமான உறவும் இல்லாத நீலன் திருச்செல்வம் நியமிக்கப்பட்டதற்கு என்ன ஜனநாயக அடிப்படை உண்டு என்று தெரியவில்லை. தமிழ் மக்களின் தலைமையின் அரசியல், ஒரு நூற்றாண்டு காலமாகவே தரகு வேலை அரசியலாகவே இருந்து வந்துள்ளது. மக்கள் தலைவர்களை நம்புகிறார்கள். தலைவர்கள் தரகர்களாக இல்லாதபோது தரகர்களை நியமித்து வேலைகளைச் செய்ய முயல்கிறார்கள்.
1965 ஆம் ஆண்டு ய10.என்.பி. யுடன் கூட்டாட்சி அமைக்கிறதற்கு மக்கள் ஆணையைப் பெறாமலே அமைச்சரவையில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சித்தலைமை மக்களின் ஆணை இல்லாமையையே ஒரு வசதியாக்கி மக்களால், தெரிவு செய்யப்படாத ஒருவரான மு.திருச்செல்வத்தை அமைச்சராக்கியது. இதன் மூ லம் எதையுமே தமிழ் மக்களுக்காக வென்றெடுக்க இயலாது போன அக்கட்சி 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கணிசமான சரிவைச் சந்தித்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரான அ.அமிர்தலிங்கம் இளைஞர்களது விரக்தியைப் பயன்படுத்தித் தன்னையே தலைவராக்குமளவுக்கு உயர்த்திக் கொண்டது இன்னொரு கதை.
மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரான செ.இராசதுரையை ஓரங்கட்டுவதற்காக காசி ஆனந்தனை மாற்று வேட்பாளராக நிறுத்தி அவருக்கு ஆதரவாக அமிர்தலிங்கம் தலைமை செயற்பட்டதற்கு, அண்மையில் 'கருணா அம்மான்" யாழ்.மட்டக்களப்பு முரண்பாட்டை விளக்கமாக முன்வைத்தார். உண்மை அதுவல்ல. ராஜதுரை யாழ்ப்பாணத்தில் அரசியலில் இருந்திருந்தாலும் அவருக்கு அதுவே நடந்திருக்கும். சந்திரகாசனும், குமார் பொன்னம்பலமும் ஓரங்கட்டப்பட்ட காரணம் அதிகம் வேறுபட்டதல்ல.
<b>தமிழ் மக்களைப் பொறுத்தவரை எந்தவொரு தமிழ் அமைச்சரும் தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காக நியமிக்கப்பட்டதில்லை. இது பிற சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்பாகவும் உண்மையே.</b> எனினும், சிலர் தமது அரசியல் தளங்களைக் கட்டியெழுப்புவதற்காகத் தங்கள் அதிகாரத்தைப் பாவிக்கும் போது மக்களுக்கும் சிறிது நன்மை கிட்டுகிறது. ஆனால், இது மக்களுக்கு உரிய பங்கினும் குறைவானது என்பது போக எந்தத் தனிமனிரதும் தயவினால் கிடைப்பதல்ல. மக்களிடமிருந்து கவரப்பட்டதைத் தங்களது வல்லமைக்குச்சான்றாக வாரி வழங்குவது தான் அரசாங்க அமைச்சர்கள் ஆடும் நாடகம்.
கடந்த அரை நூற்றாண்டுக் கால அரசியலில் கண் முன்னாலேயே காடைத்தனமும் ஊழலும் பச்சையான மிரட்டலும் சில சமயங்களில் படுகொலைகளும் எப்போதும் வன்முறையுமாக இந்த நாட்டி ன் ஒவ்வொரு மூலையிலும் அரசியல் உருமாறியிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல்களுக்காகிற செலவு எவ்வளவு? ஒவ்வொரு அரசியல்வாதியும் செலவிடும் பல இலட்சங்களையும் கோடி களையும் யார் தருகிறார்கள்? இதைப் பற்றி மக்கள் அறியாமலில்லை. ஆனாலும், யாராலும் தட்டிக் கேட்க இயலாதளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிலைமை தென்னிலங்கையினதினும் சிறிது வேறுபட்டது. தாங்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை என்று தமிழ்ப் பாராளுமன்றத் தலைவர்கள் பெருமை பேசலாம். எனினும், இதுவரை துரையப்பாவின் கொலை, முதலாகப் பல்வேறு அரசியல் கொலைகளைக் கண்டி க்க மறுத்து வந்த ஒரு அரசியல் தலைமை, வசதியான போது தனது தலைவர்களது கொலைகளைப் பற்றிக் கண்ணீர் வடிக்கிறது. 'சிங்கள இரத்தம் குடி ப்பேன்" என்று சூளுரைத்து மேடையில் முழங்கி தமிழ்த் துரோகிகளுக்கு இயற்கையான சாவு நிகழக்கூ டாது என்று பிரகடனம் செய்த ஒரு பாரம்பரியம், அதே துரோகிப் பட்டமும் இயற்கை சாராத சாவும் தனக்கு நிகழக் கண்டது.
நாளை, அரசாங்கத்தில் பதவி ஏற்கலாம் என்று ஆணை கிடைத்தால் நமது இருபத்திரண்டு பாராளுமன்ற நாற்காலிக்காரர்களும் ஆளை ஆள் முந்தித் தமக்குள் மோதிக் கொள்வார்கள் என்பது என் நியாயமான ஊகம்.
<b>தன் முதுகு தனக்குத் தெரியாது என்பார்கள். அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தங்கள் உள்ளங் கைகளே அவர்களுக்குத் தெரியாது.</b>
ஜனாதிபதியின் எந்த நடவடிக்கையும் பற்றி நாம் ஐயத்துடனேயே நோக்க வேண்டி யுள்ளது. ஆனால், யாரை எதற்கு அமைச்சராக்குவது என்பது அவரதும், அவரது அணியினதும் உள் விவகாரம். இன்னாரை நியமிக்கலாம், இன்னாரை நியமிக்கலாகாது என்று ஆலோசனையோ ஆணையோ பிறப்பிக்கும் அதிகாரம் மாற்றுக் கட்சி எதற்குமே இல்லை. மகேஸ்வரன் அமைச்சரான போது வாய் மூடி யிருந்தவர்கள், ஏன் டக்ளஸ் தேவானந்த பற்றி அலறவேண்டும்?
தமிழ் மக்களைப் பொறுத்தவரை, யார் அமைச்சராவதாலும் அவர்களது நிலைமை மாறப் போவதில்லை. அதை யாராலும் அவர்களுக்காக மாற்றவும் இயலாது. பெரும்பான்மையின் பேரிலான சண்டியர்களின் சர்வாதிகாரத்துக்கு ஜனநாயகம் என்று பேர் சூ ட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுபடாமல் எவருக்கும் விடுதலையோ, விமோசனமோ இல்லை.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>