04-26-2004, 12:36 PM
<b>மட்டக்களப்பில் 7 விடுதலைப் புலிகள் வீரச்சாவு </b>
( மட்டக்களப்பிலிருந்து தேனுராள் திங்கட்கிழமை, 26 ஏப்பிரல் 2004, 17:54 ஈழம் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதான வீதியில் வவுணதீவு படைமுகாமிலிருந்து 8 கிலோமீட்டர் து}ரத்தில் உள்ள முன்ளாமுனை புலிகளின் வேளான்மை பண்ணையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.
இந்த முகாமில் தங்கியிருந்த உடல் ஊனமுற்றவர்களே இத்தாக்குதலின் போது வீரமரணமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
கால்களை இழந்த நிலையில் அங்கிருந்த கப்டன் சிசில்குமார் மற்றும் வாமகாந்த், இரண்டு கண்களையும் இழந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த லெப். வினோதன், ஒரு காலை இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2வது லெப். தாரணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
இச்சம்பவத்தின் காரணமாக இந்த முகாமிலிருந்து 10 உழவு இயந்திரங்களும், 3 மோட்டார் சைக்கிள்களும் உழவு அடிக்கும் இயந்திரம் மற்றும் அருவி வெட்டும் இயந்திரம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இச்சம்பவத்தைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர், ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலை அமைந்துள்ள முள்ளாமுனை என்ற இடத்தில் உள்ள புலிகளின் காவல்நிலை மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் வீரச்சாவு அடைந்திருக்கின்றார்கள்
கப்டன் தியானேஸ்வரன் என்றழைக்கப்படும் நடராஐh சுரேஷ் (சவுக்கடி), லெப். தனுசன் என்றழைக்கப்படும் செல்லத்துரை யசிகரன் (மாவடிச்சேனை), 2வது லெப். செல்வவீரன் என்றழைக்கப்படும் சேதுநாதபிள்ளை பிரதீபன் (சித்தாண்டி) ஆகியோர் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கருத்து தெரிவிக்கையில், சிறிலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதாகவும், அரச படையினரோடு இணைந்து செயற்படும் தேசவிரோத சக்திகளே, இவ்விரு சம்பவங்களுக்கும் பொறுப்பு என்றும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுணதீவு ஊடாக வந்து தாக்குதலை நடத்திவிட்டு வவுணதீவு ஊடாகவே இக்குழுவினர் தப்பிச் சென்றதாக இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும், ஆகவே இச்சம்பவத்திற்கு இராணுவத்தினரின் அனுசரணை இருந்ததை தாங்கள் உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதுடன், இச்சம்பவங்கள் தொடர்பாக இராணுவத்தினருடன் சந்தித்து நேரடியாக கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலை சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு பிரதிநிதிகள் தாக்குதல் நடைபெற்ற முள்ளாமுனை வேளாண் பண்ணை புலிகள் முகாமிற்கு சென்று சம்பவத்தின் பாதிப்புக்களை நேரடியாகக் கண்டறிந்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது வீரச்சாவு அடைந்த 7 விடுதலைப் புலிகளினது வித்துடல்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு இன்று மாலை எடுத்துச் செல்லப்பட்டன. நாளை பிற்பகல் 4 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவர்களது வித்துடல்கள் அடக்கம் செய்யப்படவிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
புதினம்.