04-26-2004, 08:54 AM
ஏனப்பா இப்பவும் டைனசோர் காலத்திலை நிக்கிறியள். கருணா என்ற மனிதர் வரலாறிப்பேய் இப்ப கிழமைக்கணக்காகுது. இஞ்சையிருந்து கொண்டு அங்கத்தை நிலைமைக்கு கனபோர் முடிவு சொல்லினம். ஒரு பத்திரியைகளாரள் எதிர் கருத்து சொன்னா அதை நம்புவினம், ஆரும் ஆதரவான உண்மையை கதைத்தால் பொய் என்டு சொல்லுவினம். அது ஒரு அரசியல்வாதியின் நிலைப்பாடு. முந்தி ஒருகாலத்தில் அடிபட்டு குத்துப்பட்ட இயக்கங்களே இண்iடைக்கு தேசிய தலைவமையின் கீழ் ஒண்டு படுகினம். மறப்போம் மன்னிப்போம் என்று அவர்கள் முன் வந்தது வெறும் அரசியல் லாபத்திற்காக அல்ல மாறாக இன்று தமிழ் தேசியத்திற்கு விடிவு கிடைக்கும் ஒரு காலமாக அவர்கள் கருதுகிறார்கள். இன்று பலமாக இருக்கும் தமிழ் தேசிய இனம் புலிகள் என்ற சக்தி அழிக்கப்பட்டால் என்ன நிலை உருவாகும் என்பதை நாம் சற்றே நிதானித்து நோக்க வேண்டும். கருணா என்ற மனிதனின் செயற்பாடு தனது பிராந்திய நலனுக்காக உடையவில்லை, மாறாக சிங்கள் பேரினவாத உந்தலினால் தமிழ் தேசியத்தை இல்லாதொழிக்க தயார் படுத்தப்பட்ட ஒரு தனி மனிதன். இன்று இந்த மனிதன் தென் இலங்கையில் இராணுவ பாதுகாப்புடன் நலமே இருக்கிறார். ஆனால் இந்த மனிதனின் நச்சுப்பற்கள் இனிமேல் தான் நமது தேசியத்தில் மிக மோசமாக பதிய இருக்கிறது. ஏற்கனவே அந்த கறைகளை பதித்த இந்த மனிதன் கிழக்கில் பிரதேசவாதம் என்ற ஒருநச்சை பரப்பி விட்டு சென்றிருக்கிறார். இயக்கங்கள் தேன்ற முன் இருந்த தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள் யாழ் மேலாhதிக்கத்தை எடுத்தியம்பியது உண்மைதான். ஆனால் இவை ஆயுதப் போரட்ட வளர்ச்சி இதை தவிடுபொடியாக்கி ஒரு பிராந்திய நலனாக இல்லாது இன்று தமிழ் தேசியம் என்னும் குடைக்குள் அனைவரையும் கொண்டுவந்துள்ளது. பிரதேச வாதம் முற்றாக செத்துவிட்டது என்று கூறவில்லை, ஆனால் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகளில் இந்த பிரச்சனை இருக்கவில்லை. ஆனால் இந்த தேசிய விடுதலை இயக்கங்கள் என்று கூட்டணி போன்ற கட்சிகளுடன் வேலை செய்ய வெளிக்கிட்டதோ அன்று முதல் இது மெதுவாக மீண்டும் விதைக்கப்பட்டது. கிழக்கில் இது நன்கே விதைக்கப்பட்டதன் விழைவுதான் கருணாவின் பிரச்சனை. கருணா தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறைக்க பாவித்த ஒரு ஆயுதம் இந்த பிரதேச வாதம். இதை இங்கையிருந்து கொண்டு அதை பூதாகரமாக்கி புலிகளை நலிவடைய செய்வதே பலரின் நோக்கம். கருணாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் வெறும் பிரதேசவாதியாக இருப்பதுடன் தமிழ் தேசிய விடுதலையை எதிர்க்கும் ஒருவராகவும், அத்துடன் சிங்கள் மக்களுடன் இணைந்து வாழலாம் என்ற மண் குதிரையில் சவாரி செய்யும் ஒருவராக தான் இருக்க வேண்டும்.
சிங்கள பேரினவாதம் உறங்கவில்லை மாறாக விழித்தெழுந்துள்ளது என்பதற்கான ஒரு ஆதாரம் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள். இந்த தேர்தல் முடிவு சிங்கள் மக்களில் பெரும்பான்மையானவரின் உள்ளக்கிடக்கையை நன்கே தெரியப்படுத்தி உள்ளது. இதற்கு பின்னரும் நமது தேசியம் நலிவடைய வேண்டும் என்று கருதினால் நீங்கள் தமிழ் தேசியத்தின் விடுதலைபால் கொண்டுள்ள அக்கறை நன்கே புரியும்!!
சிங்கள பேரினவாதம் உறங்கவில்லை மாறாக விழித்தெழுந்துள்ளது என்பதற்கான ஒரு ஆதாரம் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள். இந்த தேர்தல் முடிவு சிங்கள் மக்களில் பெரும்பான்மையானவரின் உள்ளக்கிடக்கையை நன்கே தெரியப்படுத்தி உள்ளது. இதற்கு பின்னரும் நமது தேசியம் நலிவடைய வேண்டும் என்று கருதினால் நீங்கள் தமிழ் தேசியத்தின் விடுதலைபால் கொண்டுள்ள அக்கறை நன்கே புரியும்!!

